முத்தம் 5 வருடங்களுக்கு பிறகு
சம்பந்தமே இல்லாம நடக்கும் ஒரு நிகழ்ச்சி நம்மை வேறு ஒரு பாதையில் திசை திருப்பிவிடும் என்பதற்க்கு உதாரணமாக, அலுவல் காரணமாக திருச்சி சென்றேன், இரவு 12 மணியாகியும் உறக்கம் வரவில்லை, சரி தொலைக்காட்சியை பார்க்கலாம் என்று தொலைகாட்சியை இயக்க அதில் உள்ளூர் அலைவரிசையில் அலைபாயுதே படம் ஓடிக்கொண்டிருந்தது.
நீண்ட நாட்கள் கழித்து ஒரு தமிழ் சினிமா! படம் முடியும் தருவாயில் காதாநாயகி திவிர சிகிச்சை பிரிவில் இருப்பார்கள், அப்போது அவர்கள் பேசும் வசனம் ஒரிருவார்தைகளே ஆயினும் அந்த சூழ்நிலையில் அது மிகப்பொருத்தமாக அமைந்திருந்தது.
படம் முடிந்த பிறகும் அப்படத்தின் காட்சிகள் மனதை ஏதோ செய்து கொண்டிருந்தன, உடனே என் மனைவிக்கு அலைப்பேசினேன், என்னாடா இன்னும் நீ தூங்கலையா ? இல்ல மா அலைப்பாயுதே படம் பாத்துகிட்டு இருந்தேன் , அப்படியே நம்ம வாழ்கைய பாக்குற மாதிரி இருக்கு குட்டி...................
நீயும் நானும் ரொம்ப தூரம் போய்ட மாதிரி இருக்கு குட்டி, உன்னைய உடனே பாக்கனும் போல இருக்குடா, நான் உன்னைய நல்லா பாத்துகுறேனா ? நீ உண்மையாவே சந்தோசமா இருக்கியா ?
நான் உன்னைய காயப்படுத்துற மாதிரி பேசியிருந்தாலோ இல்ல எதாவது செய்திருந்தாலோ மன்னிச்சிக்கோ !
இப்போ மணி 12:45
கதவ தட்டினேன்! என்ன ஆச்சி தலைவா நேத்து சரக்கா ? 12:00 மணிக்கு போண போட்டு கலாய்ச்சிட்ட?
இல்ல சரக்கெல்லாம் இல்ல சும்மா பேசனும்னு தோணிச்சி அதான் !
சரி சரி பொய் பல்தேய் காபி போட்டு தரேன்.
நான் கேட்ட கேள்விக்கு பதில் சொல்லவே இல்ல குட்டி ஏன் ?
பல்தேச்சியா ? பக்கத்துல வாடா இங்க வா ! நீ எனக்கு புள்ள மாதிரி நாயே ! வீணா உன்னை போட்டு வருத்திக்காத! ஏன்டா திடீர்ன்னு இந்த நினைப்பு உனக்கு? பயமா இருக்கா? நான் இருக்குறவறைக்கும் உன்னை என் புள்ள மாதிரி பாத்துக்குவேண்டா பயப்படதா என்ன? உன்னால என்னை பிரிஞ்சு ரொம்ப நாளைக்கு இருக்க முடியாது என்னாளையும் தான், நம்மளுக்குள்ள இருக்கும் இது எல்லாம் சும்மா ஒரு நிமிசத்துல காண போயிடும் பாக்குறியா?
மடியில படுத்துகிரியாடா?
ம்
முத்தம் வேணுமாடா ?
மணி இப்போ 6:00 AM
பரவாயில்லையே, யோகக்காரண் டா நி.
உங்க கூட என்னையும் சேத்துகோங்க மக்கா :
நெகிழ்வா இருக்கு மகிழ்ச்சி..... வாழ்க !!!