வாவா சங்க போட்டிக்கு "ரெண்டு பதிவு"

ரெண்டு அப்ப‌டின்னு எங்க சித்தப்பூ நாமக்கல் சிபி சொல்ல போய்.. நானும் ரெண்டு நாளா யோசிக்கிறேன் ஒன்னும் தோண‌ல அப்புறம் ரெண்டு எப்படி தோணும்? இப்படி யோசிச்சிகிட்டே இருக்கும் போது யோவ் இளையகவின்னு ரெண்டு சத்தம் ( note this point ரெண்டு சத்தம் ) அந்த ரெண்டு பேரும் யாருன்னா என் மகனும் மனைவியும். என்னய்யா இது நாங்களூம் ரெண்டு நாளா பாக்குறோம் இப்படி இஞ்சி தின்ன குரங்காட்டம் இருக்குற. உண்ணைய நார்மலா பாத்தாலே சகிக்காது,

அதெல்லாம் போகட்டும் இந்தா இந்த ரெண்டு பைய எடுத்துகிட்டு போய் ரேஷன் ல 2 கிலோ சக்கரயும் 2 கிலோ கோதுமையும் 2 கிலோ அரிசியும் வாங்கிட்டு வா.. இப்படி பிலாக் எழுதுறேன்னு தென்டமா சுத்திக்கிட்டு இருக்காத ஆமாம் ன்னு மிரட்ட.

நானும் ரெண்டு மனசா ரேஷனுக்கு கிளம்பினேன். போகும் போது மனசுக்குள்ள 2 கேள்வி. ஏன்டா இளையகவி இப்படி அவமானப்பட்டு இந்த வீட்டுல குப்ப கொட்டனுமா? இதுக்கு முன்னாடி சிங்கம் போல் அம்மா வீட்டுல இருந்தியேடா , அம்மா வீட்டில இருக்கும் போது ரேஷன் கடை எங்க இருக்கும்னு கூட தெரியாம வளர்ந்தியேடா ராசா இப்ப சிங்கம் அசிங்கம் ஆயி கூட பாயாம பதுங்குதே இது சரியா ?

இப்படி எல்லாம் மனசாட்சி உசுப்பேத்த, மனசாட்சியை உறங்க வைத்துவிட்டு ரேஷ‌ன் கடை படியேஎற, அங்கு 2 அறிவிப்பு ஒன்னு மதியும் 2 மணிக்கு மேல தான் மதியம் கடை திறக்கும், ரென்டாவது கோதுமை இன்று விநியோகம் இல்லை. அட பாவிகளா இத படிக்கவா 2 தெரு தள்ளி இந்த வேகாத வெயிலில் நடந்து வந்தேன் என்று மனதுக்குள் சொல்லிக்கொண்டேன்

அப்படியே போணை எடுத்து ஸ்பீடு டயலில் உள்ள 2 வது நம்பரை டயலினேன். யோவ் போய் 2 நிமிஷம் தான் ஆச்சி அதுக்குள்ள என்னையா கால் பண்றன்னு மனைவி மறியாதையோடு கேட்க, சூழ்நிலைய விளக்கி சொண்னேன், ஒகே அப்படியே பக்கத்தில டைலர் கடை இருக்கு பாருங்க, அங்க போய் என் பேர சொல்லுங்க 2 பிளவுஸ் தருவாங்ன்னு சொண்னங்க.

அடிப்பாவி டைலர்கடை பக்கத்துலையா இருக்கு அதுக்கு இன்னும் 2 தெரு போகனுமேடின்னு மனசு கெடந்து கதற, வாய்குள்ள இருந்து வார்தைக்கு பதிலா காத்துதான் வருது. இருந்தாலும் மனச கட்டுபடுத்தி டைலர் கடைக்கு போய் அந்த 2 பிளவுஸ் வாங்கிட்டு வரும் போது தலை சுத்தி எல்லாம் ரெண்டு ரெண்டா தெரிய ஆரம்பிச்சது.

கண்ணு டோட்டலா டிம் ஆகும் முன்னாடி 2 சோடா வாங்கி முகத்தில அடிச்சிட்டு கொஞ்சம் குடிச்சா சரியா போகுன்னு மூளைலேந்து ஒரு குரல் கேட்க அதையும் முடிச்சு. குற்றுயிரும் குலைஉயிருமாக ரேஷன் கடைக்கு வந்தால் , அங்கு உட்கார்ந்து இருந்த ரேசன் கடைகாரர் 2 கண்களூக்கும் கடவுளாய் தெரிந்தார்.

