டாடா பை பை - இளையகவி

வியாபார நிமித்தமாக பிரான்ஸ் செல்லவிருப்பதால் ( ஒரு மாதம் ) தற்காலிகமாக எனது வலைப்பதிவு நிறுத்திவைக்கப்படுகிறது. தங்களின் அன்புக்கு மிக்க நன்றி.


Photobucket உங்க கூட என்னையும் சேத்துகோங்க மக்கா :


|

 • Digg
 • Del.icio.us
 • StumbleUpon
 • Reddit
 • Twitter
 • RSS

பெண்மை திண்ணும் பேய்கள்

உனக்கு பிடித்த நிறத்தில்
எனக்கான புடவை உடுத்தி

நீ விரும்பும் சுவையில்
உணவு சமைத்து

நீ குளிக்கும் சோப்பில்
என் உடல் கழுவி

குடும்பமெனும் குலவிளக்காய்
குழந்தை பெற்றெடுத்து

கூப்பிட்ட போதெல்லாம்
கொஞ்சி குலாவி

சுயம் தொலைத்து
சுருண்டு கிடக்கும்-எனக்கு

அடுத்த பிறவியிலாவது
உன் ஆண்மை தின்ன
அனுமதிப்பாயா என் கணவா ?


VELU BHARATHY


Photobucket உங்க கூட என்னையும் சேத்துகோங்க மக்கா :


|

 • Digg
 • Del.icio.us
 • StumbleUpon
 • Reddit
 • Twitter
 • RSS