இப்படித்தான் நோகடிக்கிறதா ? முடியல டி!



முக்கோண மூக்கழகி
முல்லப்பூ பல்லழகி
முந்தான சிலையழகி
முரட்டு காள மாரழகி

மச்சான் மனச பாரேன்  - நான்
மருகி மருகி வாரேன்

மல்லிப்பூ வாங்கி வந்து - உன்
மனசுகுள்ள இடம் புடிக்க
மரிக்கொழுந்து வாங்கிந்து - உன்
மடியில இடம் புடிக்க
வெத்தல வாங்கி வந்து - உன்
வெக்கதில்ல இடம் புடிக்க

மச்சான் மனச பாரேன்  - நான்
மருகி மருகி வாரேன்

மார்கழி மாசமெல்லாம் மச்சான் நான் காயுரனே
மச்சினிய நினைச்சி நினைச்சி நெஞ்குள்ள நோவுரனே
காட்டுக்கு களையெடுக்க கன்னி நீ போகையிலே
துள்ளகிற புள்ள மானும் உன்ன கண்டு நானுதடி
முத்து முத்தா பூத்த உன் வேர்வை எல்லாம் 
காட்டு பூவுகெல்லாம் பனித்துளியா மாறுதடி

அன்பே உன்ன அடகாக்க அத்தமகன் காத்திரிகேன்
ஆமான்னு சொல்லிபுட்டா அப்படியே தூக்கிபோவேன்
காத்திருக்க காத்திருக்க வெள்ளிநர கூடுதடி 
மாமனுக்கு எப்போதுமே உன்வாசம் தேடுதடி


மச்சான் மனச பாரேன்  - நான்
மருகி மருகி வாரேன்






Photobucket உங்க கூட என்னையும் சேத்துகோங்க மக்கா :


|

  • Digg
  • Del.icio.us
  • StumbleUpon
  • Reddit
  • Twitter
  • RSS

1 Response to "இப்படித்தான் நோகடிக்கிறதா ? முடியல டி!"

  1. தர்மா says:

    புஷ்பவனம் குப்புசாமியே நேர்ல வந்து பாடற மாதிரி கிராம வாசம் தூக்கலா இருக்கு....

    கலக்றீங்க...

    tune போட்டாச்சா?

Post a Comment

உங்கள் கருத்துக்களை இங்கே கொட்டுங்கள் & தமிழில் தட்டச்சு செய்ய... இங்கே... செல்லுங்கள் ! (right click the link and select open in a new window)