பாமரன் கேள்வியும் மனித உரிமை - சுற்றுச்சூழல் நீதிக்கான வழக்கறிஞர்கள் அமைப்பின் பதிலும்

பாமரன் எழுதியது

ஐயா,

தங்கள் வலைபதிவுகளை படிக்கும் பலரில் நானும் ஒருவன். எனக்கு ஒரு ஐயம் போக்குவரத்து காவல்துறை மற்றும் அதனை குறித்த சட்டங்கள் பற்றி,

ஒரு சிறு நிகழ்ச்சியின் மூலம் எனக்கு ஏற்ப்பட்ட ஐயங்கள்.

1) காவல் துறை அதிகாரிகளை ஐயா ஏன்று மட்டும் தான் அழைக்க வேண்டுமா ?
2) தாங்கள் அல்லது நான் போக்குவரத்து விதிகளை மீறும் போது நம்முடைய வாகனத்தின் சாவியையோ அல்லது வாகனத்தையோ வலுகட்டாயமாக பறிமுதல் செய்ய போக்குவரத்து காவல்துறைக்கு அதிகாரம் வழங்கப்பட்டிருக்கிறதா ?
3) அவ்வாறு பறிமுதல் செய்யப்படும் வாகனத்திற்க்கும் வாகனத்தில் உள்ள பொருள்களுக்கும் யார் பொருப்பு ?
4) காவல் துறை அதிகாரிகள் மக்களை அஃறினை பொருளாக பாவிக்கும் பட்சத்தில் யாரிடம் புகார் செய்ய வேண்டும்.
5) நான் கட்டும் தண்டனை பணம் அரசாங்கத்தை சென்றடைந்ததா என்று தெரிந்து கொள்வது எப்படி ?

எனது மேற்கண்ட ஐயங்களை தீர்பீற்கள் என்ற நம்பிக்கையுடன் ..

பாமரன்.


மனித உரிமை - சுற்றுச்சூழல் நீதிக்கான வழக்கறிஞர்கள் அமைப்பின் பதில்

வணக்கம் ,

காவல்துறை அதிகாரிகளை ஐயா என்றும் அழைக்கலாம். அது Sir என்ற சொல்லின் தமிழாக்கம்தான். அதன் பொருள் தெரியாத காவல்துறை சாராத சிலர் ஐயா என்று அழைத்தால் அதை மரியாதைக்குறைவாக கருதுவதை பார்க்கமுடியும். அதாவது யோவ் என்று அழைப்பதாகவும், அது மரியாதைக்குறைவான செயலாகவும் கருதப்படுகிறது. அதேபோல்தான் காவல்துறையில் ஐயா என்பது ஏதோ அவர்களுக்கு தேவர் பட்டம் கொடுத்தது போல கருதப்படுகிறது. அவ்வளவுதான்.

போக்குவரத்து விதிகளை மீறும்போது, அதனால் வேறு யாருக்கும் உடல், உயிர், பொருள் சேதம் இருந்தால் வாகனத்தை பறிமுதல் செய்யலாம். மற்ற நேரங்களில் வாகனத்தின் எண்ணைக்குறித்துக் கொண்டு வழக்குப்போடலாம்.

வாகனத்திற்கும், வாகனத்தில் உள்ள உதிரிபாகங்களுக்கும் காவல்துறைதான் பொறுப்பு. அதில் உள்ள மற்ற பொருட்களை நீங்கள் கையோடு எடுத்துச்செல்வது அனைவருக்கும் நல்லது.

பொதுமக்களை காவல்துறையினர் மரியாதைக்குறைவாக நடத்துவது என்பது பொதுவாக நடைபெறுகிறது (இதில் வழக்குரைஞர்களும் விதிவிலக்கல்ல) இதை எதிர்த்து புகார் செய்வதற்கு சட்டபூர்வமான அமைப்புகள் தற்போது ஏதுமில்லை.

நீங்கள் கட்டும் தண்டனைப்பணத்திற்கு உரிய ரசீது (எண் மற்றும் தொகையுடன்) பெற்றுக்கொண்டால் தகவல் உரிமைச்சட்டத்தின் கீழ் அதனை சரிபார்ப்பதற்கான வாய்ப்புகள் உள்ளன.

அன்பு நண்பரே உங்கள் உணர்வுகள் புரிகின்றன. எனினும் நமது அவசர வேலைகள் காரணமாக பல சிறுகுற்றங்களை நாம் செய்கிறோம். காவல்துறையினரும் சில நேரங்களில் பாவம்தான். பலநேரங்களி்ல் பல குற்றங்களில், குற்றவாளிகளை அவர்கள் கண்டுபிடித்தாலும்கூட
அதைவெளிப்படுத்த முடியாத நிலையில் நம் சமூகமும், அரசியல் நிலைமைகளும் உள்ளன. அதைப்பற்றி கவலைப்படாமல் நமது பிரசினைகளை மட்டுமே நம்மில் பலர் இருக்கிறோம். இதன் விளைவே இது. இந்த வாதம் மூலம் காவலர்களின் அத்துமீறல்களை நாங்கள் நியாயப்படுத்தவில்லை.

நன்றி.

மக்கள் சட்டம் குழு.

------------------------------------------------------------------------------------------------
தாங்களும் தங்கள் சந்தேகங்களை தீர்தது கொள்ள

முகவரி

Lawyers for Human Rights & Environmental Justice,
1-P, Pandu Klix Plaza,
330/168, Thambu Chetty Street,(Opp. High Court)
Chennai-600 001.
Phone: 044-25356121

மின்னஞ்சல் முகவரி
makkal.sattam@gmail.com

வலைபூ முகவரி

http://makkal-sattam.blogspot.com

அன்புடன் பாமரன் உங்க கூட என்னையும் சேத்துகோங்க மக்கா :


|

  • Digg
  • Del.icio.us
  • StumbleUpon
  • Reddit
  • Twitter
  • RSS

0 Response to "பாமரன் கேள்வியும் மனித உரிமை - சுற்றுச்சூழல் நீதிக்கான வழக்கறிஞர்கள் அமைப்பின் பதிலும்"

Post a Comment

உங்கள் கருத்துக்களை இங்கே கொட்டுங்கள் & தமிழில் தட்டச்சு செய்ய... இங்கே... செல்லுங்கள் ! (right click the link and select open in a new window)