எண்ட அம்மே ! இ லோகத்தில் இங்கண நான் ஒரு ஸ்தலமும் கண்டுட்டில்லா !கொச்சின்லேந்து ஒரு 65 கிலோ மீட்டர் தூரத்துல இருக்குது அழப்புழை அல்லது அலப்பி, இது கேரளாவின் புகழ் பெற்ற சுற்றுலா தலங்களில் ஒன்றாகும். இங்கு விஷேசமே இங்கு உள்ள படகு இல்லங்களும், வெம்பநாடு ஏரியும் தான்.  படகு இல்லங்கள் முறையே 1,2,3,4,5 படுக்கை வசதி கொண்டவைகளாக இருக்கும். தேவயை பொறுத்து பயன்படுத்தி கொள்ளலாம், தேன்நிலவு தம்பதியருக்கு
இது மிகவும் சிறந்த சுற்றுலாத்தலமாகும்.  குழுவாகவும் குடும்பம் சகிதமாக செல்பவர்களுக்கும் இது பொருந்தும்.இந்த படகு இல்லங்கள் டிவி, டிவிடி, 5.1 ஸ்பீக்கர்ஸ், ஏசி, வெளிநாட்டுக்கு ஒப்பான குளியலறைகள் என சகலவசதியை கொண்டிருக்கும்,  படகினுள்ளே சமைப்பதற்க்கு சமையல் அறையும் உண்டு, காலையில் 10:00 மணிக்கு தொடங்கும் படகு சவாரி மதியம் 1:00 மணி வறைக்கும் நீடிக்கும், பின்பு மதிய உணவு ( சைவம் , அசைவம் இரண்டுமே உண்டு சைவம் வேண்டுவோர் முன்பே சொல்லிவிடவேண்டும்) அருந்திவிட்டு மீண்டும் தொடரும் பயணம் மாலை 6:00 வரை நீடிக்கும், 6 மணிக்கு பின்பு படகுகள் செயல்படகூடாது என்பது கேரள அரசாங்கத்தின் உத்தரவு ( மீன் பிடித்தல் நடைப்பெரும் சமயம் )
மாலை நேரம் வெம்பநாடு ஏரியின் அழகை பார்த்து கொண்டே இருக்கலாம் அருகில் அழகான் மனைவியுடன், மனைவி இல்லாதவர்கள் பாட்டிலுடன், ஆங்காங்கே புதுமண தம்பதியர் மீன்பிடித்து விளையாடும் காட்சிகளையும் காணாலாம். இரவு உணவு மெல்லிய விளக்கொளியின் துணையுடன் உண்பது ஒரு புதுவகையான உணர்வை கொடுக்கும். மீண்டும் காலை 7 மணிக்கு காபியுடன் தொடரும் பயணம் காலை உணவுடன் 8:30 மணிக்கு முடிவடையும்

படகு இல்லங்கள் முறையே

1 படுக்கையறை  -   8,000
2 படுக்கையறை  -  10,000
3 படுக்கையறை  -  13,000
4 படுக்கையறை  -  15,000
5 படுக்கையறை  -  20,000  ரூபாய்களில் கிடைக்கும், இந்த விலை உணவையும் சேர்த்தது.

மேலும் விவரங்களுக்கு இங்கே கிளிக்கவும்

பதிவர் ராமலக்ஷ்மி அவர்களின் குமரகம் பற்றிய பதிவிற்க்கு இங்கே கிளிக்கவும்

நாளைக்கு ஆழப்புழை பீச் பற்றி பார்ப்போம்..
.

Photobucket உங்க கூட என்னையும் சேத்துகோங்க மக்கா :


|

  • Digg
  • Del.icio.us
  • StumbleUpon
  • Reddit
  • Twitter
  • RSS

0 Response to "எண்ட அம்மே ! இ லோகத்தில் இங்கண நான் ஒரு ஸ்தலமும் கண்டுட்டில்லா !"

Post a Comment

உங்கள் கருத்துக்களை இங்கே கொட்டுங்கள் & தமிழில் தட்டச்சு செய்ய... இங்கே... செல்லுங்கள் ! (right click the link and select open in a new window)