நேற்று காலை நான் அலுவலக வேலையாக சிறிது நேரம் பயணப்பட வேண்டி இருந்தது. பேருந்தில் சுற்றி நடப்பதை வேடிக்கை பார்பது என்பது எனக்கு உடன் பிறந்த பழக்கம்.. அவ்வாறு வேடிக்கை பார்த்ததில் சிக்கிய ஒரு விஷயம் தான் இது.
ஒரு பேருந்து நிருத்ததில் பள்ளி மாணவர்கள் கூட்டமாக ஏறினார்கள், முதலில் சாதரணமாய் தெரிந்தாலும், பின்பு அவர்கள் பேசியதை கேட்டவுடன் தான் புரிந்தது அவரிகள் அவ்வளவு பேரும் காதலர்கள் என்று ( என்ன கொடுமை சார் இது! ) எல்லாம் சராசரியாக 14-17 வயதொத்தவர்கள். பேருந்து சிறிது நேரம் சென்றவுடன் தான் அவர்கள் சேட்டைகளை ஆரம்பித்தார்கள் ( முக்கியமாக பெண் பிள்ளைகள் ) உங்களுக்காக நான் கேட்ட உரையாடலை
இங்கு அளிக்கிறேன்.
மாணவி 1 :- ஏய் அங்க பார் கார்த்தி நிக்கிறான்.
மாணவி 2 :- ம் பார்த்தேன் பார்த்தேன் கொஞ்சம் கண்டுகாதமாதிரி நின்னாத்தான் நமக்கு நல்லது. இன்னும் கொஞ்சநேரம் பார் என்னை பார்க்கவைக்க என்னென்ன செய்வான்னு.
மாணவி 1 :- பாப்போம்
இருவருமே பள்ளி சீருடையில்த்தான் இருந்தார்கள் கார்த்தியும் தான். பின்பு கார்த்தி காட்டிய ஹீரோஇசத்தில் மாணவி 2 அடைந்த புளாங்கிதம் உள்ளதே அப்பபா !! கடைசியில் கைபேசி நம்பர்கள் சாக்லேட்டுகள் வாழ்த்து அட்டைகள் பறிமாற்றம் செய்துக்கொள்ளப்பட்டது தனிக்கதை.
இருவரின் சீருடையை வைத்து பார்க்கும் போது இருவரும் அப்பகுதியில் உள்ள ஒரு பெயர்போன ஒரு பள்ளியில் படிப்பது தெரிந்தது.
சற்று மயங்கிபோய் உட்கார்ந்து யோசிக்கும் போதுதான் என்னுடைய பள்ளிக்காலம் மனதுக்குள் வந்தது.
நான் படிக்கும் காலத்தில் எல்லாம் தாவணி அணிந்த அனைவரும் எனக்கு அக்காத்தான். சேலைக்கட்டிய அனைவரும் அத்தை எனத்தான் போதிக்கப்பட்டிருந்தது,பேருந்தில் செல்லும் போது கூட பெண்களிடம் பேசிவிடமுடியாது. முதுகில் டின் கட்டிவிடுவார்கள் வீட்டில்.
இவ்வாறு மாணவர்கள் பள்ளிப்பருவத்திலேயே கெட்டு சீரழிவதற்க்கு காரணம் என்ன ?
1) மீடியா
2) அளவுக்கதிகமான செல்லம் + செல்வம்
3) போதிய கவனிப்பின்மை
4) மாணவர்களிடம் விழிப்புணர்வு இல்லாதிருத்தல்
5) காலச்சார சீரழிவு ( மேற்க்கத்திய கலாச்சாரத்தின் தாக்கம் )
மாணவர்கள் ப்லொக் படிப்பதில்லை ஆகவே இதைப்படிக்கும் பெரியவர்கள் உரிய நடவடிக்கை எடுக்கலாமே? இல்லாவிட்டால் மாணவர்களின் எதிர்காலம் என்பது கேள்விக்குறியாகிவிடும் மேலும் அது ஒரு சமுதாய சீரழிவிற்க்கு வழிவகுக்கும் என்பதில் ஐயமில்லை
நான் மாணவர்களை மட்டும் குறை சொல்லவில்லை பெற்றோரையும் சமூகத்தையும் தான். காதல் என்றால் என்ன இனக்கவர்ச்சி என்றால் என்ன என்று யாரவது நம் குழந்தைகளுக்கு சொல்லித்தருகிறோமா ? எந்த வயதில் எற்படும் காதல் சிறந்தது என்று நாம் தான் சொல்லித்தர வேண்டும்.
மாணவர்களை மாணவிகளிடம் பேசுவதிலிருந்து தடை செய்ய இயலாது. ஆனால் கண்ணியமான நட்பை விதைக்கமுடியும் நாம் முயன்றால்.
Parenting tips பதிவு போடுபவர்கள் இதைக்குறித்து ஒரு பதிவு போட்டால் சந்தோஷம் தான்.
உங்க கூட என்னையும் சேத்துகோங்க மக்கா :
|