திறந்து காட்டிய ஓசை செல்லா......

நேற்று கோவையில் வலைபதிவர் தொழிற்முனைவோர் கூட்டம் நடை பெற்றது அனைவரும் அறிந்ததே! அக்கூட்டத்திற்க்கு நானும் போயிருந்தேன் ! கூட்டம் காலையில் சரியாக 11:30 துவங்கும் என்று அறிவிக்கப்பட்டிருந்த நிலையிலும் .. நான் 10:15 க்கெல்லாம் ஆஜர் ஆகிவிட்டேன். பலரின் அறிமுகம் கிடைத்தது..

1) மரவளம் வளம் பற்றி எழுதும் திரு. வின்சென்ட் அவர்கள்

2) மூலிகைவளம் பற்றி எழுதும் திரு.குப்புசாமி அவர்கள்

3) காமடிட்டி மற்றும் தங்கம், வெள்ளி,பங்குசந்தை, மொக்கை பதிவெழுதும் வால்பையன் அவர்கள்

4) நச் என்று ஒரு வலைப்பூ நடத்தும் ஓசை செல்லாஅவர்கள்

5) தமிழ்மணத்தை நிறுவிய திரு.காசிலிங்கம் அவர்கள்

6) வேலைவாய்ப்பு கல்வி வலைஇதழ் நடத்தும் திரு.ரவி

6) திருவண்ணாமலையிலிருந்து வந்த நண்பர் ஜெய், சேலத்தில் இருந்து வந்த திரு.ராமலிங்கம் அவர்கள்.. இன்னும் பலரும் வந்திருந்தார்கள்..

சரி நம்ம விஷயத்துக்கு வருவோம்.. முதல் முறையாக ஓசை செல்லாவின் இரண்டாவது துணையாளின் (கீப்) தரிசனம் கிடைக்கப்பெற்றது.. சூப்பரு செல்லா சார்.. என்னா ஸ்டையிலு,என்னா ஸிலிம், லெதர் ஜாக்கெட் சூப்பரு இன்னும் கண்ணுகுள்ளேயே நிக்குது சாமி..

ஷர்க் அடிச்ச எபெக்டு இருக்கும் போதே செல்லா என்னிடம்.. அந்த கீப்புக்கு கம்பேணி குடுக்ச்சொல்ல. மனதுக்குள் ஆயிரம் மணியோசை.. முதலில் ஓசை செல்லாவோட கீப்னு ஒரு டிஸ்டென்ஸ் மெயின்டன் பண்ணினேன். போக போக கீப் நம்ம மடியிலே வந்து விழுந்திடுச்சு..

அப்புறம் மதியம்வரைக்கும் தொட்டு தழுவி.. போங்க இதுக்கு மேல சொல்ல கூச்சமா இருக்கு. இது மட்டுமா ?? என் தோள்ல தொங்கிகொண்டிருந்த செல்லாவின் கீப்பை செந்தழில் ரவி மத்தியானத்து மேல கொஞ்சம் வேலையிருக்குன்னு தட்டி பறிச்சிகிட்டார் .. என்ன பண்றது.. செல்லாவோட கீப் அப்படி..

சரின்னு மிதியம் சாப்பாடு செந்தழல் ரவி அவர்கள் ஸ்பாண்ஸர் பண்ண கோவை பிபுள் பார்க்கில் சாப்பாடு. அப்புறம் செல்லாவோட நண்பர் சஞ்ஜெய் அவர்களின் அலுவலகத்தில் மீட்டிங் ஆரம்பம் ஆயிற்று... அப்போது தான் ஓசை செல்லா அவர்களின் கீப்பை எல்லோர் முன்னிலையிலும் திறந்து காட்டினார்.... ச்

பின்பு அவர்கள் திறந்தை திறந்தபடி போட்டுவிட்டு மைக் பிடித்தார் செல்லா.. அடபாவிகளா திறந்தே கிடக்கேன்னு மனசு அலற வேற வழி இல்லாம. செல்லா அவர்கள் ஆற்றிய உரையை கேட்டு பயன் உற்றேன். பின்பு ரவி அவரிகள் எவ்வாறு வீட்டில் இருந்தபடி இணையம் மூலம் பணம் சம்பாரிக்கலாம் என்று ஆற்றிய உரையும் மிக பயன் உள்ளதாக அமைந்த்து.. ஆனால் திறந்தது திறந்த படியேத்தான் இருந்த்து..

