ஓட்டு + சூடான இடுகை என்ன எழவுடா இது 3%^&@#$%^&*() ?


 தமிழ் வலைப்பதிவர்கள் இடையே இன்று காணப்படும் வேடிக்கையான விஷயம் என்னவென்றால் ஓட்டு சேகரிப்பது, சூடான இடுகை பகுதியில் இடம் பிடிப்பது போண்ற விஷய்ங்களில் தன்னை தொலைத்துவிடுவது மிகவும் வருத்தத்தை அளிக்கிறது. வாக்கு சேகரிக்கும் நண்பர்க்ளே உங்களால் கிடைக்கும் வாக்குகளை பயன்படுத்தி என்ன செய்து விட முடிகிறது. இது வெறும் அல்பசந்தோஷம் மட்டுமே.

உங்களின் எண்ணத்தையும் அனுபவத்தையும் எழுதுங்கள், வெகுஜன எழுத்துகளுக்கு எப்போதும் ஒரு கவர்ச்சியுண்டு. இந்த ஓட்டு, சூடான இடுக்கை இவை எதையும் பயன்படுத்தாமால் பிரபலமடைந்த பதிவர்களும் உண்டு நண்ப‌ர்களே உதாரணம். திரு பிகேபி அவர்கள். தயவு செய்து இந்த மாயவலையை விட்டு வெளியே வந்து சுயத்தை எழுதுங்கள் இது எனது பணிவான வேண்டுகோள்
Photobucket
உங்க கூட என்னையும் சேத்துகோங்க மக்கா :


|

  • Digg
  • Del.icio.us
  • StumbleUpon
  • Reddit
  • Twitter
  • RSS

13 Response to "ஓட்டு + சூடான இடுகை என்ன எழவுடா இது 3%^&@#$%^&*() ?"

  1. குடந்தை அன்புமணி says:

    கரெக்டா சொன்னப்பா இளையகவி...!

  2. யூர்கன் க்ருகியர் says:

    நண்பா ..உங்கள் பதிவை படித்து நான் வைத்திருந்த அணைத்து ஒட்டு பட்டையும் தூக்கி விட்டேன்.

    அதிகமா வோட்டு வாங்கறவங்க வேணா வச்சுக்கலாம் ..எனக்கெல்லாம் நாலு வோட்டு நாலு கமெண்ட் வரதே பெரும் பாடா இருக்குது .... அதான் இருந்து என்ன பிரயோசனம்னு கட் பண்ணிட்டேன்

  3. கார்த்திகைப் பாண்டியன் says:

    ரொம்ப அருமையா சொல்லி இருக்க நண்பா.. புதிதா எழுத வரும்போது இருக்கும் மாயை இது.. சரியாகிடும்..

  4. கார்த்திகைப் பாண்டியன் says:

    அதெல்லாம் சரி டுபுக்கு.. நீங்கதாம் போனவுடனே போன் பண்ற ஆளா? நீ லேட்டஸ்டா போனப்பவே நான் சுதாரிச்சு இருக்கணும்.. ஹ்ம்ம்..மிஸ் பண்ணிட்டேன்

  5. ஆதவா says:

    வணக்கம் இளையகவி..

    நான் 2006லிருந்து வலைப்பதிவுகள் எழுதி வருகிறேன்... இது யாருக்காவது தெரியுமா?? ஏன், மற்றவர்கள் யார் எழுதுகிறார்கள் என்று கூட எனக்கும் தெரியாமலிருந்தது.. தற்செயலாக மெல்போர்ன் கமல் எனக்கு பின்னூட்டமிட்டிருந்தார்.. எப்படியோ அடித்துப் பிடித்து இரண்டு வருடங்கள் கழித்து 2009 ஜனவரி 25ல் முதல் கமெண்ட்..... பிறகுதான், தமிழ்மணம், தமிழிஷ் பற்றியெல்லாம் அவர் சொன்னபிறகு தெரிந்து கொண்டேன்.

    நமது படைப்புக்கான வாசகர்களைச் சேகரிக்கவாவது இந்த ஓட்டுப் பட்டைகள் தேவை... எனது பதிவிலே கூட " படைப்பை அடுத்தவருக்குக் கொண்டு செல்ல ஓட்டளியுங்கள் என்றுதான் குறிப்பிட்டிருக்கிறேன். அதிக ஓட்டு சேர்ந்தால் அது பப்லிஷ் ஆகும், முதல் பக்கத்தில் வரும், நிறைய பேருக்கு அது ஒரு வாசலாக விளங்கும்... மற்றபடி வேறெந்த நோக்கமுமில்லை.. ஓட்டு அதிகம் இருந்தால் ஏதாவது கிடைக்கப் போகிறதா என்ன???

    என்னைப் பொறுத்தவரை, தமிழிஷில் பிரபலமாகும்வரை ஓட்டு வந்தால் போதும்.. தமிழ்மணத்தில் "அதிக வாசகர் பரிந்துறைத்த பதிவுகள்" இடத்திற்கு வந்தால் போதும்.. இரண்டுக்கும் தலா பத்து ஓட்டுக்கள் தேவைப்படுகிறது. இவையிரண்டின் மூலம், நம் படைப்புகள் எடுத்துச் செல்லப்படுகிறது.. வாசகர்கள் கவனிக்கிறார்கள்.

