திரை விமர்சனம் எழுதும் அதிமேதாவிகளின் கவனத்துக்கு







வணக்கம் மக்கா, ரொம்ப நாளா எழுதல எழுதவும் கூடாதுன்னு இருந்தேன், எழுத வச்சிட்டீங்க. சரி உடுங்க மேட்டருக்கு வருவோம். ஒரு காரியத்தை ரொம்ப சிரத்தையா செய்து வரும் நீங்கள், அந்த காரியம் நன்றாக முடியும் என்ற நம்பிக்கையில் தானே செய்கிறீர்கள்? அது போல தான் படம் எடுக்குறதும். வெறும் 50 ரூபாய்க்கு டிக்கெட் வாங்கி படம் பார்க்கும் நீங்கள் இவ்வளவு யோசிக்கும் போது, படம் தயாரிப்பாளர் எவ்வளவு யோசிச்சிருப்பாரு? அப்போதைக்கு அவர் சரின்னு நினைக்கும் படத்துக்கு தான் பணம் கொடுப்பாரு அது சரியா தப்பான்னு அவர் தான் பீல் பண்ணனும் ஏன்ன்னா அது அவரு பணம்.




படம் பாத்து மக்களுக்கு புடிக்கலைன்னா அத மக்கள் சொல்லணும் அதவிட்டு நீங்க என்னமோ அவதாரம் எடுத்து வந்த மாதிரி விமர்சணம் எழுதுறது! தெரியாம தான் கேக்குறேன் மக்களோட கண்ணோட்டமும் உங்களோட கண்ணோட்டமும் ஒரே மாதிரியா இருக்கும்? ஒரு சப்ப கதையா கூட இருக்கட்டும் உனக்கு புடிக்காதது அடுத்தவனுக்கும் கண்டிப்பா புடிக்கும் சாமி! படம் பாக்க போறவனைக்கூட விமர்சணம்ங்குற பேர்றல உங்களோட கண்ணோட்டத்தை எழுதி போக விடாம பண்றது என்ன நியாயம் பாஸ்? அடுத்தவன் சோத்துல மண்ணவாரி போடுறது நமக்கு தான் கை வந்த கலையாச்சே! படம் விமர்சனம் பண்ணுறவனுங்க எல்லாம் சேந்து ஒரு படம் எடுங்க நல்லா ஓடுதான்னு பாப்போம் ? 




உங்களுக்கு புடிக்கலைன்னா நீங்க போயி பாக்காதீங்க, அத விட்டுட்டு அடுத்தவனை பாக்காதன்னு சொல்ற மாதிரி ஏன் எழுதுறீங்க. நீங்க ஒரு படம் எடுத்து அது மொக்கையானா உங்களுக்கு என்ன மாதிரி பீலிங்ஸ் இருக்குமோ அது போல தான் தயாரிப்பாள்ரும். அவரும் மனுசன் தான்யா. எப்படி அவரு உங்க வியாபாரத்தில் தலையிடுவதில்லையோ அது போல நீங்களு அவருடைய வியாபாரத்தை விமர்சனம் செய்வது கூடாது.. ஒரு படம்ங்குறது உங்களுக்கு மட்டும் தான் 2 1/2 மணி நேர கேளிக்கை ஆணா இதுதான் பல பேருக்கு வாழக்கை. அடுத்தவனை எப்போதும் உங்க கண்ணோடத்தில பாக்காதீங்க பாஸ் ! அடுத்தவன் பொண்டாட்டி என்ன புடவை கட்டனும்னு எப்படி நீங்க சொல்ல உரிமை இல்லையோ அது போல தான் இதுவும்.  




குறிப்பு :‍ இது தமிழ்பட விமர்சனம் எழுதும் எல்லோருக்கும் பொருந்தும்..
இது எண்ணோட கருத்து மட்டும் தான்


Photobucket உங்க கூட என்னையும் சேத்துகோங்க மக்கா :


|

  • Digg
  • Del.icio.us
  • StumbleUpon
  • Reddit
  • Twitter
  • RSS

18 Response to "திரை விமர்சனம் எழுதும் அதிமேதாவிகளின் கவனத்துக்கு"

  1. தமிழ்ரசிகன் says:

    கரெக்டா சொன்னீங்க சார். வெப்சைட் இருக்குங்கிறதுக்காக அவனவன் அள்ளிவுடுறான். அதிலும் கேபிள் சங்கர்ன்னு ஒருத்தர். ஏதோ தமிழ்சினிமாவயே அவர்தான் கண்டுபுடிச்ச மாதிரி மத்தவங்க படத்துக்கு ரொம்ப கேவலமா விமரிசனம் எழுதுறார். அவர் வெப்சைட்ட பத்தி வேற யாரும் விமர்சின கருத்து எழுதுனா அவருக்கு செருப்பால அடிவாங்குனா மாதிரி இருக்குமுல.