பின்பு ஓசை செல்லா அவர்களின் நண்பர் திரு.சஞ்ஜெய் அபர்மெஷன் என்ற குறுந்தகடு பற்றியும் அதில் உள்ள விஷயங்கள் பற்றியும் பேசினார். மேலதிக தகவல்களுக்கு ஓசை செல்லாவை தொடர்பு கொள்ளவும்..

பின்பு வெட்டி வேரின் பயன்கள் பற்றி திரு.வின்சென்ட் அவர்கள் ஆற்றிய உரை பயன் உள்ளதாக இருந்தது..ஆனால் திறந்தது திறந்த படியேத்தான் இருந்த்து..

கேட்கலாமா வேணமா என்று மனதில் நிறுத்து வைத்திருந்த கேள்வியை கடைசியில் கேட்டே விட்டேன் செல்லாவிடம்.. அவரின் கீப்பை குறித்து..
அவர் சொண்ன தகவல் படி.. அது Acer கம்பேனியை சார்ந்த்தாம்.. 4 மணி நேரம் பேட்டரி வேலை செய்யுமாம். மல்டி மீடியாவிலும் கலக்கலாமாம்..


இன்னுமா புரியல.. செல்லாவோட கீப் அவரின் மடி கணிணி தாங்க..

பின்குறிப்பு :-
வால்பையன் தலைமையில் நட்ந்த பார்டி பற்றி எனக்கு எதுவும் தெரியாது.. அடையார் ஆனந்த பவணில் பணியாரம் வாங்கி தந்த திரு. காசி லிங்கம் அவர்களுக்கு எனது தனிப்பட்ட நன்றி. உங்க கூட என்னையும் சேத்துகோங்க மக்கா :


|

  • Digg
  • Del.icio.us
  • StumbleUpon
  • Reddit
  • Twitter
  • RSS

12 Response to "திறந்து காட்டிய ஓசை செல்லா......"

  1. தமிழச்சி says:

    தோழர் இளைய கவி

    மோனிஸ் எப்படி இருக்கின்றான்? பதிவை படித்துவிட்டு யாராவது தொடர்பு கொண்டார்களா? அவன் உடல்நிலையை குணப்படுத்த எவ்வளவு பணம் தேவைப்படும் என்ற விபரங்களை எனக்கு தர இயலுமா?

    நன்றி

  2. உண்மைத்தமிழன் says:

    //திறந்து காட்டிய ஓசை செல்லா......

    முதல் முறையாக ஓசை செல்லாவின் இரண்டாவது துணையாளின் (கீப்) தரிசனம் கிடைக்கப்பெற்றது.. சூப்பரு செல்லா சார்.. என்னா ஸ்டையிலு,என்னா ஸிலிம், லெதர் ஜாக்கெட் சூப்பரு இன்னும் கண்ணுகுள்ளேயே நிக்குது சாமி..

    முதலில் ஓசை செல்லாவோட கீப்னு ஒரு டிஸ்டென்ஸ் மெயின்டன் பண்ணினேன். போக போக கீப் நம்ம மடியிலே வந்து விழுந்திடுச்சு..

    அப்புறம் மதியம்வரைக்கும் தொட்டு தழுவி.. போங்க இதுக்கு மேல சொல்ல கூச்சமா இருக்கு. இது மட்டுமா ??

    என் தோள்ல தொங்கிகொண்டிருந்த செல்லாவின் கீப்பை செந்தழில் ரவி மத்தியானத்து மேல கொஞ்சம் வேலையிருக்குன்னு தட்டி பறிச்சிகிட்டார் .. என்ன பண்றது.. செல்லாவோட கீப் அப்படி..

    அப்போது தான் ஓசை செல்லா அவர்களின் கீப்பை எல்லோர் முன்னிலையிலும் திறந்து காட்டினார்....

    பின்பு அவர்கள் திறந்தை திறந்தபடி போட்டுவிட்டு மைக் பிடித்தார் செல்லா.. அடபாவிகளா திறந்தே கிடக்கேன்னு மனசு அலற வேற வழி இல்லாம.//

    இதுக்கு நீங்க எழுதாம இருந்திருந்தாலே, நன்றாக இருந்திருக்கும்.