    ஒரு புள்ளிவிபரம் சொல்லுகிறேன்... எனது எல்லா படைப்புகளுக்கும் கவனித்துப் பாருங்கள், தமிழிஷில் 9 ஓட்டுக்கள் சாதாரணமாகவே நண்பர்கள் போட்டுவிடுவார்கள்.. ஆனால், அதே இப்பொழுது எழுதியிருக்கும் ஒரு அனுபவக்கட்டுரைக்கு 4 ஓட்டுக்கள்தான் விழுந்திருக்கின்றன.. எனது வாசகநண்பர்ள், எதற்கு ஓட்டு போடவேண்டும், எதற்கு வேண்டாம் என்று ஆராய்ந்து தெரிந்துதான் போடுகிறார்கள்... ஓட்டு விழுந்த ஒரு கவிதைகளுக்கு 100 லிருந்து 1000 வரை வருகிறார்கள்.. படிக்கிறார்கள்... அதேசமயம் ஓட்டு விழாத நாட்களில் 50க்கும் குறைவான, அதாவது நமது வழக்கமான வாசகர்கள் மட்டுமே வந்து படித்துச் செல்லுகிறார்கள்..

    இப்பொழுது புரிந்திருக்குமென்று நினைக்கிறேன். யார் பெரியவன் என்பதற்காக இந்த ஓட்டுகள் இல்லை.... அடுத்த நபருக்குக் கொண்டு செல்ல மட்டுமே இவை....

  6. ஆ.ஞானசேகரன் says:

    நான் பார்த்து பதிவெழுதியதும், பின்பற்ற ஆசைக் கொண்டதும் இவரே... பிகெபி

  7. இளைய கவி says:

    // குடந்தை அன்புமணி said...
    கரெக்டா சொன்னப்பா இளையகவி...!
    //
    எல்லாம் ஒரு அனுபவம் தான்

  8. இளைய கவி says:

    //ஜுர்கேன் க்ருகேர்..... said...
    நண்பா ..உங்கள் பதிவை படித்து நான் வைத்திருந்த அணைத்து ஒட்டு பட்டையும் தூக்கி விட்டேன்.

    அதிகமா வோட்டு வாங்கறவங்க வேணா வச்சுக்கலாம் ..எனக்கெல்லாம் நாலு வோட்டு நாலு கமெண்ட் வரதே பெரும் பாடா இருக்குது .... அதான் இருந்து என்ன பிரயோசனம்னு கட் பண்ணிட்டேன்
    //

    தல பதிவுகளுக்கு பின்னூட்டமோ அல்லது ஓட்டோ பதிவின் தன்மையை பார்த்து வரணும் தல. தொடர்ந்து எழுதுங்க உங்களுக்குன்னு ஒரு வட்டம் ஏற்படுவது உண்மை தல.

  9. இளைய கவி says:

    //கார்த்திகைப் பாண்டியன் said...
    ரொம்ப அருமையா சொல்லி இருக்க நண்பா.. புதிதா எழுத வரும்போது இருக்கும் மாயை இது.. சரியாகிடும்..
    //
    டேய் நீ நம்ம ஆளுடா. உனக்கு தெரியாத உண்மையா ??

  10. இளைய கவி says:

    //நமது படைப்புக்கான வாசகர்களைச் சேகரிக்கவாவது இந்த ஓட்டுப் பட்டைகள் தேவை... எனது பதிவிலே கூட " படைப்பை அடுத்தவருக்குக் கொண்டு செல்ல ஓட்டளியுங்கள் என்றுதான் குறிப்பிட்டிருக்கிறேன்.//
    தல எமோசனை குறைங்க தல நான் யாரையும் குறிபிட்டு சொல்லவில்லை, இது முழுக்க முழுக்க என்னோட தனிப்பட்ட கருத்து தான் தல. அருவாளை கீழ போடுங்க பேச்சு பேச்சாத்தான் இருக்கனும் ஆமா.

  11. இளைய கவி says:

    //கார்த்திகைப் பாண்டியன் said...
    அதெல்லாம் சரி டுபுக்கு.. நீங்கதாம் போனவுடனே போன் பண்ற ஆளா? நீ லேட்டஸ்டா போனப்பவே நான் சுதாரிச்சு இருக்கணும்.. ஹ்ம்ம்..மிஸ் பண்ணிட்டேன்
    //
    மாப்பு கவலைப்படாத உனக்கும் சீக்கிரம் கல்யாணம் ஆகும்.

  12. இளைய கவி says:

    //ஆ.ஞானசேகரன் said...
    நான் பார்த்து பதிவெழுதியதும், பின்பற்ற ஆசைக் கொண்டதும் இவரே... பிகெபி

    May 26, 2009 11:53 PM
    //

    இன்று பிகேபி யின் இவ்வளவு பிரபலத்துக்கு காரணம் அவரின் எழுத்துகளின் தன்மை மட்டுமே. இது மறுக்க முடியாத உண்மை.

  13. Maximum India says:

    சரியான கருத்து!

    வழி மொழிகிறேன் நண்பரே!

    நன்றி!

Post a Comment

உங்கள் கருத்துக்களை இங்கே கொட்டுங்கள் & தமிழில் தட்டச்சு செய்ய... இங்கே... செல்லுங்கள் ! (right click the link and select open in a new window)