பூக்காரன் -- புனைவு..






ராமசாமி காலையில குவாட்டருக்கு எவண்டா சிக்குவானு பாத்துகிட்டு  வாசலில் எச்சி பீடி குடுச்சிகிட்டு யோசனையாய் இருந்தான்.
 தூரத்தில் சைக்கிளில் கோவணம் கட்டிய கோயிந்தசாமி வேகமாக இவனை நோக்கி வந்தான். ராமசாமிக்கோ குஷி கிளம்பியது. ஓசி குடிக்கு ஆள் கிடைத்த மகிழ்ச்சி அவணுக்கு,


மாமா என்ன இப்படி உக்காந்திருக்க ? ஊர்ல என்ன நடக்குதுன்னு கூடத்தெரியமா என்ன பண்ணிகிட்டு இருக்க? இன்னைக்கு நம்ம ஊர்ல 2 கடைக்காரனுங்களுக்கு பிரச்சனை மாமா. வா போயி வெட்டி பஞ்சாயத்து பண்ணி நாம ஒரு குவாட்டர கரெக்ட் பண்ணலாம்னு கோயிந்தசாமி சொல்ல , ஓசி குவாட்டர கரெக்ட பண்ண 2 பேரும் கிளம்பினாங்க.


போறவழியில நம்ம இன்னும் ரெண்டு மூனு கடைக்காரனுங்களையும் பிரச்சனையில  கோத்து விடுவோம் கோயிந்து. அப்ப தான் நம்மள ஊர்குள்ள மதிப்பானுங்க என்றான் ராமசாமி. அது எப்படி மாமா முடியும் ? எல்லாரும் அவன் அவன் பொழப்பத்தான பாக்குறானுங்க, அப்படி இருக்கும் போது எப்படி மாமா முடியும்ன்னு அப்பாவியா கேட்டான் கோயிந்து.

டேய் நாமெள்ளாலாம் இப்படியே வெட்டி பஞ்சாயத்து பண்ணித்தான் பொழைக்கமுடியும், பொழப்புதனம் பண்ணனும்னா நாம் பிரச்சனை இல்லாட்டியும் பிரச்சனை பண்ணனும்டா என்றான் ராமசாமி. எனக்கு ஒன்னும் புரியல மாமா என்றான் கோயிந்து வழக்கப்படி. டேய் நான் சொல்றத கவனமா கேளு, இப்பொ ஊர்குள்ள என்ன பிரச்சனை ? பூக்காரிய தேவை இல்லாம நரசிம்மன் திட்டி புட்டான் அது தான? ஆமாம் என்றான் கோயிந்து. 

சரி அதுக்கப்புறம்,  என்ன ஆச்சி என்று ராமசாமி வினவ,  மேட்டரு சப்புன்னுள்ள போயிடுச்சு! நரசிம்மன் தான் பூக்கரிய திட்டுனது தப்புன்னு ஊர் முன்னாடி கன்னத்துள்ள போட்டிகிட்டான்லா. என்றான் கோயிந்து. இப்பசொண்ணியே அதுதாண்டா நம்ம குவார்ட்டருக்கு பாயிண்டு என்றான் ராமசாமி.  எப்படி மாமா என்றான் கோயிந்து. டேய் நாம பண்ற இந்த மொள்ளமாறிதனத்துல எவனும் நம்மள ஏன் எப்படின்னு கேக்க கூடாது, கேக்கவும் மாட்டாணுங்க, ஏன்னா ஊர்காரனுங்க எவனுமே ஒற்றுமையா இல்ல. 

