திராவிட பண்ணாடைகள்





நேற்று இரவு 12 மணிவரை விஜய்டிவியின் ஏர்டெல் சூப்பர்சிங்கர் நிகழ்ச்சியின் நேரலையை காண நேர்ந்தது. 5 1/2 லட்சம் வாக்குகள், பிரமாண்ட நிகழ்ச்சி, ஒரு வாக்குகளை குறுஞ்செய்தி மூலம் பதிய 3 ரூபாய்கள் என நினைக்கிறேன். மொத்தம் 16,50,000.00 ரூபாய்கள். மக்கா உங்கள பாத்து சில கேள்விகள் கேக்கனும். 


1) நம்ம திராவிட கலைகளுக்கு இந்த மாதிரி ஆதரவு கிடைக்குமா ? 




2) அவா வந்து நம்ம தப்பாட்டம் , மயிலாட்டம், காவடி ஆட்டம், ஒயிலாட்டம் எல்லாம் ஆடுவாளா ? 




3) இன்னைக்கு இசைன்னு பார்த்தோம்ன்னா, அது கர்நாடக சங்கீதம் தான் என்ற மாயை உள்ளதே? நடனம் என்றால் அது பரதம் மட்டும் தான் என்ற மாயையும் உள்ளதே ? இது ஏன் ? நாம் குனிந்து விட்டோமோ ? 




4)பரதமும் கர்நாடக சங்கீதமும் மட்டும் தான் இசையின் அடிப்படை என்றால் நம்ம திராவிட இசையை என்ன வென்று சொல்லுவது ?




அவாளை மட்டும் குறை சொல்லி ஒன்னும் ஆக போவதில்லை, நம்மில் பலர் திரவிடராய் இருப்பின் நமது குழந்தைகள் பரதமும், கர்நாடக சங்கீதமும் கற்றுக்கொள்வது சிறப்பு என கருதிக்கொண்டுதான் இருக்கிறோம். நம்மில் எத்தனை பேர் நம்முடைய திராவிட பாரம்பரியத்தையும் கலைகளையும், நம்முடைய குழந்தைகளுக்கு சொல்லித்தர போகிறோம். ஆகவே மக்கா சமுகத்தில கொஞ்சம் கொஞ்சமா மாறுதல உண்டாக்குவோம்.


தென்னை மரத்தில் உள்ள பண்ணாடைகள் போலல்லாது தென்னை மரமாக திராவிடம் வளரட்டும்.


Photobucket உங்க கூட என்னையும் சேத்துகோங்க மக்கா :


|

  • Digg
  • Del.icio.us
  • StumbleUpon
  • Reddit
  • Twitter
  • RSS

14 Response to "திராவிட பண்ணாடைகள்"

  1. கோவி.கண்ணன் says:

    மன்னவன் வந்தானடி தோழி பாடலுக்கு பக்கவாத்தியம் வாசித்தவர் மிருதங்கத்துடன் மிக அருமையாக 'தகிடுதோம்' போட்டு கலக்கினார். சொர்ணலதா தவிர்த்து வேறு எந்த ஒரு பாடகரும் அவரைப் பாராட்டவில்லை.

  2. கார்த்திகைப் பாண்டியன் says:

    மாப்பு? என்னாச்சு? ஏன் இவ்வளவு கோபம்? என்ன சொன்னாலும் இவங்கத் திருந்தப் போறதில்லைன்னு உனக்கு தெரியாதா?

  3. Raju says:

    சரியான சாட்டையடி..!

  4. வால்பையன் says:

    உனது வருத்தம் புரியுது மச்சி!

    கர்நாடக சங்கீதமும், பரதமும் பல கலைகளில் ஒன்றே தவிர, அதுவே பிரதானம் கிடையாது தான். ஆனால் தொலைகாட்சிகாரன் என்ன செய்வான் பெருவாரியான மக்கள் எதை ரசிக்கிறார்களோ அதை தானே தருவான்!

    தமிழக் அரசே சங்கமம்னு ஒரு நிகழ்ச்சி வருடா வருடம் நடத்தி நலிவுற்ற கலைஞர்களுக்கு உதவி செய்யுது. மறைந்து கொண்டிருக்கும் கலைகளுக்கு புத்துணர்வு கொடுக்குது.

    இதையெல்லாம் விட்டு உங்கிட்ட ஒரே ஒரு கேள்வி,
    மக்கள் தொலைகாட்சியிலும், துர்தர்ஷனிலும் நமது நாட்டுபுரகலை நிகழ்ச்சிகள் காட்டப்படுது, அதையெல்லாம் பார்க்காம உன்னை யார் விஜய் டீவீ பார்க்க சொன்னது!

  5. தேவன் மாயம் says:

    கேள்வியெல்லாம் நல்லாத்தான் இருக்கு!!

  6. Sanjai Gandhi says:

    ராசா நல்லவரே, மக்கள் தொலைக்காட்சியில் தினமும் நாட்டுப் புறகலைகள் காட்டறாங்களே.. எவ்ளோ நாள் இப்டி கொட்ட கொட்ட முழிச்சி பார்த்திங்க? மொதல்ல நீங்க மாறுங்க..

