பழசை புதுசாக்குவது எப்படி? அட நிஜம்தாங்க
உங்கள் பழைய தேய்ந்த நிலையில் உள்ள வினையல் ரெக்கார்டில் இருக்கும் மதிப்புவாய்ந்த பழைய பாடல்களை டிஜிட்டல் ( MP3) ஆக்குவதற்க்கு சோனி நிறுவனம் வெளியிட்டுள்ள PS-LX300USB உதவும் மேலும் இதில் Sound Forge Audio Studio உள்ளமைந்து இருப்பது மிகச்சிறப்பாகும், இது தங்கள் வினையல் ரெக்கார்டில் இருக்கும் தேவையற்ற சத்தங்களை முற்றிலும் நீக்க வசதி செய்கிறது.

உங்க கூட என்னையும் சேத்துகோங்க மக்கா :

இது 33-1/3 , 45 rpm வேகங்களிலும் செயல்படகூடியது. மேலும் இதில் USB outம் இருக்கிறது. விலை இப்போது $150 என மதிப்பிடபட்டுள்ளது, இது அடுத்த மாதக்கடைசியில் சந்தையில் கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
மேலும் தகவலுக்கு இங்கே கிளிக்குங்கோ!!!!!!

நன்றி நண்பரே! இதே போல பழைய ஆடியோ காசெட்டில் உள்ள பாடல்க்ளை எப்ப்டி MP3 கோப்புக்களாக மாற்றி கணினியில் ஏற்றுவது என்பது உங்களுக்குத் தெரிந்திருந்தால் அதையும் சொல்லித்தருக!
எந்து மின்னஞ்சல் முகவை:
umayal2005@gmail.com
திரு,SP.VR. SUBBIAH அவர்களே,
வருகைக்கு மிக்க நன்றி, தங்களின் பழைய ஆடியோ காசெட்டில் உள்ள பாடல்களை MP3 கோப்புக்களாக மாற்றுவது மிக எளிது.. தங்களின் Tape Recorder ல் இருக்கும் LineOut என்ற வசதியை தாங்கள் பயன் படுத்திக்கொள்ளலாம். இதற்க்கு தங்கள் கணிணியில் audio editing software எதாவது ஒன்றை (Like :- audacity ) நிறுவுவது அவசியம் செய்முறை கீழே
1) முதலில் 2 பக்கமும் Streopin கொண்ட ஒரு ஒயரை தயார் செய்யவும், ( இது எல்லா மின்னனுபொருட்கள் விற்கும் கடைகளில் கிடைக்கும் விலை ரூபாய் 50 க்குள் இருக்கும்)
2) அதன் ஒரு முனையை தங்களின் Taperecorder ன் lineout ல் சொருகவும்
3) மறுமுனையை தங்களின் கணிணியின் line in ல் சொருகவும் .
4) பின்பு தங்களின் கேசட்டை ஓட விடவும்
4) கேசட் ஓட ஆரம்பிக்கும் போதே தங்கள் software ல் உள்ள ரெக்கார்ட் பட்டனை அழுத்தவும்
5) இப்போது தங்களின் கேசட்டில் உள்ள பாடல்கள் .WAV என்ற கோப்பாக உங்கள் கணிணியில் சேமிக்க தொடங்கும்.
6) இவ்வாறு சேமிக்கப்பட்ட கோப்புகளை நீங்கள் SAVE AS அல்லது EXPORT AS என்ற கட்டளை மூலம் MP3 யாக மாற்றிக்கொள்ளலாம்.