பூக்காரன் -- புனைவு..


ராமசாமி காலையில குவாட்டருக்கு எவண்டா சிக்குவானு பாத்துகிட்டு  வாசலில் எச்சி பீடி குடுச்சிகிட்டு யோசனையாய் இருந்தான்.
 தூரத்தில் சைக்கிளில் கோவணம் கட்டிய கோயிந்தசாமி வேகமாக இவனை நோக்கி வந்தான். ராமசாமிக்கோ குஷி கிளம்பியது. ஓசி குடிக்கு ஆள் கிடைத்த மகிழ்ச்சி அவணுக்கு,


மாமா என்ன இப்படி உக்காந்திருக்க ? ஊர்ல என்ன நடக்குதுன்னு கூடத்தெரியமா என்ன பண்ணிகிட்டு இருக்க? இன்னைக்கு நம்ம ஊர்ல 2 கடைக்காரனுங்களுக்கு பிரச்சனை மாமா. வா போயி வெட்டி பஞ்சாயத்து பண்ணி நாம ஒரு குவாட்டர கரெக்ட் பண்ணலாம்னு கோயிந்தசாமி சொல்ல , ஓசி குவாட்டர கரெக்ட பண்ண 2 பேரும் கிளம்பினாங்க.


போறவழியில நம்ம இன்னும் ரெண்டு மூனு கடைக்காரனுங்களையும் பிரச்சனையில  கோத்து விடுவோம் கோயிந்து. அப்ப தான் நம்மள ஊர்குள்ள மதிப்பானுங்க என்றான் ராமசாமி. அது எப்படி மாமா முடியும் ? எல்லாரும் அவன் அவன் பொழப்பத்தான பாக்குறானுங்க, அப்படி இருக்கும் போது எப்படி மாமா முடியும்ன்னு அப்பாவியா கேட்டான் கோயிந்து.

டேய் நாமெள்ளாலாம் இப்படியே வெட்டி பஞ்சாயத்து பண்ணித்தான் பொழைக்கமுடியும், பொழப்புதனம் பண்ணனும்னா நாம் பிரச்சனை இல்லாட்டியும் பிரச்சனை பண்ணனும்டா என்றான் ராமசாமி. எனக்கு ஒன்னும் புரியல மாமா என்றான் கோயிந்து வழக்கப்படி. டேய் நான் சொல்றத கவனமா கேளு, இப்பொ ஊர்குள்ள என்ன பிரச்சனை ? பூக்காரிய தேவை இல்லாம நரசிம்மன் திட்டி புட்டான் அது தான? ஆமாம் என்றான் கோயிந்து. 

சரி அதுக்கப்புறம்,  என்ன ஆச்சி என்று ராமசாமி வினவ,  மேட்டரு சப்புன்னுள்ள போயிடுச்சு! நரசிம்மன் தான் பூக்கரிய திட்டுனது தப்புன்னு ஊர் முன்னாடி கன்னத்துள்ள போட்டிகிட்டான்லா. என்றான் கோயிந்து. இப்பசொண்ணியே அதுதாண்டா நம்ம குவார்ட்டருக்கு பாயிண்டு என்றான் ராமசாமி.  எப்படி மாமா என்றான் கோயிந்து. டேய் நாம பண்ற இந்த மொள்ளமாறிதனத்துல எவனும் நம்மள ஏன் எப்படின்னு கேக்க கூடாது, கேக்கவும் மாட்டாணுங்க, ஏன்னா ஊர்காரனுங்க எவனுமே ஒற்றுமையா இல்ல. 

அதுனால நாம இப்ப பஞ்சாயத்த ஆரம்பிச்சி நரசிம்மன் பூக்காரி திட்டினது தப்புன்னு ஆலமரத்தடியில உக்காந்து பேச ஆரம்பிப்போம், வழியில போற 1,2 வேகாத பயபுள்ளய வந்திச்சின்னு வையி அப்படியே ஒரே அமுக்கு,  அவங்களையும் நாம கூட சேத்து பிரச்சனைய பெருசு பண்ணுவோம், நம்மள கேக்க யாருடா இருக்கா ? திருப்பி சொல்றேன் கேளு நாம பண்ற இந்த மொள்ளமாறிதனத்துல எவனும் நம்மள ஏன் எப்படின்னு கேக்க கூடாது, கேக்கவும் மாட்டாணுங்க, ஏன்னா ஊர்காரனுங்க எவனுமே ஒற்றுமையா இல்ல.  தான் ஊட்டுல நடந்தாத்தான் அய்யோ அம்மான்னு கத்துவானுங்க, அடுத்தவன் ஊட்டுல நடந்த கமுக்கமா இருந்துக்குவானுங்க என்றான் ராமசாமி. கேட்டு கொண்டிருந்த கோவிந்துக்கு ஒரே சந்தோசம் மற்றும் ஆச்சர்யம். மாமா நீதான் மாமா மூளைக்காரன் , ஒரே சமயத்துல குவாட்டர கரெக்ட் பண்ற அப்படியே மேட்டரயும் பெருசாக்குற என்றான்.


சரிமாமா இந்த பிரச்சனை முட்ஞ்சிடிசுன்னு வையி நாளைக்கு குவாட்டருக்கு என்ன பண்றது மாமா என்றான் கோயிந்து, அட பண்ணாட அதுக்கு தான், வேர 2 ,3 கடைக்காரனுங்கள பிரச்சனையில சம்பந்தேமே இல்லாமா கோத்து விடுறோம்ல, அவங்ககிட்ட பஞ்சாயத்த கண்டினியு பண்ணாலாம் என்றான், பொழுது சாய்ந்தது இருவரும் ஆலமரம் நோக்கி நடையை கட்டினர்.Photobucket
உங்க கூட என்னையும் சேத்துகோங்க மக்கா :


|

 • Digg
 • Del.icio.us
 • StumbleUpon
 • Reddit
 • Twitter
 • RSS

5 Response to "பூக்காரன் -- புனைவு.."

 1. Dinesh says:

  பதிவுலகில் நடக்கும் பிரச்சினையை ஒரு சிறு கதை மூலம் சொல்லிட்டீங்களே... உங்களோட திறமையோ திறமை...

 2. நான் தமிழன். says:

  மறுபடியுமா?

 3. Dr.P.Kandaswamy says:

  இந்த பஞ்சாயத்து எப்ப முடியும்?

 4. beer mohamed says:

  அதிரடி செய்தி சொல்வது
  என்னையும் சேர்த்து ஒரு குவர்ட்டருக்கு செட பண்ணுங்கபா சூப்பரப்பு
  http://www.athiradenews.blogspot.com/

 5. mrknaughty says:

  நல்லா இருக்கு
  thanks
  mrknaughty
  click here to enjoy the life

Post a Comment

உங்கள் கருத்துக்களை இங்கே கொட்டுங்கள் & தமிழில் தட்டச்சு செய்ய... இங்கே... செல்லுங்கள் ! (right click the link and select open in a new window)