அதுனால நாம இப்ப பஞ்சாயத்த ஆரம்பிச்சி நரசிம்மன் பூக்காரி திட்டினது தப்புன்னு ஆலமரத்தடியில உக்காந்து பேச ஆரம்பிப்போம், வழியில போற 1,2 வேகாத பயபுள்ளய வந்திச்சின்னு வையி அப்படியே ஒரே அமுக்கு,  அவங்களையும் நாம கூட சேத்து பிரச்சனைய பெருசு பண்ணுவோம், நம்மள கேக்க யாருடா இருக்கா ? திருப்பி சொல்றேன் கேளு நாம பண்ற இந்த மொள்ளமாறிதனத்துல எவனும் நம்மள ஏன் எப்படின்னு கேக்க கூடாது, கேக்கவும் மாட்டாணுங்க, ஏன்னா ஊர்காரனுங்க எவனுமே ஒற்றுமையா இல்ல.  தான் ஊட்டுல நடந்தாத்தான் அய்யோ அம்மான்னு கத்துவானுங்க, அடுத்தவன் ஊட்டுல நடந்த கமுக்கமா இருந்துக்குவானுங்க என்றான் ராமசாமி. கேட்டு கொண்டிருந்த கோவிந்துக்கு ஒரே சந்தோசம் மற்றும் ஆச்சர்யம். மாமா நீதான் மாமா மூளைக்காரன் , ஒரே சமயத்துல குவாட்டர கரெக்ட் பண்ற அப்படியே மேட்டரயும் பெருசாக்குற என்றான்.


சரிமாமா இந்த பிரச்சனை முட்ஞ்சிடிசுன்னு வையி நாளைக்கு குவாட்டருக்கு என்ன பண்றது மாமா என்றான் கோயிந்து, அட பண்ணாட அதுக்கு தான், வேர 2 ,3 கடைக்காரனுங்கள பிரச்சனையில சம்பந்தேமே இல்லாமா கோத்து விடுறோம்ல, அவங்ககிட்ட பஞ்சாயத்த கண்டினியு பண்ணாலாம் என்றான், பொழுது சாய்ந்தது இருவரும் ஆலமரம் நோக்கி நடையை கட்டினர்.



Photobucket
உங்க கூட என்னையும் சேத்துகோங்க மக்கா :


|

  • Digg
  • Del.icio.us
  • StumbleUpon
  • Reddit
  • Twitter
  • RSS

வினவு நீங்க என்ன பெரிய புடுங்கியா ?




வணக்கம் மக்கா,

                 எதோ ஒரு பெரிய மேட்டர் வலை உலகத்திலே எதோ மேட்டர் நடக்குது அது என்னானு கூகுளாண்டவர் கிட்ட கேட்டா இந்த லிங்க் குடுத்து படிச்சிக்க சொண்ணாரு. படிச்சவுடன் வாயில வந்த வார்த்தைகளை அப்படியே எழுதுறதுக்கு நான் வினவு இல்ல, நர்சிம் இல்ல, கார்க்கி இல்ல.

              சரி அதபத்தி நாம எதும் பேசவேணாம் அதுக்கு நிறைய சொம்புதூக்கிகள் இருப்பாங்க ( நாட்டாமைகளை சொல்றேன்ப்பா ) நம்ம விஷயத்துககு வருவோ. வினவு நீங்க என்ன பெரிய நாட்டமைத்தனம் பண்ணிகிட்டு திறியிரீங்க ?

              யாரும் எதும் கேக்கமாட்டாங்கன்னு நினைப்பா ? பதிவுல ரொம்ப கஷ்டப்பட்டு நிறைய வரலாறை தேடி எழுதியிருக்கீங்க. ரொம்ப நல்ல விசயம். அதுல என்ன மங்களூர் சிவா, அபிஅப்பா, ஜொள்ளர்கள் , அப்படின்னு எழுதியிருகீங்க ? உங்களுக்கு நல்லா தெரியுமா ? இல்ல நீங்க யாரும் ஜொள்ளே விட்டது இல்லையா ? நீங்க மட்டும் பெரிய யோக்கியவானா ? இல்ல நீங்க எதாவது விளக்கு கிளக்கு ........... டிச்சீங்களா ?

 அடுத்தவங்கள பத்தி தவறா விமர்சனம் பண்ணுறதுக்கு உங்களுக்கு என்ன உரிமைஇருக்கு ?




கடைசியா ஒரு பன்ச் டயலாக் :‍ தடி எடுத்தவன் எல்லாம் தண்டல்காரண் ஆகா முடியாது !