    'சேர்வார் சேர்க்கை' சரியில்லையெனில் இப்படித்தான் எழுத்துக்கள் அமையும்..

    வாழ்க வளமுடன்

  3. Tech Shankar says:

    நான் அப்போவே சந்தேகப்பட்டேன். அது கம்ப்பூட்டராத்தான் இருக்கும்னு... சந்தேகம் சரியாப்பூச்சு

  4. வசந்தம் ரவி says:

    ஏய் என்னா நடக்குது இங்க....?

    பயமுருத்திட்டியேப்பா...

  5. இளைய கவி says:

    உண்மை தமிழன் வருகைக்கும் ஆசிர்வாதத்துக்கும் மிக்க நன்றி. இது முழுக்க முழுக்க வேடிக்கைக்காக எழுதப்பட்ட பதிவு, அதை ஏன் சார் இவ்வளவு சிரியஸா எடுத்துகீறீங்க ????

  6. இளைய கவி says:

    // தமிழ்நெஞ்சம் said...
    நான் அப்போவே சந்தேகப்பட்டேன். அது கம்ப்பூட்டராத்தான் இருக்கும்னு... சந்தேகம் சரியாப்பூச்சு
    // அடுத்த தடவ கண்டு புடிக்காத மாதிரி எழுதுறேன் வருகைக்கு மிக்க நன்றி

  7. இளைய கவி says:

    // வசந்தம் ரவி said...
    ஏய் என்னா நடக்குது இங்க....?

    பயமுருத்திட்டியேப்பா...
    //Dont Worry thala its all in the game.. i am really glad to see your comment in my blog.

  8. இளைய கவி says:

    தமிழச்சி அவர்களே ,

    மோனிஸ் நன்றாக இருக்கின்றான்
    பதிவை பார்த்தும் திரு. ஜாலி ஜம்பர் அவர்கள் ரூபாய் 500 க்கு காசோலை அனுப்பி உள்ளார்கள்.இன்னும் emilinshah 2000ஆயிரமும், தொகை குறிப்பிடாமல் Vijayakumar Ramdoss, Yogeshwaran M,போண்றோரும் உதவுவதாக கூி உள்ளார்கள்.பணம் இன்னும் இவ்வளவுதான் வேண்டும் என்று திட்டமிட்டு கூற முடியவில்லை. கூடிய விரைவில் தெரியப்படுத்துகிறேன்.தங்களின் அக்கறை மிக்க நன்றி தோழர்

  9. வால்பையன் says:

    //லெதர் ஜாக்கெட் சூப்பரு இன்னும் கண்ணுகுள்ளேயே நிக்குது சாமி..//
    உள்ள எட்டி பாக்கலையா

    //வால்பையன் தலைமையில் நட்ந்த பார்டி பற்றி எனக்கு எதுவும் தெரியாது.. //

    இப்படியெல்லாம் ஜகா வாங்க முடியாது நைனா, இருட்டுல எடுத்த போட்டோ இருக்குது வலையிலே ஏத்தி விட்டு தான் மறுவேலை.

    வால்பையன்

  10. மங்களூர் சிவா says:

    :))))))))))))

    செல்லா கோச்சுக்காம இருந்தா சரிதான். என்னைய இல்ல இந்த பதிவு எழுதின உன்ன!!!!

  11. KARTHIK says:

    //இப்படியெல்லாம் ஜகா வாங்க முடியாது நைனா, இருட்டுல எடுத்த போட்டோ இருக்குது வலையிலே ஏத்தி விட்டு தான் மறுவேலை.//

  12. இளைய கவி says:

    // கார்த்திக் said...
    //இப்படியெல்லாம் ஜகா வாங்க முடியாது நைனா, இருட்டுல எடுத்த போட்டோ இருக்குது வலையிலே ஏத்தி விட்டு தான் மறுவேலை.//
    //

    கார்திக் அருண் கூட சேராதீங்க .. ......

Post a Comment

உங்கள் கருத்துக்களை இங்கே கொட்டுங்கள் & தமிழில் தட்டச்சு செய்ய... இங்கே... செல்லுங்கள் ! (right click the link and select open in a new window)