நான் யாருக்கும் பயப்படவில்லை, பயந்ததும் இல்லை தொடரும்...

படத்தை கிளிக்கி பெருசா பாக்கவும்
இவர் எங்க வீட்டு ஐய்யனாரு
வேட்டைக்கு போறாரு
சர்கார தட்டி கேட்க சக்தியோட போறாரு
கத்தி கேட்டாலும் பதில் இல்லை அதனால
கத்தியோட போறாரு.
கேட்டு கேட்டு பயன் இல்லை அதனால
கேடையத்தோடு போறாரு
லஞ்சம் ஒழிக்க போறாரு- என் ராசா
பஞ்சம் தீர்க்க போறாரு.
பாராள போறாரு - என் சிங்கம்
பட்டினிய ஒழிக்க போறாரு.
கொள்ளையடிக்கும் கூட்டம் எல்லாம்
கொளுத்திவிட போறாரு - என் தங்கம்
சாதி ஒழிக்க போறாரு இவர்
சங்கடம் தீர்க்க போறாரு
பச்சை தமிழன் வாழ்வதற்க்கே பல
திட்டம் போட போறாரு
பாங்குடனே தமிழ் பயில கட்டாய
சட்டம் போட போறாரு
அன்னாடங்காச்சியெல்லாம் அரண்மனையில் வாழவைக்க
அரசே அசரரும் யோசனைய சொல்லுவாரு.
மாசற்ற மானிடராய் மரம் போல வாழுவாரு.
இவர் எங்க வீட்டு ஐய்யனாரு
வேட்டைக்கு போறாரு


பின் குறிப்பு :-

இயற் பெயர்  : சசாங் கிருஷ்

வயது               :- ஒரு புல் + ஒரு ஆப் + ஒரு குவாட்டர்

தொழில்         :- முழு நேர கூலிப்படை தலைவர் ( அம்மாக்கு மட்டும் )

படிப்பு             :- அ முதல் இ வரை  இப்போது படித்துள்ளார்

பொழுது போக்கு :- ஆக்கலும் அழித்தலும் ( இடத்தை பொருத்தது )


பிடித்தது      :- ஜட்டி போடாமல் சுற்றுவது


பிடிக்காதது :- அம்மா சமைக்கும் கண்றாவி சாப்பாடு.


சமீபத்திய சாதனை :- தொடர்ந்து 2 மொபைல் போன்களை தண்ணிரில் போட்டது.

நீண்ட கால சாதனை :- இளைய கவிக்கு மகனாக இருப்பது.

எதிர்கால திட்டம் :- ஒரு நல்ல அப்பாவாக ஆகவேண்டும் ( பிரித்தீக்கு நான் கேரண்டி )


Photobucket உங்க கூட என்னையும் சேத்துகோங்க மக்கா :


|

 • Digg
 • Del.icio.us
 • StumbleUpon
 • Reddit
 • Twitter
 • RSS

3 Response to "நான் யாருக்கும் பயப்படவில்லை, பயந்ததும் இல்லை தொடரும்..."

 1. மங்களூர் சிவா says:

  /
  பிடித்தது :- ஜட்டி போடாமல் சுற்றுவது
  /

  Good Shashaank keep it UP ^

 2. தமிழ்நெஞ்சம் says:

  //சமீபத்திய சாதனை :- தொடர்ந்து 2 மொபைல் போன்களை தண்ணிரில் போட்டது.

  நீண்ட கால சாதனை :- இளைய கவிக்கு மகனாக இருப்பது.//

  Good Yaar. I enjoyed these lines.

  This thing is happening always in any house.

 3. சுரேகா.. says:

  பையன் சூப்பரா இருக்கான்ப்பா!

  கண்ணுலயே எல்லா லொள்ளும் தெரியுது!

  அப்பா மாதிரி இல்லாம
  நல்லவனா இருக்க வாழ்த்துக்கள்
  :)))))))))))))))

Post a Comment

உங்கள் கருத்துக்களை இங்கே கொட்டுங்கள் & தமிழில் தட்டச்சு செய்ய... இங்கே... செல்லுங்கள் ! (right click the link and select open in a new window)