  2. யாத்ரீகன் says:

    >மக்கள் சொல்லணும் <

    ஓ அப்ப ப்ளாகர்ஸ் யாருமே மக்கள் கெடயாதா .. வேற்றுகிரகவாசிகளா என்ன ?!?!

  3. தர்ஷன் says:

    கொஞ்சம் யோசித்து பாருங்கள். இப்பொழுதுதான் தமிழ் சினிமாவில் புதிய இயக்குனர்களின் வருகையால் ஒரு புதிய போக்கு உருவாகக்கூடிய சாத்தியங்கள் தெரிகின்றன. இவ்வாறான நிலையில் தனிமனித சாகசங்களை மிகைப்படுத்திக் காட்டி மீண்டும் நட்சத்திரங்களை துதி பாடும் வழமையான நிலை தோன்றாதிருக்க வேண்டுமென்பதே இந்த பதிவர்களின் நோக்காக இருக்கலாம் அல்லவா. ஏன் தாணு போன்றவர்களே சிறிய முதலீட்டில் பல யதார்த்தபூர்வமான படங்களை தர முன் வரலாமே.
    ஏழைகளை காக்க சேவல் வேடம் போட்டு வந்து சாகசம் புரியும் நாயகனையும் துண்டு கட்டி ஆடும் நடிகையையும் பார்த்து கை கொட்டி மகிழ்பவர்கள்தான் தமிழர்கள் என எப்படி தப்புக் கணக்கு போட்டார் இயக்குனர்.

  4. யோகன் பாரிஸ்(Johan-Paris) says:

    இதே வேளை சில படங்களைப் பார்க்கவில்லையா? என்று கேட்டு , நண்பர்கள் உறவினர்களைப் பார்க்கவும்.
    வைத்துள்ளோம்.
    அத்துடன் நான் பட்ட அவஸ்தையை ; என் சார்ந்தோர் பட்டுவிடக்கூடாதென எச்சரிக்கை செய்வது தப்பா?
    அவருக்கு எப்படி புளக்கரெல்லாம் விமர்சித்து துவைத்துக் காயப்போடவைக்கும் தரம்மிக்க படமெடுக்க
    உரிமையுள்ளதோ?
    அதே உரிமை அதைப் பார்க்க;பார்காது விட, பார்க்க சிபார்சு செய்ய, பார்ப்பவரைத் தடுக்க எங்களுக்கும்
    உண்டு.நாம் இது போன்ற படத்தைத் தயாரித்த தயாரிப்பாளர்; பங்குபற்றியோரின் உறவினர்களையோ; நண்பர்களியோ
    மறிப்பதில்லை. என் உறவுகளையும்; நண்பர்களியுமே!
    அதில் பதிவுலகிலும் நண்பர் உண்டென்பதால் அதிலும் கூறி எச்சரிக்கை செய்கிறோம்.

    அவர் காசைக் கொட்டிவிட்டாரென்பதற்காக "உலகத் தரமெனன்று" நாம் உளறவேண்டுமா?
    புளக் கென்பது நமது விருப்பு வெறுப்புப் பற்றிக் கூறுவதே!

  5. sriram says:

    அன்பின் Daily coffee
    I think you are trying to settle some personal scores here.

