உண்ணும் உணவிலும் ஜாதி வேற்றுமை !!
சிறிது காலமாக எவெரெஸ்ட் கம்பெனியின் சாம்பார் பொடிக்கான ( மொழிமாற்று) விளம்பரங்களை காணமுடிகிறது. எவ்வளவு கேவலமான ஜாதி புத்தியில் அந்த விளம்பரம் எடுக்கப்பட்டிருக்கிறது என்பது சற்று உற்று நோக்கினால் தான் தெரியும். ஐய்யர்கள் மட்டும் தான் சாம்பார் பொடி உபயோகப்படுத்துவார்களா ?? ( அந்த விளம்பரத்தில் வரும் அனைவரும் பூணூல் அணிந்திருப்பார்கள்) குருகுல கல்வி என்பது ஐய்யர்களுக்கு மட்டும் தானா? அப்ப மற்ற ஜாதிக்காரர்களின் நிலை என்ன? மேலும் மற்ற ஜாதிக்காரர்கள் சாம்பார் உண்ணுவதில்லையா இல்லை உண்ணக்கூடாதா?
அத்தோடு விட்டார்களா ? வடமாநிலங்களில் இருந்து வரும் மொழிமாற்று விளம்பரங்களில் தமிழர்களை தொடர்ந்து இழிவுபடுத்திக்கொண்டிருக்கிறார்கள்
உதாரணத்திற்க்கு
1) ஒரு குக்கர் விளம்பரத்தில் வரும் அப்பாவின் பெயர் முருகன் ஏனென்றால் அவருக்கு குக்கர் பற்றி ஒன்றும் தெரியாதாம். மேலும் அவர் வேலைக்காரணாம். தமிழ்ர்கள் என்றால் இத்தனை கேவலமா ??
2) முக்கால்வாசி இந்தி படங்களில் வரும் தமிழ் பேசும் கதாபாத்திரங்கள் கோமாளிகளாகவே சித்தரிக்கப்பட்டிருப்பது நிதர்சனமான உண்மை.
3) இந்தி படங்களில் மட்டுமா? தொலைக்காட்சி தொடர்கள் மட்டும் என்ன சும்மாவா ? pogo தொலைக்காட்சியில் வரும் takashki castle என்ற தொடரில் ஜாவித் ஜெப்ரி செய்யும் வர்ணனையை பாருங்கள், மேலும் தமிழ் பெண்களை மிக கேவலப்படுத்தி வரும் Channel V ல் வரும் miss. Lota என்ற கதாப்பாத்திரங்களை பாருங்கள் , நாம் எவ்வளவு கேவலபடுத்த்ப்பட்டிருக்கிறோம் என்பது தெரியும்
4) வடமாநிலங்களை விடுங்கள் அன்டை மாநிலம் கேரளாவில் கூட தமிழனுக்கு பெயர் பாண்டி தானே !! இதற்க்கு முடிவுதான் என்ன ??
வந்தோரை வாழவைக்கும் தமிழகம் நமக்கு ஆப்புத்தான் வைக்குமோ??? உங்க கூட என்னையும் சேத்துகோங்க மக்கா :
நாம மட்டும் நல்லவங்க இல்லதம்பி,
நம்மல்ல எத்தனை பேரு சர்தர்ஜியை வைத்து கிண்டல் செய்றோம் , எத்தனை தமிழ் திரைப்படத்தில் ஓமன குட்டிகளை பார்த்திருப்பீர்கள். வீட்டுக்கு வீடு DTH Antena
கமல் நான் சொல்ல நினைப்பது நம்மை தாக்கி வரும் விளம்பரங்களை பற்றித்தான் உ.தா ( நரசூஸ் காபி, ப்ரு காபி, இந்த விளம்பரங்களில் வரும் எல்லாருமே பூணூல் அணிந்திருப்பார்கள் மேலும் சமீபத்தில் வரும் ICICI வங்கியின் விளம்பரம் பார்த்தீர்கள் என்றால் புரியும் ( ஒரு அலுவலகத்தில் வேலை செய்யும் ஒருவர் தன் மேஜையில் உள்ள கணிணியை இயக்க பாடதபாடு படுவது போலவும் அதற்க்கு ஒரு அம்மணி வந்து plug மாட்டாமல் இருப்பதை சுட்டி காட்டுவது போலவும் சித்தரித்து இருப்பார்கள் கூர்ந்து கவனித்தால் அவதிப்படும் அவர் நெற்றியில் திருநீறு வைத்திருப்பார். வட இந்தியர்களை பொருத்தமட்டும் திருநீறு வைப்பவர்கள் தென்னிந்தியர்களே! அவர்களுக்கு plug கூட மாட்ட தெரியாது என்பது ICICI யின் எண்ணம்