Photobucket உங்க கூட என்னையும் சேத்துகோங்க மக்கா :


|

  • Digg
  • Del.icio.us
  • StumbleUpon
  • Reddit
  • Twitter
  • RSS

ஹனிமூன் தேசங்கள் - மூணார்

வணக்கம் மக்களே,  இந்த சுற்றுலா துறையில இருந்திட்டு நம்ம பதிவர்களுக்கு ஒன்னுமே செய்யலேன்னா எப்படி ? அதுனால தான்   இந்த பதிவு ( வாரம் ஒரு ஹனிமூன் தேசம் ).ஏற்க்கனவே நம்ம இங்கே ஆழப்புழைய பத்தி பார்த்தாச்சு அதுனால இப்போ மூணார்.




படிக்கிறதுக்கு முன்னாடி இந்த படத்த பாருங்க.. இது தான் மூணார். இதுக்கு கீழ இருக்கும் தகவல் எல்லாம் சும்மா வெறும் தகவல தான்.. காதல்ன்னா மூணார் , காமம்ன்னா மூணார் அப்படின்னு கவித எழுத வைக்கும் இடம் தான் மூணார் மக்கா !
















எல்லாத்தயும் மறந்திட்டு காதலும் ஊடலும் நிறைந்த ஹனிமூன் கொண்டாட மூணார் தான் மக்கா..  இனி என்னா யோசனை அடி பட்டய கிளப்புங்கள்....







மூணார் கடல் மட்டத்திலேந்து 6000 அடி மேல இருக்கு, பருவநிலை எப்போதுமே ரொம்ப ரொமேண்டிக்கா இருக்கும், சுத்தியும் பச்சை மலைகளும் டீ எஸ்டேட்களும் அருவிகளும் ரொம்ப அருமையா இருக்கும் மக்களே, அதுனால தான் நம்ம ஹனிமூன் தேசங்கள்ல ரொம்ப முக்கியமான இடத்தை பிடிக்குது.











மூணார் எப்போ வேணா போகலாம் அப்படி ஒரு இடம்,  கொஞ்சம் மழைய பொருட்படுத்தாத ஆளுங்களுக்கு மூணார் ஒரு சொர்க்கம், ரொம்ப குளிருமோன்னு பயப்படாதீங்க. அதுதான் பக்கத்திலேயே புது மனைவி இருப்பாங்களே ( இதை ஆப் தி ரெக்காட்ல வைங்க ).மூணார் போறவங்க நல்ல குளிர் தாங்கும் உடைகளையும், மழை நேரத்துக்கு தேவையான உடைகளையும் எடுத்து செல்வது நல்லது,  டெம்பரேச்சர் 0c - 25c வரைக்கும் இருக்கும். 




மூணார் பக்கதிலே பாக்க வேண்டிய இடங்கள் அப்படின்னு 


பாத்தாக்கா.  




 1) மேட்டுபட்டி டேம் ( மூணார்லிருந்து 13கிமி தொலைவில் இருக்கு, கடல் மட்டத்திலிருந்து சுமார் 1700 அடி உயரத்தில் அமைக்க பட்டுள்ளது, இங்கே இந்தியா - சுவிஸட்சர்லாந்து கூட்டமைப்பில் ஒரு அழகிய மாட்டு பண்ணை உள்ளது, பார்வையாளர்கள் நேரம் 0900 - 1100 hrs and 1400 - 1530 hrs.  தலைக்கு 5 ரூபாய் வீதம் நுழைவுக்கட்டணம் வசுலீக்கிறார்கள், மொத்தம் உள்ள 11 பண்னைகளில் 3 பண்ணைகளை மட்டுமே பார்க்க அனுமதிக்கிறார்கள்)






2) போத்தமேடு.






 போத்தமேட்டிலிருந்து பார்த்தால் மூணாரின் மொத்த அழகையும் கண்டுகளிக்கலாம், இது ஒரு நல்ல வியூபாயிண்ட். இந்த இடம் டிரக்கிங் மற்றும் ஜங்கிள் வாக் போண்ற நிகழ்வுகளுக்கு ரொம்ப 
ஏற்றது. 




3) தேவி குளம் ( 7 கிமி தொலைவு முணாரிலிருத்து )






இங்கிருக்கும் சீதா தேவி ஏரி மிகவும் அழகானது இந்த ஏரி  trout fishing. கிற்க்கு மிகவும் சிறந்தது. 