    பார்ப்பனக் கலைகள் தான் ஓங்கி நிக்கிதுன்னு கவலைப் படறிங்களே.. தமிழ்நாட்ல திராவிடர்கள் அதிகமா ஆரியர்கள் அதிகமா?

    குறைந்த எண்ணிக்கையில் இருக்கும் அவர்கள் தங்களுக்கானதாக கருதும் கலைகளை பாதுகாத்து வளர்க்கிறார்களே.. அவர்களை விட பல மடங்கு அதிகம் இருக்கும் நீங்கள் என்ன செய்திர்கள்?

    குறை உங்களிடத்தில் அய்யா.. அய்யருமாருங்க கிட்ட மட்டும் இல்ல.. இதெல்லாம் ஒரு நிகழ்ச்சி.. இதை இவர் 12 மணி வரைக்கும் பார்த்தாரம். இதுக்கு ஒரு பதிவாம். அதுல இவரு கருத்தாம்.. அடிங்க..

  7. Sanjai Gandhi says:

    //இதையெல்லாம் விட்டு உங்கிட்ட ஒரே ஒரு கேள்வி,
    மக்கள் தொலைகாட்சியிலும், துர்தர்ஷனிலும் நமது நாட்டுபுரகலை நிகழ்ச்சிகள் காட்டப்படுது, அதையெல்லாம் பார்க்காம உன்னை யார் விஜய் டீவீ பார்க்க சொன்னது!//

    இது கேள்வி.. பதில் சொல்லுய்யா வெண்ண.. :)

  8. Tech Shankar says:

    repeat eeeeey
    இதையெல்லாம் விட்டு உங்கிட்ட ஒரே ஒரு கேள்வி,
    மக்கள் தொலைகாட்சியிலும், துர்தர்ஷனிலும் நமது நாட்டுபுரகலை நிகழ்ச்சிகள் காட்டப்படுது, அதையெல்லாம் பார்க்காம உன்னை யார் விஜய் டீவீ பார்க்க சொன்னது!

  9. வால்பையன் says:

    அங்கே இருந்தது பார்பன நடுவர்களாக இருக்கலாம்!

    ஆனால் வெற்றி பெற்றவர்கள் பார்பனர்களா என்று எனக்கு தெரியாது!
    பார்பனர்களின் ஆதிக்கம் அதிகமாகும் போது கத்தி கூப்பாடு போட திராவிட சொம்பு தூக்கிகள் இருக்காங்க, நாம மொக்கைய மட்டும் போடுவோம் மச்சி!

  10. வேத்தியன் says:

    நியாயமான வருத்தம் தான்...

  11. Unknown says:

    ஏம்பா...இந்த ஓட்டு அக்கறைய தேர்தல்ல காட்டுறாங்களா??

    மக்கள் தொலைக்காட்சி மற்றும் தூர்தர்ஷன் நிகழ்ச்சிகளையும் யாராவது upload பண்ணுங்கப்பா. அறிவுமதி கூட மக்கள் தொலைக்காட்சியைப் பரிந்துரைத்திருக்கிறார். எனது துரதிருஷ்டம் கனடாவில் சன், விஜய், கலைஞர், ஜெயா நாலும்தான் வருது. இங்க இருக்கிற TVI & Tamil One கூட சன் & கலைஞர் நிகழ்ச்சிதான் காட்டுகிறார்கள். அதுவும் ஒரு சேனலுக்கு மாதம் 12-15 டாலர் கட்டியே தாவு தீர்ந்து போய்விடுகிறது... இதில தூர்தர்ஷனுக்கும் மக்கள் தொலைக்காட்சிக்கும் எங்க போக

  12. ஆ.ஞானசேகரன் says:

    //இன்னைக்கு இசைன்னு பார்த்தோம்ன்னா, அது கர்நாடக சங்கீதம் தான் என்ற மாயை உள்ளதே? நடனம் என்றால் அது பரதம் மட்டும் தான் என்ற மாயையும் உள்ளதே ? இது ஏன் ? நாம் குனிந்து விட்டோமோ ? //

    நல்ல கேள்விதான்

    வால்பையன் கேட்ட கேள்வியும் நல்லாவே இருக்கு...

    ரெண்டையும் நான் பாக்கலப்பா

  13. ஸ்ரீதர்ரங்கராஜ் says:

    :-))))

  14. KARTHIK says:

    // நம்மில் எத்தனை பேர் நம்முடைய திராவிட பாரம்பரியத்தையும் கலைகளையும், நம்முடைய குழந்தைகளுக்கு சொல்லித்தர போகிறோம்.//

    நல்ல கேள்வி மாப்பி

    உன்னோட பையன் பேரு என்ன சசாங் கிரிஷ் இது தமிழ் பேரா.

Post a Comment

உங்கள் கருத்துக்களை இங்கே கொட்டுங்கள் & தமிழில் தட்டச்சு செய்ய... இங்கே... செல்லுங்கள் ! (right click the link and select open in a new window)