கோவை வலைப்பதிவர் சந்திப்பு

காலைல 12 மணிக்கு கோவைக்கு வர சொல்லிட்டு வழக்கம் போல செல்லா எஸ்கேப், என்னாட கவிக்கு வந்த சோதனை ன்னு கோவையின் அழகை காந்திபுரம் பஸ்டாண்டில் கண்டு களித்துகிட்டு இருக்கும் போது எங்க மாமா சஞ்செய் கிட்ட இருந்து ஒரு போண், தம்பி எங்க இருக்கன்னு கேட்டு வந்து பிக்கப் பண்ணிகிட்டு ஒரு வாய் தண்ணி கூட வாங்கிதராம ( வால் பையன் தேவல ) அண்ணபூர்ணா ஹோட்டல் கூட்டிட்டு போனாரு, போகும் போதே போனப்போட்டு மச்சான் நீ பிரியாவா இருக்க ஒருத்தனை கூட கூட்டிகிட்டு வரேன்னு சொன்னார். 


அப்புறம் வழக்கம் போல ஹோட்டல  A/C  ரூம் போட்டு சாப்பிட ஆரம்பிச்சோம் ( சாப்பாடு மட்டும் தான் ) அப்போது தான் அறிமுகம் ஆன தமிழ் பேராசிரியர் திரு. பாவேந்தன் அவர்கள் தலித்தியம் சார்ந்த விஷயங்களை விளக்கி கூறினார் (ஆதி திராவிடன் புத்தகத்தை பற்றிய நிறைய விஷயங்களை புதிதாக கூறினார்). நான் நல்லா சாப்பிட்டேன், எங்க மாமா சஞ்செய் தட்டிலிருந்து தலைய எடுக்கவே இல்ல. கடைசில அப்படியே கிளம்பி செல்லா ஆபிஸ் க்கு வந்தாச்சி! இன்னும் விவாதம் தொடர்ந்து கொண்டே இருக்கிறது. இந்த தடவ தமிழ் ஈழம் பத்தி.. ஒரு தம் போட்டுட்டு வந்து தொடர்ரேன் மக்கா .....





Photobucket உங்க கூட என்னையும் சேத்துகோங்க மக்கா :


|

  • Digg
  • Del.icio.us
  • StumbleUpon
  • Reddit
  • Twitter
  • RSS

0 Response to "கோவை வலைப்பதிவர் சந்திப்பு"

Post a Comment

உங்கள் கருத்துக்களை இங்கே கொட்டுங்கள் & தமிழில் தட்டச்சு செய்ய... இங்கே... செல்லுங்கள் ! (right click the link and select open in a new window)