4) பள்ளிவாசல் ( 8 கிமி தொலைவு முணாரிலிருத்து )




 இங்குதான் கேரளாவின் முக்கியமான Hydro Electric Project 


செயல்படுகிறது. 


5) அட்டுக்கல் ( 9 கிமி தொலைவு முணாரிலிருத்து )


அட்டுக்கல் முணார் மட்டும் பள்ளிவாசல் இடையில் அமைந்துள்ளது. இங்கு காணப்படும் அருவிகளும் மலை பிரதேசங்களும் நம்மை பிரமிப்பில் ஆழ்வதில் ஆச்சர்யமில்லை .இன்னும் சித்திராபுரம், லாக் ஹார்ட் கேப், ராஜமலா, இரவிக்குளம் தேசிய பூங்கா  ( 15 கிமி தொலைவு முணாரிலிருத்து ). பற்றி எழுதிக்கொண்டே போகலாம். பதிவின் நீளம் கருதி முடித்து கொள்கிறேன்.



மேற் கொண்டு தகவல் தெரிந்து கொள்ள விரும்பினால் என்னை தாரளமாக தொடர்பு கொள்ளலாம்.

மொபைல் :- +91 9894916242, +91 9043216661

இமெயில் :- contact.s.teamholidays@gmail.com





Photobucket உங்க கூட என்னையும் சேத்துகோங்க மக்கா :


|

  • Digg
  • Del.icio.us
  • StumbleUpon
  • Reddit
  • Twitter
  • RSS

Extremely funny condom commercial



Photobucket உங்க கூட என்னையும் சேத்துகோங்க மக்கா :


|

  • Digg
  • Del.icio.us
  • StumbleUpon
  • Reddit
  • Twitter
  • RSS

Banned Commercials - Flavored Condoms



Photobucket உங்க கூட என்னையும் சேத்துகோங்க மக்கா :


|

  • Digg
  • Del.icio.us
  • StumbleUpon
  • Reddit
  • Twitter
  • RSS

இதப்பாருங்க முதல்ல



Photobucket உங்க கூட என்னையும் சேத்துகோங்க மக்கா :


|

  • Digg
  • Del.icio.us
  • StumbleUpon
  • Reddit
  • Twitter
  • RSS

திங்கள் கொண்டாட்டம்

வார இறுதியில நல்லா கூத்தடிச்சிட்டு திங்கள்கிழமை ஏந்தான் வருதோன்னு ஆபிஸ் போக அலுத்துகொள்ளும் நண்பண் மான்ஸ்தனை போண்ற மற்ற நண்பர்களையும், குதுகலமாய் அலுவலகம் வர ஒரு பொதுநல நோக்கோடு இத்திட்டம் செயல்படுத்த படுகிறது. ஒவ்வொரு திங்களும் இவ்வாறே புலரட்டும்.


குளிச்சிட்டு இப்படி ரொம்ப நேரம் நிக்க கூடாது, உடம்புக்கு ஒத்துக்காது 
இப்படி எல்லாத்தையும் திறந்தோமென்றால் நல்லா காத்து வரும் ! (திரைசீலை)
கோடைவெயில சமாளிக்க இப்படி நல்லா முங்கி குளிக்கனும்



உங்க கூட என்னையும் சேத்துகோங்க மக்கா :


|

  • Digg
  • Del.icio.us
  • StumbleUpon
  • Reddit
  • Twitter
  • RSS

நெட்டில் சுட்டது 18 +

நான் ரொம்ப ரசித்த புகைப்படங்களில் இதுவும் ஒன்று !


வாழ்கை ஒரு வட்டம் மேல இருக்குறவன் கீழ வருவான் கீழ இருக்குறவன் மேல போவான் - நன்றி மொக்க தளபதி- டாக்டர் விஜய்.


How do you think the meeting went ??


இது என்னவெண்று சரியாக சொல்பவர்களுக்கு குசும்பன் செலவில் துபாய் சுற்றுலா இலவசம்



வட போச்சே !






