கப்பல் ஏறும் இந்திய குடும்பபெண்களின் மானம்

நேற்று இணையத்தில் உலாவி கொண்டிருந்த போது, இணைய
பக்கங்களை தர வரிசை படி பட்டியல் இடும் ஒரு இணையதளத்தை
பார்க்கநேர்ந்தது. அதில் உள்ள ஒரு சுட்டியை சொடுக்கிய போது, நான் கண்ட
காட்சிகள் காண சகிக்காதவை. உடண் வேலை பார்க்கும் ஒரு பெண்னை
அவளுக்கு தெரியாமல் பல கோணங்களில் படம் எடுத்து போட்டிருக்கிறது ஒரு தரங்கெட்ட மனித மிருகம், அது மட்டுமா? தன் அன்னையின் புகைபடம், தன் சகோதரியின் புகைபடம் அத்தனையும் அவர்களுக்கு தெரியாமல் பல
கோணங்களில் படம் எடுத்து போட்டிருக்கிறது மற்றொரு தரங்கெட்ட
மனித மிருகம். ( இதில் என்ன கொடுமை என்றால் தான் வலையிட்ட புகைபடத்தை பற்றி அடுத்தவரிடம் கருத்து வேறு கேட்டிருக்கிறார்கள்). நான் கண்ட முக்கால்வாசி புகைபடங்கள் மிகை படுத்தபடாமல்
வீட்டு சூழ்நிலையில், அலுவலக பின்னனியில் எடுக்கப்பட்டவை. அவ்வளவு
பேரும்(புகைபடம் எடுக்கப்பட்டவர்கள்) இதை பற்றி ஒன்றும் அறியாதவர்கள்
என்பது தான் மிக கொடுமை.
கணவணும் மனைவியும் அந்தரங்கமாய் இருப்பதை காட்டும் புகைபடங்கள், இதில் ஒரு சில வக்கிர புத்தி கொண்ட
கணவர்களும் இது போன்ற புகைபடங்களை( தன் மனைவியின் )
வலையிடுகிறார்கள்.
இதில் மிக கொடுமைஎன்னவென்றால் ஒரு சில பெண்களும் இதில் ஈடூபடுவதுதான்.

இதை படிக்கும் பெண்கள் தயவு செய்து
மிக கவனமாக நடந்து கொள்ளுங்கள்.தங்களின் அந்தரங்க படங்களை தங்கள் கணவர் வைத்திருந்தால் அதை அவர் சரியான் முறையில் பாதுகாக்கின்றறா என்றுஉறுதி செய்து கொள்ளுங்கள் ஏனெனில்இதில் ஒரு சில கணவண்களும் அடக்கம்.

மிக முக்கியமாக அலுவலகங்கள் பொதுஇடங்களில் அவசியம் இல்லாமல் ஆடைகளை சரி செய்யாதீர்கள், சுடிதார் அணிந்திருந்தால் துப்பட்டாவை சரியான முறையில் பயன்படுத்துங்கள் துப்பட்டா
style லாக அணிவதற்கு அல்ல , தங்களின் அனுமதி இல்லாமல் யாரையும் புகைபடம் எடுக்க அனுமதிக்காதீர். தங்களை யாராவது படம் எடுப்பது போல் தெரிந்தால் அதை தட்டி கேட்க தயங்காதீர்
. மனதில் கொள்ளுங்கள் முக்கால்வாசி படங்கள்அனுமதி இல்லாமல் கைபேசி முலம்
எடுக்கபட்டவையே.
உங்க கூட என்னையும் சேத்துகோங்க மக்கா :


|

  • Digg
  • Del.icio.us
  • StumbleUpon
  • Reddit
  • Twitter
  • RSS

0 Response to "கப்பல் ஏறும் இந்திய குடும்பபெண்களின் மானம்"

Post a Comment

உங்கள் கருத்துக்களை இங்கே கொட்டுங்கள் & தமிழில் தட்டச்சு செய்ய... இங்கே... செல்லுங்கள் ! (right click the link and select open in a new window)