ஜவ்வுமிட்டாய், நெல்லிக்காய, கல்கோனா

இன்று காலையில் எல்லா சபிக்கப்பட்ட கணவர்களை போல் நானும் கடைக்குச்செல்ல நேர்ந்தது. கடையில் தொங்கிய ஒரு சில பொருட்களில் எழந்தவடை ( இலந்தபழத்தில் செய்யப்படுவது ) அப்போது தான் அந்த கடைகாரரிடம் விசாரித்தேன் இது போல இன்னும் ஏதாவது உள்ளதா என்று அவர் என்னை ஏற இறங்க பார்த்துவிட்டு, ஏம்பா நேத்துகூட நல்லா தான இருந்த என்றார், மேலும் இதைப்போன்ற தின்பண்டங்கள் இப்போது கிடைபதில்லை என்றும் சொண்ணார், சற்றே ஏமாற்றத்துடன் சற்று பின் நோக்கி பள்ளி பருவத்தை பார்த்தால் அடடா பசுமையான நினைவுகள் , காலையில் அம்மா அறக்க பரக்க எழுப்பி அவசரமாய் காலைகடன்களை முடிக்கவைத்து அள்ளி குளிப்பாட்டி சீருடையில் திணித்து காலுறை அணிந்து, காலணிமாட்டி இப்படி எதுவுமே இல்லாமல், ஜாலியாய் 8 மணிக்கு எழுந்து குளித்து வீட்டு பாடம் பாதி செய்தும் செய்யாமலும், காக்கி அரை கால் சட்டையும் வெள்ளை சட்டையும், எண்னை வழியும் தலை சீவல், அம்மாவின் ஆசை முத்தத்துடன் அப்பாவின் சைக்கிளில் ஏறி பள்ளி வந்ததும் அப்பா சொல்வார் சமத்தா படிக்கனும் என்ன ? இந்த 10 காசு என தரும் அந்த சில்லரையிலே மனம் பூரிக்குமே அப்பப்பா !! ஒன்னுக்கு மணி ( intervel ) அடிக்கும் போதே மனதுக்குள்ளும் மணியடிக்கும். ஒன்னுக்கு மணிக்கு 5 பைசாவிற்க்கு ஒரு ஜவ்வு மிட்டாய் வாங்கி அதை வாட்டர் பாட்டிலில் போட்டால் சாப்பாட்டு மணியடிக்கும் போது இனிக்க இனிக்க தண்ணீர் குடிக்கலாம்! மிச்ச 5 பைசாவில் சாயங்காலம் கூட்டிட்டு போக அப்பா வர இளைவெளியில் சோளம் இல்லாட்டி நெல்லிக்காய், இல்லாட்டி மாங்கா கீத்து. இப்படி நினைத்துக்கொண்டிருக்கும் போதுதான் என் மகனுக்கு Laze chips, act III popcorn வாங்கிவர சொண்ணது நினைவுக்கு வருகிறது.... இந்த கால பசங்க ரொம்ப பாவம் பா இல்ல ... சரி சரி போய் குக்கர் வைக்கனும் அப்றமா மீட் பண்ணலாம் bye உங்க கூட என்னையும் சேத்துகோங்க மக்கா :


|

  • Digg
  • Del.icio.us
  • StumbleUpon
  • Reddit
  • Twitter
  • RSS

0 Response to "ஜவ்வுமிட்டாய், நெல்லிக்காய, கல்கோனா"

Post a Comment

உங்கள் கருத்துக்களை இங்கே கொட்டுங்கள் & தமிழில் தட்டச்சு செய்ய... இங்கே... செல்லுங்கள் ! (right click the link and select open in a new window)