எண்ட அம்மே ! இ லோகத்தில் இங்கண நான் ஒரு ஸ்தலமும் கண்டுட்டில்லா !கொச்சின்லேந்து ஒரு 65 கிலோ மீட்டர் தூரத்துல இருக்குது அழப்புழை அல்லது அலப்பி, இது கேரளாவின் புகழ் பெற்ற சுற்றுலா தலங்களில் ஒன்றாகும். இங்கு விஷேசமே இங்கு உள்ள படகு இல்லங்களும், வெம்பநாடு ஏரியும் தான்.  படகு இல்லங்கள் முறையே 1,2,3,4,5 படுக்கை வசதி கொண்டவைகளாக இருக்கும். தேவயை பொறுத்து பயன்படுத்தி கொள்ளலாம், தேன்நிலவு தம்பதியருக்கு
இது மிகவும் சிறந்த சுற்றுலாத்தலமாகும்.  குழுவாகவும் குடும்பம் சகிதமாக செல்பவர்களுக்கும் இது பொருந்தும்.இந்த படகு இல்லங்கள் டிவி, டிவிடி, 5.1 ஸ்பீக்கர்ஸ், ஏசி, வெளிநாட்டுக்கு ஒப்பான குளியலறைகள் என சகலவசதியை கொண்டிருக்கும்,  படகினுள்ளே சமைப்பதற்க்கு சமையல் அறையும் உண்டு, காலையில் 10:00 மணிக்கு தொடங்கும் படகு சவாரி மதியம் 1:00 மணி வறைக்கும் நீடிக்கும், பின்பு மதிய உணவு ( சைவம் , அசைவம் இரண்டுமே உண்டு சைவம் வேண்டுவோர் முன்பே சொல்லிவிடவேண்டும்) அருந்திவிட்டு மீண்டும் தொடரும் பயணம் மாலை 6:00 வரை நீடிக்கும், 6 மணிக்கு பின்பு படகுகள் செயல்படகூடாது என்பது கேரள அரசாங்கத்தின் உத்தரவு ( மீன் பிடித்தல் நடைப்பெரும் சமயம் )
மாலை நேரம் வெம்பநாடு ஏரியின் அழகை பார்த்து கொண்டே இருக்கலாம் அருகில் அழகான் மனைவியுடன், மனைவி இல்லாதவர்கள் பாட்டிலுடன், ஆங்காங்கே புதுமண தம்பதியர் மீன்பிடித்து விளையாடும் காட்சிகளையும் காணாலாம். இரவு உணவு மெல்லிய விளக்கொளியின் துணையுடன் உண்பது ஒரு புதுவகையான உணர்வை கொடுக்கும். மீண்டும் காலை 7 மணிக்கு காபியுடன் தொடரும் பயணம் காலை உணவுடன் 8:30 மணிக்கு முடிவடையும்

படகு இல்லங்கள் முறையே

1 படுக்கையறை  -   8,000
2 படுக்கையறை  -  10,000
3 படுக்கையறை  -  13,000
4 படுக்கையறை  -  15,000
5 படுக்கையறை  -  20,000  ரூபாய்களில் கிடைக்கும், இந்த விலை உணவையும் சேர்த்தது.

மேலும் விவரங்களுக்கு இங்கே கிளிக்கவும்

பதிவர் ராமலக்ஷ்மி அவர்களின் குமரகம் பற்றிய பதிவிற்க்கு இங்கே கிளிக்கவும்

நாளைக்கு ஆழப்புழை பீச் பற்றி பார்ப்போம்..
.

Photobucket உங்க கூட என்னையும் சேத்துகோங்க மக்கா :


வடை, போண்டா, பஜ்ஜி |

 • Digg
 • Del.icio.us
 • StumbleUpon
 • Reddit
 • Twitter
 • RSS

சுவிடனில் சாதனை படைக்கும் தமிழன்


இத பத்தி நாம் அவசியம் தெரிஞ்சிக்கனும் , நம்ம நாட்டு பையன் ஒருத்தன் சுவிடன்ல பெரிய ஆளா வந்திருக்கான்னா அது நம்ம நாட்டுக்குத்தான் பெருமை
Photobucket

உங்க கூட என்னையும் சேத்துகோங்க மக்கா :


|

 • Digg
 • Del.icio.us
 • StumbleUpon
 • Reddit
 • Twitter
 • RSS

முத்தம் 5 வருடங்களுக்கு பிறகு

சம்பந்தமே இல்லாம நடக்கும் ஒரு நிகழ்ச்சி நம்மை வேறு ஒரு பாதையில் திசை திருப்பிவிடும் என்பதற்க்கு உதாரணமாக, அலுவல் காரணமாக திருச்சி சென்றேன், இரவு 12 மணியாகியும் உறக்கம் வரவில்லை, சரி தொலைக்காட்சியை பார்க்கலாம் என்று தொலைகாட்சியை இயக்க அதில் உள்ளூர் அலைவரிசையில் அலைபாயுதே படம்  ஓடிக்கொண்டிருந்தது.