Photobucket உங்க கூட என்னையும் சேத்துகோங்க மக்கா :


|

  • Digg
  • Del.icio.us
  • StumbleUpon
  • Reddit
  • Twitter
  • RSS

வந்துவிட்டது 256 GB USB பென் டிரைவ்

Company Super Talent has announced a series of flash drives SuperCrypt, the main advantages of which are high speed data transfer through the interface of USB 3.0, as well as hardware data encryption algorithm AES. Drives are available in a choice of 16 to 256 GB. Chrome housing has dimensions of 95 x 34 x 15.4 mm. To connect to a PC without any additional cables.Devices compatible with the traditional ports USB 2.0, but the transfer speed but will be significantly lower. In addition to the normal version SuperCrypt, which applies 128-bit encryption mode simple replacement (ECB), the choice available in Pro-version, providing better protection of information through the mechanism of 256-bit encryption XTS. Both versions are equipped with password protection. About the price there is no information.
Photobucket உங்க கூட என்னையும் சேத்துகோங்க மக்கா :


|

  • Digg
  • Del.icio.us
  • StumbleUpon
  • Reddit
  • Twitter
  • RSS

பதிவர் அவிங்க ராசா ஒழிக - ஒரு பகிரங்க கடிதம்

மேற்கூறிய பதிவர் எழுதிய இந்த பதிவாலத்தான் இவ்வளவு பிரச்சனையும்




இன்னைக்கு காலையில ஒரு 10 மணி இருக்கும்,  படுக்கையறை முழுவதும் ஒரே வெளிச்சம், பயத்துல தூக்ககி வாரி போட்டு எந்திருச்சிட்டேன், பாத்த நம்ம ஊட்டுகாரம்மா ( நன்றாக கவனிக்க :- என் மனைவி ) அட இவ வந்ததுக்கா இவ்வளவு வெளிச்சம் அப்படின்னு நினைச்சிகிட்டு இன்னும் கண்ண கொஞ்சம் தொறந்து பாத்தா ஜன்னல் எல்லாத்தையும் தொறந்து வச்சிருக்கா பாவி மக.  ( இதுக்கு ஒரு பயங்கர காரணம் உண்டு பதிவின் கடைசியில் பார்ர்க்கவும் )


 சரி விஷ்யத்து வருவோம், எந்திருச்சு உக்காந்து, காப்பிய எடுத்து ஒரு வாய்தான் குடிச்சிருப்பேன், நம்ம வாடிக்கையாளர் கிட்ட இருந்ந்து ஒரு போண், பேசிகிட்டே ரீடர தொறந்தா முத்ல்ல கண்ணுல பட்டது நம்ம ராசா வோட ஆத்தா..நான் பிரபல பதிவர் ஆயிட்டேன்… பதிவு தான்.


நானும் ரொம்ப ஆர்வமா போண்ல பேசி முடிச்சிட்டு பதிவ படிக்க ஆரம்பிச்சிட்டேன், ராசா எழுத்து நடை எனக்கு ரொம்ப பிடிக்கும், ஆனா பாருங்க இன்னும் ஊட்டுகாரம்மா பக்கதிலே நின்னுகிட்டு இருந்திருக்கு நான் கவனிக்கல.


படிக்க படிக்க பதிவில ரொம்ப மூழ்கிட்டேன், தீடிர்ன்னு ரொம்ப வேர்வையா இருந்திச்சு, நான் பதிவு படிச்சதனால வந்த பரவசமா கூட இருக்கலாம்னு பாத்தா, பாதகத்தி மின்விசிறிய ஆப் பண்ணிட்டா இன்னும் ஊட்டுகாரம்மா பக்கதிலே நின்னுகிட்டு இருந்திருக்கு நான் கவனிக்கல



சரியா //“சரி..யாரையாவது கன்னாபின்னான்னு திட்டி பதிவு போட்டிருக்கீங்களா..அவிங்களாவது உங்களை திட்டிருக்காயிங்களா.// இந்த வரிகள படிச்சிகிட்டு இருக்கும் போது அடடா ந்ல்லா பொம்பளைகளும் ஒரே மாதிரியாவா இருப்பாங்கன்னு நினைச்சிகிட்டு இருதேன்.இன்னும் ஊட்டுகாரம்மா பக்கதிலே நின்னுகிட்டு இருந்திருக்கு நான் கவனிக்கல


“ஒரு தடவை ஆரம்பிச்சேன்..ஒரு பயபுள்ள கேள்வி எழுதல..அப்புறம் நானே ஒரு பத்து கேள்வி கேட்டு பின்னுட்டம் அனுப்பினேன்..அதிலயும் சின்ன பிரச்சனை..பழக்க தோசத்துல கேள்வியை கேட்டுபுட்டு “இப்படிக்கு அவிங்க ராசா” ன்னு எழுதிப்புட்டேன்..”

