பிள்ளைகள் பெறுவது இதற்க்குதான்.
மக்கா போன வாரம் என் நண்பரோட குழந்தைகளை பள்ளியில் சேர்க்க போயிருந்தேன், அவர் என்னை கூப்பிட்ட போது நம்ம போய் என்ன பண்ண போறோம்ன்னு நினைச்சேன் ஆனா பள்ளிக்கு போனதுக்கப்புறம் தெரிஞ்சது இது ஒரு சொர்க்கபுரின்னு.
அங்க இருக்கும் பிள்ளைகளை பாத்தா அப்பப்பா காண கண்கோடி வேண்டும், காலையில அந்த புள்ளைகளும் அவங்க குளிச்சி பொட்டு வச்சி பூ வச்சி உடை உடுத்தியிருக்கும் அழகே தனிதான். அம்புட்டு அழகு. அதில ஒரு புள்ள நம்மளை பாத்து சிரிச்ச அழகே தனிதான். அப்படியே தூக்கி கொஞ்சலாம் போல இருந்தது. இருந்தாலும் வூட்டுகார ஆம்மாவை நினைச்சி வந்த ஆசைக்கு அணை போட்டாச்சி.
எல்லாம் சின்ன சின்ன புள்ளைகப்பு அப்பத்தான் ஒரு சின்ன வருத்தம் அடடா நம்ம பயலுக்கு ஒரு 3 வயசாயிருந்தா இந்த பள்ளியில சேத்துருக்கலாமேன்னு.
அதுனால என்ன ? நான் வூட்டுகாரம்மாவை விசாரிச்ச வகையில என் மகனுக்கு அடுத்த வருசம் 3 வயசு ஆகிடுமாம். ரொம்ப சந்தோசமான விசயம் என்னான்னா, அடுத்த வருசம் நானும் அந்த பள்ளிக்கு அடிக்கடி போவேன் அந்த அழகு புள்ளைகளை பாக்க.
இந்த பதிவுல நம்ம வலைஉலக ஆண் நண்பர்களுக்கு மறைமுகமாக பல விஷயம் சொல்லியிருக்கேன். புத்தி உள்ள புள்ள பொழச்சிக்கும்..
பின்குறிப்பு :-
இந்த படம் நான் போன பள்ளியில எடுத்ததில்ல ஆனா படத்த பாத்தாவது பிரிஞ்சிக்கதான் ஒகே வா.
உங்க கூட என்னையும் சேத்துகோங்க மக்கா :
எவ்ளோ சண்டை போட்டு தினம் நாந்தான் ஸ்கூல்ல இருந்து புள்ளைய கூட்டிவருவேன்னு பர்மிஷன் வாங்கியிருக்கேன் தெரியுமா!
இளைய கவி !!!
அட்மிசன் வாங்கி
நீரே ஸ்கூலுக்குப்
போனாலும்
ஆச்சரியமில்லை!!!
// இந்த படம் நான் போன பள்ளியில எடுத்ததில்ல ஆனா படத்த பாத்தாவது பிரிஞ்சிக்கதான் ஒகே வா.//
புரிஞ்சிகிட்டோம்
இதுவும் நல்லா இருக்கே