நீண்ட நாட்கள் கழித்து ஒரு தமிழ் சினிமா!  படம் முடியும் தருவாயில் காதாநாயகி திவிர சிகிச்சை பிரிவில் இருப்பார்கள், அப்போது அவர்கள் பேசும் வசனம் ஒரிருவார்தைகளே ஆயினும் அந்த சூழ்நிலையில் அது மிகப்பொருத்தமாக அமைந்திருந்தது.

படம் முடிந்த பிறகும் அப்படத்தின் காட்சிகள் மனதை ஏதோ செய்து கொண்டிருந்தன, உடனே என் மனைவிக்கு அலைப்பேசினேன்,  என்னாடா இன்னும் நீ தூங்கலையா ? இல்ல மா அலைப்பாயுதே படம் பாத்துகிட்டு இருந்தேன் , அப்படியே நம்ம வாழ்கைய பாக்குற மாதிரி இருக்கு  குட்டி...................  

நீயும் நானும் ரொம்ப தூரம் போய்ட மாதிரி இருக்கு குட்டி, உன்னைய உடனே பாக்கனும் போல இருக்குடா, நான் உன்னைய நல்லா பாத்துகுறேனா ? நீ உண்மையாவே சந்தோசமா இருக்கியா ?
நான் உன்னைய காயப்படுத்துற மாதிரி பேசியிருந்தாலோ இல்ல எதாவது செய்திருந்தாலோ மன்னிச்சிக்கோ !


இப்போ மணி 12:45 

கதவ தட்டினேன்! என்ன ஆச்சி தலைவா நேத்து சரக்கா ? 12:00 மணிக்கு போண போட்டு கலாய்ச்சிட்ட? 

இல்ல சரக்கெல்லாம் இல்ல சும்மா பேசனும்னு தோணிச்சி அதான் !

சரி சரி பொய் பல்தேய் காபி போட்டு தரேன்.

நான் கேட்ட கேள்விக்கு பதில் சொல்லவே இல்ல குட்டி ஏன் ?


பல்தேச்சியா ? பக்கத்துல வாடா இங்க வா ! நீ எனக்கு புள்ள மாதிரி நாயே ! வீணா உன்னை போட்டு வருத்திக்காத! ஏன்டா திடீர்ன்னு இந்த நினைப்பு உனக்கு? பயமா இருக்கா? நான் இருக்குறவறைக்கும் உன்னை என் புள்ள மாதிரி பாத்துக்குவேண்டா பயப்படதா என்ன? உன்னால என்னை பிரிஞ்சு ரொம்ப நாளைக்கு இருக்க முடியாது என்னாளையும் தான், நம்மளுக்குள்ள இருக்கும்  இது எல்லாம் சும்மா ஒரு நிமிசத்துல காண போயிடும் பாக்குறியா? 

மடியில படுத்துகிரியாடா?

ம்

முத்தம் வேணுமாடா  ?

மணி இப்போ 6:00 AM

பரவாயில்லையே, யோகக்காரண் டா நி.
உங்க கூட என்னையும் சேத்துகோங்க மக்கா :


|

 • Digg
 • Del.icio.us
 • StumbleUpon
 • Reddit
 • Twitter
 • RSS

THE MAGICAL IPAD (Parody)

மக்கா பாத்துட்டு வயிரு குலுங்க சிரிக்கலாம் பாருங்க

உங்க கூட என்னையும் சேத்துகோங்க மக்கா :


|

 • Digg
 • Del.icio.us
 • StumbleUpon
 • Reddit
 • Twitter
 • RSS

இன்னும் என்ன என்ன பண்ணுவாங்களோ சாமி !!!

மனுசனோட பாகங்கள பிரிண்ட் பண்ணுறாங்ககோ , லேப் ல வளர்க்குறாங்க.. 2012 ல உலகம் அழிஞ்சிடுமோ ???

உங்க கூட என்னையும் சேத்துகோங்க மக்கா :


|

 • Digg
 • Del.icio.us
 • StumbleUpon
 • Reddit
 • Twitter
 • RSS