என்னை பார்த்துடன் வாங்க சார் நீங்க ஷஷாங் அப்பா தான சார் வாங்க என்றார். எனக்கு பயங்கர ஆச்சர்யம் ( நான் எங்க ஏரியாவில் அவ்வளவு பேமஸ் இல்லை ) உனக்கு எப்படிப்பா என்னை தெரியும்ன்னு நான் கேட்க அதுக்கு அவன் நான் உங்களை 2 தடவை மேடம் கூட பாத்திருக்கேன் சார். ஒரு தடவை பாஜார்ல மேடம் கூட புடவை எடுக்க வந்திருந்தாங்களே நீங்க கூட பின்னாடி கையில ஷஷாங்கை வச்சிகிட்டு நிறைய பை எல்லாம் மாட்டிகிட்டு நின்னீங்களே சார். அப்பவே தெரியும் சார், அது மட்டும் இல்லாம டெய்லி உழவர் சந்தைக்கு காலைல போய் காய் வாங்கிட்டு ஆட்டோ கூட எடுக்காமா நீங்க அவ்வளவு காயையும் எடுத்துகிட்டு நடந்தே வருவீங்களே உங்களை தெரியாத சார்னூ சொண்ணார் கடவுள்.

எனக்கு 2 சந்தேகம் கடவுள் நம்மை புகழ்கிறார இல்லை இகழ்கிறாரன்னு. ஒரு வழியா எல்லா வேலையும் முடிச்சு வீட்டுக்கு வந்து கதவ தட்டுனா என் மனைவி வாங்க. அய்யோ பாவம் ரொம்ப வேர்திடுச்சா, நான் வேனா ஜூஸ் போட்டு தரட்டுமா அப்படின்னு கேட்க ஒரே சந்தோஷமா இருந்த்து. ஆனா அதுக்கப்புறம் ஏங்க நீங்க ரேஷனுக்கு போன பின்னாடி தான் நியாபகம் வந்தது இன்னும் 2 வேலை பாக்கி இருக்குங்கன்னு சொண்ணா பாருங்க .. என்னோட 2 முழியும் பிதுங்கி மயக்க‌முற்றேன்.

இளையகவி நெஞ்சு வெடித்து ஆஸ்பிட்டலில் இருப்பதால்

அப்பா சொல்ல சொல்ல எழுதியது
ஷஷாங் கிருஷ்

-------------------------------------------------------------------------------------------------

வருத்தப்படாத வாலிபர்கள் சங்கம் இரண்டாமாண்டு விழா போட்டிக்கான இடுகைPhotobucket உங்க கூட என்னையும் சேத்துகோங்க மக்கா :

|

 • Digg
 • Del.icio.us
 • StumbleUpon
 • Reddit
 • Twitter
 • RSS

28 Response to "வாவா சங்க போட்டிக்கு "ரெண்டு பதிவு""

 1. சந்தோஷ் = Santhosh says:

  Good Ones.. nalla irunthathu..

 2. மங்களூர் சிவா says:

  சபாஷ்
  சபாஷ்

 3. மங்களூர் சிவா says:

  இது ஏழுதுனது அண்ணிக்கு தெரியுமா?
  இது ஏழுதுனது அண்ணிக்கு தெரியுமா?

 4. மங்களூர் சிவா says:

  தெரிஞ்சா முதுகுல ரெண்டு விழுமே அத அடுத்த பதிவா போட்டிரு
  தெரிஞ்சா முதுகுல ரெண்டு விழுமே அத அடுத்த பதிவா போட்டிரு

 5. TBCD says:

  யோவ் கலக்கல் நடை...

  அசத்து....

  வாழ்த்துக்கள்...

 6. இளைய கவி says:

  // TBCD said...
  யோவ் கலக்கல் நடை...

  அசத்து....

  வாழ்த்துக்கள்...
  //
  வாங்க TBCD சார் வாழ்த்துகளுக்கும் வருகைக்கும் மிக்க நன்றி.

 7. இளைய கவி says:

  // மங்களூர் சிவா said...
  தெரிஞ்சா முதுகுல ரெண்டு விழுமே அத அடுத்த பதிவா போட்டிரு
  தெரிஞ்சா முதுகுல ரெண்டு விழுமே அத அடுத்த பதிவா போட்டிரு
  //
  தெரிஞ்சா முதுகுல ரெண்டு இல்ல 20 விழும் .. இருந்தாலும் அசர மாட்டோம்ல..