    //படம் பாக்க போறவனைக்கூட விமர்சணம்ங்குற பேர்றல உங்களோட கண்ணோட்டத்தை எழுதி போக விடாம பண்றது என்ன நியாயம் பாஸ்?//

    எனக்கு உங்களைப் பாத்து அழறதா சிரிக்கரதான்னு தெரியல - சன் டிவி டாப் டென்ல அவங்க படங்கள்தான் நிரந்தர நம்பர் ஒன். அந்த படங்களுத்தான் மக்கள் கூட்டம் கூட்டமா போறாங்களா? சன் டிவிக்கு இல்லாத ரீச் பிளாக்கு இருக்குன்னு நம்பரீங்களா?
    ஒரு பிளாக்க மிஞ்சிப்போனா 2000-3000 பேர் படிப்பாங்களா? அதில பாதிப்பேர் அயல் நாட்டில் இருப்பவர்கள் (ஆன்லைன்ல படம் பார்ப்பவர்கள்) மிச்சம் இருக்கும் 1000 பேர்ல 500 பேர் விமர்சனம் படித்து விட்டு படம் போகாமலும் அதனால் அவங்க கூட போறவங்க 500 பேர் ஆக மொத்தம் 1000 பேர் புறக்கணிப்பதால் ஒரு படம் தோல்வி அடையுமா??
    எனக்கு புரியவில்லை, உங்க்ளுக்கு புரிந்தால் சொல்லுங்கள்...

  6. நிகழ்காலத்தில்... says:

    //இது எண்ணோட கருத்து மட்டும் தான்//

    என்னோட கருத்தும் இதேதான் :))

  7. கார்த்திக் பிரபு says:

    indha padhivu comment varradhadhuku karanam ellaraiyum indha padhivu thakirukumo :)

    edhu eppadiyo neenga sonnadha corect

    adhe time nama eludhuradhala marravargal parka matanganu nichayama solla mudiyadhu

  8. ஸ்ரீதர்ரங்கராஜ் says:

    ரைட்டு.கோவப்படாதீங்க.கூலா இருங்க பாஸ்.

  9. ஸ்ரீதர்ரங்கராஜ் says:

    ரைட்டு.கோவப்படாதீங்க.கூலா இருங்க பாஸ்.

  10. வால்பையன் says:

    வந்துட்டாரய்யா யோக்கியன்!
    எல்லோரும் சொம்பை தூக்கி உள்ள வையுங்க!

    உனக்கு எதுக்குடா இந்த நாட்டாமை வேலை! அவுங்கவுங்களுக்கு லேட்டா தெரியும், அப்போ நிறுத்திகுவாங்க!

  11. ஆ.ஞானசேகரன் says:

    //படம் விமர்சனம் பண்ணுறவனுங்க எல்லாம் சேந்து ஒரு படம் எடுங்க நல்லா ஓடுதான்னு பாப்போம் ? //

    நல்லா சொல்லிபுட்டீங்க மக்கா.....

    உண்மைதான், யாரும் மொக்கை படம் எடுக்கனுமுனு நினைகிறதில்லை...

  12. Raju says:

    \\sriram said...
    அன்பின் Daily coffee
    I think you are trying to settle some personal scores here.

    //படம் பாக்க போறவனைக்கூட விமர்சணம்ங்குற பேர்றல உங்களோட கண்ணோட்டத்தை எழுதி போக விடாம பண்றது என்ன நியாயம் பாஸ்?//

    எனக்கு உங்களைப் பாத்து அழறதா சிரிக்கரதான்னு தெரியல - சன் டிவி டாப் டென்ல அவங்க படங்கள்தான் நிரந்தர நம்பர் ஒன். அந்த படங்களுத்தான் மக்கள் கூட்டம் கூட்டமா போறாங்களா? சன் டிவிக்கு இல்லாத ரீச் பிளாக்கு இருக்குன்னு நம்பரீங்களா?
    ஒரு பிளாக்க மிஞ்சிப்போனா 2000-3000 பேர் படிப்பாங்களா? அதில பாதிப்பேர் அயல் நாட்டில் இருப்பவர்கள் (ஆன்லைன்ல படம் பார்ப்பவர்கள்) மிச்சம் இருக்கும் 1000 பேர்ல 500 பேர் விமர்சனம் படித்து விட்டு படம் போகாமலும் அதனால் அவங்க கூட போறவங்க 500 பேர் ஆக மொத்தம் 1000 பேர் புறக்கணிப்பதால் ஒரு படம் தோல்வி அடையுமா??
    எனக்கு புரியவில்லை, உங்க்ளுக்கு புரிந்தால் சொல்லுங்கள்...\\

    பெரிய்ய்ய்ய்ய்ய்ய்ய‌ ரிப்பீட்டு..!

