ஹனிமூன் தேசங்கள் - மூணார்

வணக்கம் மக்களே,  இந்த சுற்றுலா துறையில இருந்திட்டு நம்ம பதிவர்களுக்கு ஒன்னுமே செய்யலேன்னா எப்படி ? அதுனால தான்   இந்த பதிவு ( வாரம் ஒரு ஹனிமூன் தேசம் ).ஏற்க்கனவே நம்ம இங்கே ஆழப்புழைய பத்தி பார்த்தாச்சு அதுனால இப்போ மூணார்.
படிக்கிறதுக்கு முன்னாடி இந்த படத்த பாருங்க.. இது தான் மூணார். இதுக்கு கீழ இருக்கும் தகவல் எல்லாம் சும்மா வெறும் தகவல தான்.. காதல்ன்னா மூணார் , காமம்ன்னா மூணார் அப்படின்னு கவித எழுத வைக்கும் இடம் தான் மூணார் மக்கா !
எல்லாத்தயும் மறந்திட்டு காதலும் ஊடலும் நிறைந்த ஹனிமூன் கொண்டாட மூணார் தான் மக்கா..  இனி என்னா யோசனை அடி பட்டய கிளப்புங்கள்....மூணார் கடல் மட்டத்திலேந்து 6000 அடி மேல இருக்கு, பருவநிலை எப்போதுமே ரொம்ப ரொமேண்டிக்கா இருக்கும், சுத்தியும் பச்சை மலைகளும் டீ எஸ்டேட்களும் அருவிகளும் ரொம்ப அருமையா இருக்கும் மக்களே, அதுனால தான் நம்ம ஹனிமூன் தேசங்கள்ல ரொம்ப முக்கியமான இடத்தை பிடிக்குது.மூணார் எப்போ வேணா போகலாம் அப்படி ஒரு இடம்,  கொஞ்சம் மழைய பொருட்படுத்தாத ஆளுங்களுக்கு மூணார் ஒரு சொர்க்கம், ரொம்ப குளிருமோன்னு பயப்படாதீங்க. அதுதான் பக்கத்திலேயே புது மனைவி இருப்பாங்களே ( இதை ஆப் தி ரெக்காட்ல வைங்க ).மூணார் போறவங்க நல்ல குளிர் தாங்கும் உடைகளையும், மழை நேரத்துக்கு தேவையான உடைகளையும் எடுத்து செல்வது நல்லது,  டெம்பரேச்சர் 0c - 25c வரைக்கும் இருக்கும். 
மூணார் பக்கதிலே பாக்க வேண்டிய இடங்கள் அப்படின்னு 


பாத்தாக்கா.  
 1) மேட்டுபட்டி டேம் ( மூணார்லிருந்து 13கிமி தொலைவில் இருக்கு, கடல் மட்டத்திலிருந்து சுமார் 1700 அடி உயரத்தில் அமைக்க பட்டுள்ளது, இங்கே இந்தியா - சுவிஸட்சர்லாந்து கூட்டமைப்பில் ஒரு அழகிய மாட்டு பண்ணை உள்ளது, பார்வையாளர்கள் நேரம் 0900 - 1100 hrs and 1400 - 1530 hrs.  தலைக்கு 5 ரூபாய் வீதம் நுழைவுக்கட்டணம் வசுலீக்கிறார்கள், மொத்தம் உள்ள 11 பண்னைகளில் 3 பண்ணைகளை மட்டுமே பார்க்க அனுமதிக்கிறார்கள்)


2) போத்தமேடு.


 போத்தமேட்டிலிருந்து பார்த்தால் மூணாரின் மொத்த அழகையும் கண்டுகளிக்கலாம், இது ஒரு நல்ல வியூபாயிண்ட். இந்த இடம் டிரக்கிங் மற்றும் ஜங்கிள் வாக் போண்ற நிகழ்வுகளுக்கு ரொம்ப 
ஏற்றது. 
3) தேவி குளம் ( 7 கிமி தொலைவு முணாரிலிருத்து )


இங்கிருக்கும் சீதா தேவி ஏரி மிகவும் அழகானது இந்த ஏரி  trout fishing. கிற்க்கு மிகவும் சிறந்தது. 


4) பள்ளிவாசல் ( 8 கிமி தொலைவு முணாரிலிருத்து )
 இங்குதான் கேரளாவின் முக்கியமான Hydro Electric Project 


செயல்படுகிறது. 


5) அட்டுக்கல் ( 9 கிமி தொலைவு முணாரிலிருத்து )


அட்டுக்கல் முணார் மட்டும் பள்ளிவாசல் இடையில் அமைந்துள்ளது. இங்கு காணப்படும் அருவிகளும் மலை பிரதேசங்களும் நம்மை பிரமிப்பில் ஆழ்வதில் ஆச்சர்யமில்லை .இன்னும் சித்திராபுரம், லாக் ஹார்ட் கேப், ராஜமலா, இரவிக்குளம் தேசிய பூங்கா  ( 15 கிமி தொலைவு முணாரிலிருத்து ). பற்றி எழுதிக்கொண்டே போகலாம். பதிவின் நீளம் கருதி முடித்து கொள்கிறேன்.மேற் கொண்டு தகவல் தெரிந்து கொள்ள விரும்பினால் என்னை தாரளமாக தொடர்பு கொள்ளலாம்.

மொபைல் :- +91 9894916242, +91 9043216661

இமெயில் :- contact.s.teamholidays@gmail.com

Photobucket உங்க கூட என்னையும் சேத்துகோங்க மக்கா :


|

  • Digg
  • Del.icio.us
  • StumbleUpon
  • Reddit
  • Twitter
  • RSS

0 Response to "ஹனிமூன் தேசங்கள் - மூணார்"

Post a Comment

உங்கள் கருத்துக்களை இங்கே கொட்டுங்கள் & தமிழில் தட்டச்சு செய்ய... இங்கே... செல்லுங்கள் ! (right click the link and select open in a new window)