 8. இளைய கவி says:

  //சந்தோஷ் = Santhosh said...
  Good Ones.. nalla irunthathu..
  //

  வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி சந்தோஷ் அவர்களே

 9. புதுமைபித்தன் says:

  நேத்துதான் "ரெண்டு" தமிழ் படம் பத்து தலைவலி தாங்கல இதுல நீ வேற ரெண்டு ரெண்டா சொல்லி என்னை ரெண்டா பிரிச்சிட்டப்பா, நடத்து உன் நாடகத்த

 10. சின்ன அம்மிணி says:

  ஆஹா பருத்தி வீரரே!!! ரங்கமணியை இப்படி எல்லாம் வேலை வாங்கலாம்னு ஐடியா குடுத்ததுக்கு நன்னி

 11. நிஜமா நல்லவன் says:

  அடப்பாவி மக்கா நான் உன்கிட்ட பேசும் போது திக்கி திணறி பேசுனத்துக்கு இப்போ தானே காரணம் புரியுது! நல்லா இருக்கியா ராசா?

 12. இளைய கவி says:

  //புதுமைபித்தன் said...
  நேத்துதான் "ரெண்டு" தமிழ் படம் பத்து தலைவலி தாங்கல இதுல நீ வேற ரெண்டு ரெண்டா சொல்லி என்னை ரெண்டா பிரிச்சிட்டப்பா, நடத்து உன் நாடகத்த
  //

  டேய் புதுசா ஒரு டிவிடி பிளையர் வாங்கிட்டு நீ பண்ற அலும்பு தாங்க முடியல டா.. எனிவே உன்னோட கருத்துக்கு மிக்க நன்றி மாப்பு

 13. இளைய கவி says:

  //சின்ன அம்மிணி said...
  ஆஹா பருத்தி வீரரே!!! ரங்கமணியை இப்படி எல்லாம் வேலை வாங்கலாம்னு ஐடியா குடுத்ததுக்கு நன்னி
  //
  சொந்த இனத்தியே காட்டி கொடுத்த துரோகி ஆக்கிட்டீங்களே சின்ன அம்மணி. மச்சான் ஜூட்

 14. இளைய கவி says:

  // நிஜமா நல்லவன் said...
  அடப்பாவி மக்கா நான் உன்கிட்ட பேசும் போது திக்கி திணறி பேசுனத்துக்கு இப்போ தானே காரணம் புரியுது! நல்லா இருக்கியா ராசா?
  //
  கம்பேணி ரகசியத்தை எல்லாம் வெளியே சொல்வதில்லை. இருந்தாலும் என்னை மீறி சில சமயம் உண்மை வெளி வருவது உண்டு

 15. கார்த்திக் says:

  முடியல
  எல்லாமே ரெண்டு ரெண்டா தெரியுது

 16. கார்த்திக் says:

  வெற்றி பெற வாழ்த்துக்கள்.

 17. இளைய கவி says:

  // கார்த்திக் said...
  முடியல
  எல்லாமே ரெண்டு ரெண்டா தெரியுது
  வெற்றி பெற வாழ்த்துக்கள்.
  //கார்திக் முதல்ல பார்ல இருந்து வெளிய வந்து பதிவை படி எல்லாம் கரெக்டா தெரியும். இதுக்கெல்லாம் காரணம் வால்பையன் லேப்டாப் தான்னு தெரியும்.

 18. வால்பையன் says:

  யோவ், நீ தினம் தினம் (கவனி ரெண்டு தினம்) கரூர் , திருச்சி ன்னு சுத்தறத பார்த்து ஒருத்தர் உனக்கு ரெண்டு பொண்டாட்டி-ன்னு சொல்றாங்களே உண்மையா!

  (என்ன அய்யாசாமி இன்னைக்கு பிட்டு போதுமா)

  வால்பையன்

 19. நிஜமா நல்லவன் says:

  ///வால்பையன் said...
  யோவ், நீ தினம் தினம் (கவனி ரெண்டு தினம்) கரூர் , திருச்சி ன்னு சுத்தறத பார்த்து ஒருத்தர் உனக்கு ரெண்டு பொண்டாட்டி-ன்னு சொல்றாங்களே உண்மையா!

  (என்ன அய்யாசாமி இன்னைக்கு பிட்டு போதுமா)

  வால்பையன்///  கரூர்ல இளையகவி திருச்சில முதியகவியா? இல்ல திருச்சில இளையகவி கரூர்ல முதியகவியா? விளக்கம் தேவை!