  13. Raju says:

    இந்த பதிவுல கமெண்ட் மாடுரேஷன் வேற...!
    நீங்க முதல் கமெண்டாக தமிழ் ரசிகனோட கமெண்டை அனுமதிச்சுருக்குறதுல தெரியுது ,
    நீங்க கமெண்ட் மாடுரேஷன் பண்ர லட்சணம்..!
    நல்லா இருங்க சாமிகளா..!

  14. Raju says:

    அடங்கொன்னியா, லேபிளப்பார்ரா..?
    சமூக அக்கறையாமா..?

  15. Anonymous says:

    ஏனய்யா, தயாரிப்பாளர் பணத்தை கொட்டி எடுத்து விட்டார் என்பதற்காக பாடாவதியான படங்களுக்கு தோரணம் கட்டியா கொண்டாட முடியும்?, தயாரிப்பாளருக்கு அவர் பணம் பெரிதென்கிற மாதிரி எதிர்பார்ப்போடு போகிற மக்களுக்கும் அவரவர் பணம் பெரிதுதானே?, முதலில் விமர்சனம் தவறு என்கிற உமது கருத்தே தவறானது, அதை முதலில் மாற்றிக்கொள்ளுங்கள், நல்ல திரைப்படங்களுக்கு வரவேற்பு இன்றளவும் இருந்துகொண்டிருகக்கிறது. தயாரிப்பாளர்கள் ஹீரோ ஹீரோயின்களின் மூஞ்சிகளை மட்டும் பார்த்துகொண்டு பணத்தை போட்டால் குப்பைக்கு தான் போகும் என்கிற நிலை உருவாக வேண்டும், அதை நாம் தான் உருவாக்க வேண்டும், மற்ற மீடியாக்கள் வெளியிடுகிற விமர்சனங்கள் குறிப்பிட்ட சிலரால் மட்டும் தொகுத்து அளிக்கப்பட்டு அனைவராலும் படிக்க, கேட்கபடுகிறது, அது சரியான விமர்சனங்களாகாது, ப்ளாகர் போன்ற தளங்களில் மட்டுமே மக்களின் கருத்துக்கள் மக்களிடமே எந்தவித இடைக்கலப்புமில்லாமல் போய் சேருகிறது. எனவே துதி பாடுவதை விட்டுவிட்டுங்கள். அவரவர் பார்வையில் எழுதப்படும் விமர்சனத்தில் தவறில்லை. நீங்கள் இவ்வளவு ஆற்றாமையோடு சொல்லியிருப்பதை பார்த்தால், ஏதோ மொக்கை படத்துக்கு தயாரிப்பாளராகி கொட்டு வாங்கினவரோ என்ற சந்தேகம் எழுகிறது?.

  16. KARTHIK says:

    // சன் டிவிக்கு இல்லாத ரீச் பிளாக்கு இருக்குன்னு நம்பரீங்களா? //

    சரியா சொன்னீங்க ஸ்ரீராம் :-))

    கலை இளக்கியம் எல்லாமே விமர்சனத்துக்கு உட்பட்டதுதான்.
    காசு கொடுத்து படம் பாக்குரான்.புடிசா நல்லா இருக்குன்னு எழுதுரான்.புடிக்கலைனா புடிக்கலைனு சொல்லுரான்.இதுல உனக்கு என்ன பிரச்சனை.அவனுக்கு அந்த விமர்சனம் பண்ணுர உரிமை கூட இல்லைனா அவன் ஏன் அத பாக்கனும்.
    இல்ல இவங்க தான் ஏன் சினிமா எடுக்கனும்.

    டேய் போடா போயி பொழப்பபாருடா
    இல்ல உன் பையன் கைலயே அடிபடுவ :-))

  17. இளைய கவி says:

    all ppl thanks a lot for coming..

  18. KARTHIK says:

    // all ppl thanks a lot for coming.. //

    டேய் இதுக்கு இது பதில் இல்லையே.

Post a Comment

உங்கள் கருத்துக்களை இங்கே கொட்டுங்கள் & தமிழில் தட்டச்சு செய்ய... இங்கே... செல்லுங்கள் ! (right click the link and select open in a new window)