பதிவர் அவிங்க ராசா ஒழிக - ஒரு பகிரங்க கடிதம்

மேற்கூறிய பதிவர் எழுதிய இந்த பதிவாலத்தான் இவ்வளவு பிரச்சனையும்




இன்னைக்கு காலையில ஒரு 10 மணி இருக்கும்,  படுக்கையறை முழுவதும் ஒரே வெளிச்சம், பயத்துல தூக்ககி வாரி போட்டு எந்திருச்சிட்டேன், பாத்த நம்ம ஊட்டுகாரம்மா ( நன்றாக கவனிக்க :- என் மனைவி ) அட இவ வந்ததுக்கா இவ்வளவு வெளிச்சம் அப்படின்னு நினைச்சிகிட்டு இன்னும் கண்ண கொஞ்சம் தொறந்து பாத்தா ஜன்னல் எல்லாத்தையும் தொறந்து வச்சிருக்கா பாவி மக.  ( இதுக்கு ஒரு பயங்கர காரணம் உண்டு பதிவின் கடைசியில் பார்ர்க்கவும் )


 சரி விஷ்யத்து வருவோம், எந்திருச்சு உக்காந்து, காப்பிய எடுத்து ஒரு வாய்தான் குடிச்சிருப்பேன், நம்ம வாடிக்கையாளர் கிட்ட இருந்ந்து ஒரு போண், பேசிகிட்டே ரீடர தொறந்தா முத்ல்ல கண்ணுல பட்டது நம்ம ராசா வோட ஆத்தா..நான் பிரபல பதிவர் ஆயிட்டேன்… பதிவு தான்.


நானும் ரொம்ப ஆர்வமா போண்ல பேசி முடிச்சிட்டு பதிவ படிக்க ஆரம்பிச்சிட்டேன், ராசா எழுத்து நடை எனக்கு ரொம்ப பிடிக்கும், ஆனா பாருங்க இன்னும் ஊட்டுகாரம்மா பக்கதிலே நின்னுகிட்டு இருந்திருக்கு நான் கவனிக்கல.


படிக்க படிக்க பதிவில ரொம்ப மூழ்கிட்டேன், தீடிர்ன்னு ரொம்ப வேர்வையா இருந்திச்சு, நான் பதிவு படிச்சதனால வந்த பரவசமா கூட இருக்கலாம்னு பாத்தா, பாதகத்தி மின்விசிறிய ஆப் பண்ணிட்டா இன்னும் ஊட்டுகாரம்மா பக்கதிலே நின்னுகிட்டு இருந்திருக்கு நான் கவனிக்கல



சரியா //“சரி..யாரையாவது கன்னாபின்னான்னு திட்டி பதிவு போட்டிருக்கீங்களா..அவிங்களாவது உங்களை திட்டிருக்காயிங்களா.// இந்த வரிகள படிச்சிகிட்டு இருக்கும் போது அடடா ந்ல்லா பொம்பளைகளும் ஒரே மாதிரியாவா இருப்பாங்கன்னு நினைச்சிகிட்டு இருதேன்.இன்னும் ஊட்டுகாரம்மா பக்கதிலே நின்னுகிட்டு இருந்திருக்கு நான் கவனிக்கல


“ஒரு தடவை ஆரம்பிச்சேன்..ஒரு பயபுள்ள கேள்வி எழுதல..அப்புறம் நானே ஒரு பத்து கேள்வி கேட்டு பின்னுட்டம் அனுப்பினேன்..அதிலயும் சின்ன பிரச்சனை..பழக்க தோசத்துல கேள்வியை கேட்டுபுட்டு “இப்படிக்கு அவிங்க ராசா” ன்னு எழுதிப்புட்டேன்..”

