பெண்மை திண்ணும் பேய்கள்

உனக்கு பிடித்த நிறத்தில்
எனக்கான புடவை உடுத்தி

நீ விரும்பும் சுவையில்
உணவு சமைத்து

நீ குளிக்கும் சோப்பில்
என் உடல் கழுவி

குடும்பமெனும் குலவிளக்காய்
குழந்தை பெற்றெடுத்து

கூப்பிட்ட போதெல்லாம்
கொஞ்சி குலாவி

சுயம் தொலைத்து
சுருண்டு கிடக்கும்-எனக்கு

அடுத்த பிறவியிலாவது
உன் ஆண்மை தின்ன
அனுமதிப்பாயா என் கணவா ?


VELU BHARATHY


Photobucket உங்க கூட என்னையும் சேத்துகோங்க மக்கா :


|

 • Digg
 • Del.icio.us
 • StumbleUpon
 • Reddit
 • Twitter
 • RSS

1 Response to "பெண்மை திண்ணும் பேய்கள்"

 1. ஜிம்ஷா says:

  ஆண்களுக்கு பிடித்த வண்ணத்தில் புடவை கட்டி, கணவனுக்கு விருப்பமான உணவு சமைத்து, கூப்பிட்டபோதெல்லாம் கொஞ்சி குலாவி, சுயம் தொலைத்து சுருண்டு கிடக்கும் அவளுக்கு
  அடுத்த பிறவியிலாவது உன் ஆண்மையை தின்ன அனுமதிப்பாயா? கணவா?


  இதைப்படிக்கும் பொழுது என் மண்டையில் தோன்றியது. அந்த பெண் சரியில்லையென்றுதான் அர்த்தம். காரணம், ஒரு பெண் ஆண்மையை தின்ன அவனிடம் என்ன அனுமதி கோருவது? அவளே அவனின் ஆண்மையை தின்னவேண்டியதுதானே?!

Post a Comment

உங்கள் கருத்துக்களை இங்கே கொட்டுங்கள் & தமிழில் தட்டச்சு செய்ய... இங்கே... செல்லுங்கள் ! (right click the link and select open in a new window)