எனக்கு மட்டும் ஏன் இப்படி ?இன்று காலை சுமார் 9:00 மணியளவில் நடந்தது அந்த கொடூர சம்பவம்.


காலை உணவருந்தும் போது பக்கதில் வந்து அம்மணி, ஏங்க அன்னைக்கு காலைல ஒரு மேட்டர் சொண்ணீங்களே அது நியாபகம் இருக்கான்னு கேட்டாங்க, என்னைக்கு காலைல மேடம் னு நான் கேட்டேனா அப்ப அதுதாங்க அன்னைக்கு காலைல நீங்க கூட வெளிய நின்னு கிட்டு அவர்கிட்ட பேசிகிட்டு இருந்தீங்களே அப்போ!


எனக்கு இன்னும் சரியா புரியல கொஞ்சம் தெளிவா சொல்லுங்க மேடம்ன்னு சொன்னேன், யோவ் அறிவு கெட்ட மனுசா இதுக்கு மேல தெளிவா எப்படி சொல்றதுன்னு கேட்டாங்க மேடம். சரி இரு உனக்கு புரியற மாதிரி சொல்றேன்னு சொல்லிட்டு "அதுதாங்க அன்னைக்கு காலைல நீங்க கூட வெளிய நின்னு கிட்டு அவர்கிட்ட பேசிகிட்டு இருந்தீங்களே அப்போ! " அப்படின்னாங்க.


என்னோட சிற்றிவுக்கு எட்டல, சரி விதிய விதியால வெல்வோம்ன்னு, ஓஅதுவா அன்னைக்கு வெளிய நின்னு கிட்டு அவர்கிட்ட பேசிகிட்டு இருந்தேனே அப்போதானே, ஒன்னும் இல்ல மேடம் நான் என்ன சொன்னேன்னாக்க நீங்க கட்டி இருக்கும் புடவை ரொம்ப நல்லா இருக்குன்னு இந்த புடவைல பாக்கும் போது நீங்க சூப்பரா இருக்கீங்ன்னு சொண்னேன்.

இதத்தான் சுத்தி வளைச்சி சொண்ணீங்களான்னு கேட்டுட்டு மேடம் சிருச்சுகிட்டே போய்ட்டாங்க.. ஆனா இப்பவரைக்கும் என்னைக்கு, யார்கூட, எப்போ, என்ன பேசினேன் னு குழம்பிபொய் இருக்கேன் மக்கா ! உங்களுக்கு ஏதாவது தெரியுமா ?
Photobucket உங்க கூட என்னையும் சேத்துகோங்க மக்கா :


|

 • Digg
 • Del.icio.us
 • StumbleUpon
 • Reddit
 • Twitter
 • RSS

6 Response to "எனக்கு மட்டும் ஏன் இப்படி ?"

 1. ஆ.ஞானசேகரன் says:

  ஓஓஓ... அதுவா

 2. இளைய கவி says:

  //ஆ.ஞானசேகரன் said...
  ஓஓஓ... அதுவா

  June 25, 2009 11:14 AM/

  ஆமா அதேதான் தல

 3. நர்சிம் says:

  ராமச்சந்திரனா என்றேன்
  ராமச்சந்திரன் தான் என்றார்
  எந்த ராமச்சந்திரன் என்று கேட்கவில்லை
  எந்த ராமச்சந்திரன் என்று
  அவரும் சொல்லவில்லை
  - நகுலன்

 4. வேத்தியன் says:

  ஒருவேளை அதுவா இருக்குமோ???

  ச்சீ ச்சீ இருக்காது..
  இதுவா இருக்கலாமா???

  ஓ..
  புரிஞ்சுடுச்சு...
  அதுவே தான்..
  ஓகே த்னே???

  :-)

 5. இளைய கவி says:

  // நர்சிம் said...
  ராமச்சந்திரனா என்றேன்
  ராமச்சந்திரன் தான் என்றார்
  எந்த ராமச்சந்திரன் என்று கேட்கவில்லை
  எந்த ராமச்சந்திரன் என்று
  அவரும் சொல்லவில்லை
  - நகுலன்

  June 25, 2009 1:01 PM//
  சூப்பரு தல

 6. இளைய கவி says:

  // வேத்தியன் said...
  ஒருவேளை அதுவா இருக்குமோ???

  ச்சீ ச்சீ இருக்காது..
  இதுவா இருக்கலாமா???

  ஓ..
  புரிஞ்சுடுச்சு...
  அதுவே தான்..
  ஓகே த்னே???

  :-)

  June 25, 2009 2:53 PM
  //

  இது அதில்லங்க த்ல..

Post a Comment

உங்கள் கருத்துக்களை இங்கே கொட்டுங்கள் & தமிழில் தட்டச்சு செய்ய... இங்கே... செல்லுங்கள் ! (right click the link and select open in a new window)