//“நீங்கதான் கடலைப் பருப்பு வாங்கியாரச் சொன்னா துவரம் பருப்பு வாங்குற ஆளாச்சே…சரி அட்லீஸ்ட் கவிதைகள், கதைகள்// இந்த வரிகள படிக்கும் போது சில்லற கொட்டுன மாதிரி ஒரு சத்தம், மன பிராந்தியா இருக்குமோன்னு நின்னைச்சா.இன்னும் ஊட்டுகாரம்மா பக்கதிலே நின்னுகிட்டு இருந்திருக்கு நான் கவனிக்கல



//“போயாங்க..சரி..ஒன்னே ஒன்னு செய்யுங்க..நீங்க பிரபல பதிவர்ன்னு ஒத்துக்குறேன்..பக்கத்து கடைல போயி “நான் பிரபல பதிவர்ன்னு” சொல்லி ஒரு டீ கடனா குடிச்சுட்டு வாங்க பார்ப்போம்..”

சரி, டிரை பண்ணிதான் பார்ப்போமேன்னு போனா..உங்க வீட்டு , எங்க வீட்டு கெட்ட வார்த்தை இல்லைண்ணே..அவ்வளவு கெட்ட வார்த்தை..அதுவும் பத்தாம சுடுதண்ணியை வேற மேல ஊத்தி விட்டுட்டாருண்ணே..

ஏண்ணே..நான் பிரபல பதிவர் ஆக முடியாதாண்ணே…

// மிகச்சரியா இந்த வ்ரிகளை படிக்கும் போது. எங்க வீட்டுகாரம்மா ( மீண்டும் க்வனிக்க இது என் மனைவி ) வந்து ஏண்டா ஒருத்தி காலங்காத்த்ல குளிச்சி, அழகா டிரஸ் பண்ணி கோவிலுக்கு போலாம்னு உன்னை எழுப்பி நான் அழ்கா இருக்கேன்ன்னானு கேட்டு 10 நிமிசம் ஆச்சி, இன்னும் பதில காணும், நீ என்னாடான்னா ஸ்கிரின பாக்குற லூசாட்டாம் சிரிக்கிற , அப்படி என்னடா இந்த ராசா எழுதியிருக்குறான்னு முழு பதிவயும் படிச்சிட்டு என்னை பாத்து ஒரு லுக் விட்டா பாருங்க.  அப்பத்தான் பதிவு தலைப்பு மனசுல வந்தது...




Photobucket உங்க கூட என்னையும் சேத்துகோங்க மக்கா :


|

  • Digg
  • Del.icio.us
  • StumbleUpon
  • Reddit
  • Twitter
  • RSS

5 Response to "பதிவர் அவிங்க ராசா ஒழிக - ஒரு பகிரங்க கடிதம்"

  1. அவிய்ங்க ராசா says:

    ஆஹா..பிரபல பதிவர் ஆகுறோமோ இல்லையா..நம்ம ரெண்டு பேரும் பிரபல கணவர்கள் ஆகிடுவோம் போலேயே..)))

    வாழ்க்கை ரொம்ப முக்கியம்ணே..இந்த மாதிரி நேரத்துல கூச்சம் பார்க்காம காலுல விழுந்தருணும்..சோறு முக்கியம்ல..)))

  2. எல் கே says:

    superrrrr

  3. ஸ்ரீதர்ரங்கராஜ் says:

    :-)))))))))

  4. இளைய கவி says:

    //விய்ங்க ராசா says:
    March 8, 2010 11:07 AM
    ஆஹா..பிரபல பதிவர் ஆகுறோமோ இல்லையா..நம்ம ரெண்டு பேரும் பிரபல கணவர்கள் ஆகிடுவோம் போலேயே..)))

    வாழ்க்கை ரொம்ப முக்கியம்ணே..இந்த மாதிரி நேரத்துல கூச்சம் பார்க்காம காலுல விழுந்தருணும்..சோறு முக்கியம்ல..)))

    இது ஒரு பயங்கரமான உண்மை தான் ராசாண்ணே

  5. முனைவ்வ்வர் பட்டாபட்டி.... says:

    கலக்கல்

Post a Comment

உங்கள் கருத்துக்களை இங்கே கொட்டுங்கள் & தமிழில் தட்டச்சு செய்ய... இங்கே... செல்லுங்கள் ! (right click the link and select open in a new window)