//“நீங்கதான் கடலைப் பருப்பு வாங்கியாரச் சொன்னா துவரம் பருப்பு வாங்குற ஆளாச்சே…சரி அட்லீஸ்ட் கவிதைகள், கதைகள்// இந்த வரிகள படிக்கும் போது சில்லற கொட்டுன மாதிரி ஒரு சத்தம், மன பிராந்தியா இருக்குமோன்னு நின்னைச்சா.இன்னும் ஊட்டுகாரம்மா பக்கதிலே நின்னுகிட்டு இருந்திருக்கு நான் கவனிக்கல



//“போயாங்க..சரி..ஒன்னே ஒன்னு செய்யுங்க..நீங்க பிரபல பதிவர்ன்னு ஒத்துக்குறேன்..பக்கத்து கடைல போயி “நான் பிரபல பதிவர்ன்னு” சொல்லி ஒரு டீ கடனா குடிச்சுட்டு வாங்க பார்ப்போம்..”

சரி, டிரை பண்ணிதான் பார்ப்போமேன்னு போனா..உங்க வீட்டு , எங்க வீட்டு கெட்ட வார்த்தை இல்லைண்ணே..அவ்வளவு கெட்ட வார்த்தை..அதுவும் பத்தாம சுடுதண்ணியை வேற மேல ஊத்தி விட்டுட்டாருண்ணே..

ஏண்ணே..நான் பிரபல பதிவர் ஆக முடியாதாண்ணே…

// மிகச்சரியா இந்த வ்ரிகளை படிக்கும் போது. எங்க வீட்டுகாரம்மா ( மீண்டும் க்வனிக்க இது என் மனைவி ) வந்து ஏண்டா ஒருத்தி காலங்காத்த்ல குளிச்சி, அழகா டிரஸ் பண்ணி கோவிலுக்கு போலாம்னு உன்னை எழுப்பி நான் அழ்கா இருக்கேன்ன்னானு கேட்டு 10 நிமிசம் ஆச்சி, இன்னும் பதில காணும், நீ என்னாடான்னா ஸ்கிரின பாக்குற லூசாட்டாம் சிரிக்கிற , அப்படி என்னடா இந்த ராசா எழுதியிருக்குறான்னு முழு பதிவயும் படிச்சிட்டு என்னை பாத்து ஒரு லுக் விட்டா பாருங்க.  அப்பத்தான் பதிவு தலைப்பு மனசுல வந்தது...




Photobucket உங்க கூட என்னையும் சேத்துகோங்க மக்கா :


|

  • Digg
  • Del.icio.us
  • StumbleUpon
  • Reddit
  • Twitter
  • RSS

நாணயங்கள் சொல்லும் சேதி 18 +++++ ( காசிலே கலைவண்ணம் கண்டான் )










அந்த காலத்தில மக்கள் மத்தியில புழங்குற நாணயங்கள் இப்படி இருந்திருக்கு, ஆனா நம்ம இன்னைக்கு இத பேசக்கூடாத விஷ்யமா வச்சிருக்கோம் ..  its all in the game 


Photobucket உங்க கூட என்னையும் சேத்துகோங்க மக்கா :


|

  • Digg
  • Del.icio.us
  • StumbleUpon
  • Reddit
  • Twitter
  • RSS

பாட்டில்ஸ் வித் வால்பையன்

சுடும் குளிர் மச்சி !
இப்படி குடிச்சா சளி புடிக்காதாமே உண்மையா ?
கல்யாணத்துல ஆரம்பிச்சது ஹும் இப்ப வரைக்கும் இதுதான் துணை
மாப்பி இது நீயும் நானும் ஒகேவா ! (ஒரு புல்லு போதுமா ?)
ராக்கெட்டும் சரக்கும் ஒன்னு ரெண்டுமே மேலத்தான் கூட்டிட்டு போகும் !
இந்த சரக்கு அடிச்சா மம்மி எல்லாம் கும்மி அடிக்கும் மச்சி !
பனை மரத்துக்கு கீழ குடிச்சாத்தான கள்ளு ! 


