தமிழ் வெளியின் கூத்து காணீர் காணீர் !!!!

உலக தொலைக்காட்சிகளில் முதன் முறையாக என்ற விளம்பரத்தை போல உலக இணைய வரலாற்றில் முதன் முறையாக என்ற விளம்பரம் தமிழ்வெளியில் வெளிவந்துள்ளது...

"சென்னை 2 சிங்கப்பூர்"
"வாங்க பிரபலமாகலாம்"
"உங்கள் எழுத்துகள் பரவலாக சென்றடைய"

என்ற மூன்று வாசகங்கள் விளம்பரப்படுத்தப்பட்டுள்ளது, இவைகள் என்ன? தமிழ்வெளியில் வெளிவரப்போகின்ற தொடர்களா? டேட்டா எண்ட்ரி மற்றும் கூகிள் ஆட்சென்ஸ் பற்றி தமிழ்வெளி உரையாடியில் செந்தழல் ரவி பேசியது போன்று யாரேனும் பேசப்போகிறார்களா? சென்னை 2 சிங்கப்பூர் ஒரு வாரம் சுற்றுலா என்பது ஏதேனும் சுற்றுலா நிறுவனத்தின்(டிராவல் ஏஜென்சி) விளம்பரமா?

போட்டி ஏதும் நடத்தப்போகிறார்களா? அப்படியெனில் பதிவர் விருதா? சிறுகதை போட்டியா? கவிதை போட்டியா? கட்டுரை போட்டியா? என்ற கேள்விகள் எழலாம் இந்த விளம்பரங்கள் எது தொடர்பானவை என்ன அறிவிப்பு ஜூன் 29ல் என்பது பற்றிய உங்கள் கணிப்பை எங்களுக்கு admin@tamilveli.com என்ற மின் அஞ்சல் முகவரிக்கு அனுப்புங்கள் சரியாக கணித்து அதையும் முதலில் அனுப்புகின்ற ஐந்து நபர்களுக்கு 
ரூபாய் 250 மதிப்புள்ள புத்தகங்கள் விரைகணை(Early Bird)பரிசாக வழங்கப்படும்.விதிமுறைகள்

1.கடைசி தேதி : நாளை(ஜூன் 23,2009 காலை 10.00 மணி இந்திய நேரம்)

2.ஒருவர் எத்தனை முறை வேண்டுமானாலும் கணிப்புகளை அனுப்பலாம், ஆனால் கடைசியாக அவர் அனுப்பியது மட்டுமே கணக்கில் கொள்ளப்படும்.

3.ஒருவருக்கு ஒரு பரிசு மட்டுமே

4. அட மறந்துவிட்டோம் பாருங்க எல்லா போட்டியிலும் சேர்ப்பது இங்கேயும் . நிர்வாகத்தின் முடிவே இறுதியானது, விதிமுறைகள் முன் அறிவிப்பின்றி மாற்றப்படலாம்.

5.கணிப்பை அனுப்ப வேண்டிய மின்னஞ்சல் முகவரி 
admin@tamilveli.com

Photobucket உங்க கூட என்னையும் சேத்துகோங்க மக்கா :


|

 • Digg
 • Del.icio.us
 • StumbleUpon
 • Reddit
 • Twitter
 • RSS

3 Response to "தமிழ் வெளியின் கூத்து காணீர் காணீர் !!!!"

 1. செந்தழல் ரவி says:

  Tour ??

  Kavithai Potti or something ?

 2. வால்பையன் says:

  சிங்கப்பூர்!!

  :)

 3. தமிழ்நெஞ்சம் says:


  லக்கிலுக்கின் சாதனையைத் தொடர்ந்து...

Post a Comment

உங்கள் கருத்துக்களை இங்கே கொட்டுங்கள் & தமிழில் தட்டச்சு செய்ய... இங்கே... செல்லுங்கள் ! (right click the link and select open in a new window)