திரை விமர்சனம் எழுதும் அதிமேதாவிகளின் கவனத்துக்குவணக்கம் மக்கா, ரொம்ப நாளா எழுதல எழுதவும் கூடாதுன்னு இருந்தேன், எழுத வச்சிட்டீங்க. சரி உடுங்க மேட்டருக்கு வருவோம். ஒரு காரியத்தை ரொம்ப சிரத்தையா செய்து வரும் நீங்கள், அந்த காரியம் நன்றாக முடியும் என்ற நம்பிக்கையில் தானே செய்கிறீர்கள்? அது போல தான் படம் எடுக்குறதும். வெறும் 50 ரூபாய்க்கு டிக்கெட் வாங்கி படம் பார்க்கும் நீங்கள் இவ்வளவு யோசிக்கும் போது, படம் தயாரிப்பாளர் எவ்வளவு யோசிச்சிருப்பாரு? அப்போதைக்கு அவர் சரின்னு நினைக்கும் படத்துக்கு தான் பணம் கொடுப்பாரு அது சரியா தப்பான்னு அவர் தான் பீல் பண்ணனும் ஏன்ன்னா அது அவரு பணம்.
படம் பாத்து மக்களுக்கு புடிக்கலைன்னா அத மக்கள் சொல்லணும் அதவிட்டு நீங்க என்னமோ அவதாரம் எடுத்து வந்த மாதிரி விமர்சணம் எழுதுறது! தெரியாம தான் கேக்குறேன் மக்களோட கண்ணோட்டமும் உங்களோட கண்ணோட்டமும் ஒரே மாதிரியா இருக்கும்? ஒரு சப்ப கதையா கூட இருக்கட்டும் உனக்கு புடிக்காதது அடுத்தவனுக்கும் கண்டிப்பா புடிக்கும் சாமி! படம் பாக்க போறவனைக்கூட விமர்சணம்ங்குற பேர்றல உங்களோட கண்ணோட்டத்தை எழுதி போக விடாம பண்றது என்ன நியாயம் பாஸ்? அடுத்தவன் சோத்துல மண்ணவாரி போடுறது நமக்கு தான் கை வந்த கலையாச்சே! படம் விமர்சனம் பண்ணுறவனுங்க எல்லாம் சேந்து ஒரு படம் எடுங்க நல்லா ஓடுதான்னு பாப்போம் ? 
உங்களுக்கு புடிக்கலைன்னா நீங்க போயி பாக்காதீங்க, அத விட்டுட்டு அடுத்தவனை பாக்காதன்னு சொல்ற மாதிரி ஏன் எழுதுறீங்க. நீங்க ஒரு படம் எடுத்து அது மொக்கையானா உங்களுக்கு என்ன மாதிரி பீலிங்ஸ் இருக்குமோ அது போல தான் தயாரிப்பாள்ரும். அவரும் மனுசன் தான்யா. எப்படி அவரு உங்க வியாபாரத்தில் தலையிடுவதில்லையோ அது போல நீங்களு அவருடைய வியாபாரத்தை விமர்சனம் செய்வது கூடாது.. ஒரு படம்ங்குறது உங்களுக்கு மட்டும் தான் 2 1/2 மணி நேர கேளிக்கை ஆணா இதுதான் பல பேருக்கு வாழக்கை. அடுத்தவனை எப்போதும் உங்க கண்ணோடத்தில பாக்காதீங்க பாஸ் ! அடுத்தவன் பொண்டாட்டி என்ன புடவை கட்டனும்னு எப்படி நீங்க சொல்ல உரிமை இல்லையோ அது போல தான் இதுவும்.  
குறிப்பு :‍ இது தமிழ்பட விமர்சனம் எழுதும் எல்லோருக்கும் பொருந்தும்..
இது எண்ணோட கருத்து மட்டும் தான்


Photobucket உங்க கூட என்னையும் சேத்துகோங்க மக்கா :


|

 • Digg
 • Del.icio.us
 • StumbleUpon
 • Reddit
 • Twitter
 • RSS

18 +வீக் டே கொண்டாட்டம் "ஆடித்தள்ளுபடி"


Happy "ஆடித்தள்ளுபடி"

Photobucket உங்க கூட என்னையும் சேத்துகோங்க மக்கா :


|

 • Digg
 • Del.icio.us
 • StumbleUpon
 • Reddit
 • Twitter
 • RSS

ஒழிந்தான் இளையகவி


மக்கா என்னோட கைப்பேசியில ஒரு சின்ன பிரச்சனை வந்து எல்லா பதிவரின் கைப்பேசி எண்களும் அழிந்து விட்டன.. ( சந்தோசத்துல ஆடாதிங்க்க) ஆகவே மக்கா என்னோடு தொடர்பில் இருந்த பதிவர்களும் தொடர்பு கொள்ள நினைக்கும் பதிவர்களும் இந்த அரிய வாய்ப்பை பயன்படுத்தி தங்களது கைப்பேசி எண்களை தந்தருளுமாறு தாழ்மையுடன் கேட்டு கொள்கிறேன்... என்னுடைய மின்னஞ்சல் முகவரி neelabkrish@gmail.com

Photobucket உங்க கூட என்னையும் சேத்துகோங்க மக்கா :


|

 • Digg
 • Del.icio.us
 • StumbleUpon
 • Reddit
 • Twitter
 • RSS