Photobucket உங்க கூட என்னையும் சேத்துகோங்க மக்கா :


|

  • Digg
  • Del.icio.us
  • StumbleUpon
  • Reddit
  • Twitter
  • RSS

எண்ட அம்மே ! இ லோகத்தில் இங்கண நான் ஒரு ஸ்தலமும் கண்டுட்டில்லா !



கொச்சின்லேந்து ஒரு 65 கிலோ மீட்டர் தூரத்துல இருக்குது அழப்புழை அல்லது அலப்பி, இது கேரளாவின் புகழ் பெற்ற சுற்றுலா தலங்களில் ஒன்றாகும். இங்கு விஷேசமே இங்கு உள்ள படகு இல்லங்களும், வெம்பநாடு ஏரியும் தான்.  படகு இல்லங்கள் முறையே 1,2,3,4,5 படுக்கை வசதி கொண்டவைகளாக இருக்கும். தேவயை பொறுத்து பயன்படுத்தி கொள்ளலாம், தேன்நிலவு தம்பதியருக்கு
இது மிகவும் சிறந்த சுற்றுலாத்தலமாகும்.  குழுவாகவும் குடும்பம் சகிதமாக செல்பவர்களுக்கும் இது பொருந்தும்.



இந்த படகு இல்லங்கள் டிவி, டிவிடி, 5.1 ஸ்பீக்கர்ஸ், ஏசி, வெளிநாட்டுக்கு ஒப்பான குளியலறைகள் என சகலவசதியை கொண்டிருக்கும்,  படகினுள்ளே சமைப்பதற்க்கு சமையல் அறையும் உண்டு, காலையில் 10:00 மணிக்கு தொடங்கும் படகு சவாரி மதியம் 1:00 மணி வறைக்கும் நீடிக்கும், பின்பு மதிய உணவு ( சைவம் , அசைவம் இரண்டுமே உண்டு சைவம் வேண்டுவோர் முன்பே சொல்லிவிடவேண்டும்) அருந்திவிட்டு மீண்டும் தொடரும் பயணம் மாலை 6:00 வரை நீடிக்கும், 6 மணிக்கு பின்பு படகுகள் செயல்படகூடாது என்பது கேரள அரசாங்கத்தின் உத்தரவு ( மீன் பிடித்தல் நடைப்பெரும் சமயம் )




மாலை நேரம் வெம்பநாடு ஏரியின் அழகை பார்த்து கொண்டே இருக்கலாம் அருகில் அழகான் மனைவியுடன், மனைவி இல்லாதவர்கள் பாட்டிலுடன், ஆங்காங்கே புதுமண தம்பதியர் மீன்பிடித்து விளையாடும் காட்சிகளையும் காணாலாம். இரவு உணவு மெல்லிய விளக்கொளியின் துணையுடன் உண்பது ஒரு புதுவகையான உணர்வை கொடுக்கும். மீண்டும் காலை 7 மணிக்கு காபியுடன் தொடரும் பயணம் காலை உணவுடன் 8:30 மணிக்கு முடிவடையும்

படகு இல்லங்கள் முறையே

1 படுக்கையறை  -   8,000
2 படுக்கையறை  -  10,000
3 படுக்கையறை  -  13,000
4 படுக்கையறை  -  15,000
5 படுக்கையறை  -  20,000  ரூபாய்களில் கிடைக்கும், இந்த விலை உணவையும் சேர்த்தது.

மேலும் விவரங்களுக்கு இங்கே கிளிக்கவும்

பதிவர் ராமலக்ஷ்மி அவர்களின் குமரகம் பற்றிய பதிவிற்க்கு இங்கே கிளிக்கவும்

நாளைக்கு ஆழப்புழை பீச் பற்றி பார்ப்போம்..
.

Photobucket உங்க கூட என்னையும் சேத்துகோங்க மக்கா :


|

  • Digg
  • Del.icio.us
  • StumbleUpon
  • Reddit
  • Twitter
  • RSS