திரை விமர்சனம் எழுதும் அதிமேதாவிகளின் கவனத்துக்கு


வணக்கம் மக்கா, ரொம்ப நாளா எழுதல எழுதவும் கூடாதுன்னு இருந்தேன், எழுத வச்சிட்டீங்க. சரி உடுங்க மேட்டருக்கு வருவோம். ஒரு காரியத்தை ரொம்ப சிரத்தையா செய்து வரும் நீங்கள், அந்த காரியம் நன்றாக முடியும் என்ற நம்பிக்கையில் தானே செய்கிறீர்கள்? அது போல தான் படம் எடுக்குறதும். வெறும் 50 ரூபாய்க்கு டிக்கெட் வாங்கி படம் பார்க்கும் நீங்கள் இவ்வளவு யோசிக்கும் போது, படம் தயாரிப்பாளர் எவ்வளவு யோசிச்சிருப்பாரு? அப்போதைக்கு அவர் சரின்னு நினைக்கும் படத்துக்கு தான் பணம் கொடுப்பாரு அது சரியா தப்பான்னு அவர் தான் பீல் பண்ணனும் ஏன்ன்னா அது அவரு பணம்.
படம் பாத்து மக்களுக்கு புடிக்கலைன்னா அத மக்கள் சொல்லணும் அதவிட்டு நீங்க என்னமோ அவதாரம் எடுத்து வந்த மாதிரி விமர்சணம் எழுதுறது! தெரியாம தான் கேக்குறேன் மக்களோட கண்ணோட்டமும் உங்களோட கண்ணோட்டமும் ஒரே மாதிரியா இருக்கும்? ஒரு சப்ப கதையா கூட இருக்கட்டும் உனக்கு புடிக்காதது அடுத்தவனுக்கும் கண்டிப்பா புடிக்கும் சாமி! படம் பாக்க போறவனைக்கூட விமர்சணம்ங்குற பேர்றல உங்களோட கண்ணோட்டத்தை எழுதி போக விடாம பண்றது என்ன நியாயம் பாஸ்? அடுத்தவன் சோத்துல மண்ணவாரி போடுறது நமக்கு தான் கை வந்த கலையாச்சே! படம் விமர்சனம் பண்ணுறவனுங்க எல்லாம் சேந்து ஒரு படம் எடுங்க நல்லா ஓடுதான்னு பாப்போம் ? 
உங்களுக்கு புடிக்கலைன்னா நீங்க போயி பாக்காதீங்க, அத விட்டுட்டு அடுத்தவனை பாக்காதன்னு சொல்ற மாதிரி ஏன் எழுதுறீங்க. நீங்க ஒரு படம் எடுத்து அது மொக்கையானா உங்களுக்கு என்ன மாதிரி பீலிங்ஸ் இருக்குமோ அது போல தான் தயாரிப்பாள்ரும். அவரும் மனுசன் தான்யா. எப்படி அவரு உங்க வியாபாரத்தில் தலையிடுவதில்லையோ அது போல நீங்களு அவருடைய வியாபாரத்தை விமர்சனம் செய்வது கூடாது.. ஒரு படம்ங்குறது உங்களுக்கு மட்டும் தான் 2 1/2 மணி நேர கேளிக்கை ஆணா இதுதான் பல பேருக்கு வாழக்கை. அடுத்தவனை எப்போதும் உங்க கண்ணோடத்தில பாக்காதீங்க பாஸ் ! அடுத்தவன் பொண்டாட்டி என்ன புடவை கட்டனும்னு எப்படி நீங்க சொல்ல உரிமை இல்லையோ அது போல தான் இதுவும்.  
குறிப்பு :‍ இது தமிழ்பட விமர்சனம் எழுதும் எல்லோருக்கும் பொருந்தும்..
இது எண்ணோட கருத்து மட்டும் தான்


PhotobucketPhotobucket உங்க கூட என்னையும் சேத்துகோங்க மக்கா :


|

 • Digg
 • Del.icio.us
 • StumbleUpon
 • Reddit
 • Twitter
 • RSS

6 Response to "திரை விமர்சனம் எழுதும் அதிமேதாவிகளின் கவனத்துக்கு"

 1. கந்தப்பு says:

  சரியாக கேள்வி கேட்டீர்கள்

 2. கார்க்கி says:

  சரிங்கண்ணா.. ஒரு டவுட்டு..

  பதிவெழுதறது அவங்கவங்க விருப்பம். உங்களுக்கு பிடிக்காத, தப்பா தோன்ற பதிவு மத்தவஙக்ளுக்கு பிடிக்கலாம். சரியா தோணலாம்.
  உங்க பதிவுல சினிமா என்ர இடத்தில் விமர்சனத்தையும், தயாரிப்பாளர் இடத்தில் பதிவரையும், மக்கள் இடத்தில் படிக்கும் வாசகர்களையும் ஒப்பிட்டு பாருங்க. அவங்க என்னென்னெ எழுதனும்ன்னு சொல்றதுக்கு நீங்க யாருங்க? படிக்கிரவஙக்ளுக்கு பிடிகக்லைன்னா அவர ஒதுக்கிட போறாங்க. பிடிச்சா தொடர்ந்து படிக்க போறாங்க.

  //அடுத்தவன் பொண்டாட்டி என்ன புடவை கட்டனும்னு எப்படி நீங்க சொல்ல உரிமை இல்லையோ அது போல தான் இதுவும்.
  //

  இது போலதான் நீங்க சொல்றதும். யார் என்ன் என்ன எழுதனும்ன்னு சொல்றது

  :))) ஃப்ரீயா விடுங்க பாஸ்...

 3. ராஜ நடராஜன் says:

  டாக்கீஸ் காலியா கிடக்குது!என்ன விசயம்?

 4. ராஜ நடராஜன் says:

  அரசியலும்,சினிமாவும் தனிமனித வாழ்வோடு கூடப் பயணிப்பவை.அகமும்,புறமும் பாதிப்பதால் விமர்சனங்கள் தோன்றுவது இயற்கை.அவதார் 2 குளோபல் அவார்டுகளை இதுவரை தட்டிச் சென்றுள்ளது.அதற்கும் கூட ரசனையின் அடிப்படையில் எதிர் விமர்சனம் கண்டேன்.இணைய விமர்சனங்கள் ஒரு படத்தை புரட்டிப்போடும் காலம் ரொம்ப......தூரம்.

 5. வால்பையன் says:

  அப்பப்ப எதாவது கொழுத்தி போடு மச்சி!

 6. NewWorldOrder says:

  i was thinking the same to write for athi-medhavi vimarsakars. kindly consider major thinks in a movie, not minor problems

Post a Comment

உங்கள் கருத்துக்களை இங்கே கொட்டுங்கள் & தமிழில் தட்டச்சு செய்ய... இங்கே... செல்லுங்கள் ! (right click the link and select open in a new window)