 20. நிஜமா நல்லவன் says:

  கம்பெனி ரகசியத்தை வெளியிடலாமா? கூடாதா? அவசரமா பதில் தேவை!!

 21. இளைய கவி says:

  //வால்பையன் said...

  யோவ், நீ தினம் தினம் (கவனி ரெண்டு தினம்) கரூர் , திருச்சி ன்னு சுத்தறத பார்த்து ஒருத்தர் உனக்கு ரெண்டு பொண்டாட்டி-ன்னு சொல்றாங்களே உண்மையா!

  (என்ன அய்யாசாமி இன்னைக்கு பிட்டு போதுமா)

  வால்பையன்

  //

  நீ கூட தான் ஊர் ஊரா சுத்துற

 22. இளைய கவி says:

  // நிஜமா நல்லவன் said...
  ///வால்பையன் said...
  யோவ், நீ தினம் தினம் (கவனி ரெண்டு தினம்) கரூர் , திருச்சி ன்னு சுத்தறத பார்த்து ஒருத்தர் உனக்கு ரெண்டு பொண்டாட்டி-ன்னு சொல்றாங்களே உண்மையா!

  (என்ன அய்யாசாமி இன்னைக்கு பிட்டு போதுமா)

  வால்பையன்///  கரூர்ல இளையகவி திருச்சில முதியகவியா? இல்ல திருச்சில இளையகவி கரூர்ல முதியகவியா? விளக்கம் தேவை!
  //

  எப்போதும் நான் இளையகவி தான். கிங்குடா அண்ணண் ககிங்குடா

 23. வால்பையன் says:

  //கம்பெனி ரகசியத்தை வெளியிடலாமா? கூடாதா? அவசரமா பதில் தேவை!!//

  நம்ம கம்பெனி ரகசியத்தை தான் பாதுகாக்க வேண்டும்,
  அடுத்த கம்பெனி ரகசியத்தை டார்ச் அடித்து காட்டவேண்டும்,

  //எப்போதும் நான் இளையகவி தான். கிங்குடா அண்ணண் ககிங்குடா//

  இளயகவிஎல்லாம் வயசாயி பழயகவி ஆயிருச்சு

  (என்ன அய்யாசாமி இன்னைக்கு பிட்டு போதுமா)

  வால்பையன்

 24. சுரேகா.. says:

  அடடே!
  ரெண்டு ரெண்டா தெரியுதே!

  சூப்பரா இருக்கு..!

  இதுக்கு ரெண்டு பின்னூட்டம் போட்டாத்தான் நிம்மதி !

 25. சுரேகா.. says:

  வாழ்த்துக்கள்!

  2 பின்னூட்டம் போட்டா போட்டில கலந்துக்கலாமா?

 26. இளைய கவி says:

  // சுரேகா.. said...
  வாழ்த்துக்கள்!

  2 பின்னூட்டம் போட்டா போட்டில கலந்துக்கலாமா?

  April 29, 2008 8:02 AM
  //
  சுரேகா.. said...
  வாழ்த்துக்கள்!

  2 பின்னூட்டம் போட்டா போட்டில கலந்துக்கலாமா?

  April 29, 2008 8:02 AM

 27. இளைய கவி says:

  // சுரேகா.. said...
  அடடே!
  ரெண்டு ரெண்டா தெரியுதே!

  சூப்பரா இருக்கு..!

  இதுக்கு ரெண்டு பின்னூட்டம் போட்டாத்தான் நிம்மதி !
  //

  மிக்க நன்றி சுரேகா

 28. இளைய கவி says:

  // வால்பையன் said...
  //கம்பெனி ரகசியத்தை வெளியிடலாமா? கூடாதா? அவசரமா பதில் தேவை!!//

  நம்ம கம்பெனி ரகசியத்தை தான் பாதுகாக்க வேண்டும்,
  அடுத்த கம்பெனி ரகசியத்தை டார்ச் அடித்து காட்டவேண்டும்,

  //எப்போதும் நான் இளையகவி தான். கிங்குடா அண்ணண் ககிங்குடா//

  இளயகவிஎல்லாம் வயசாயி பழயகவி ஆயிருச்சு

  (என்ன அய்யாசாமி இன்னைக்கு பிட்டு போதுமா)

  வால்பையன்
  //

  நான் எதிரிகளை கூட வச்சிகிட்டேதான் சுத்துரேன் போல

Post a Comment

உங்கள் கருத்துக்களை இங்கே கொட்டுங்கள் & தமிழில் தட்டச்சு செய்ய... இங்கே... செல்லுங்கள் ! (right click the link and select open in a new window)