மீ‌ண்டு‌ம் கோளாறு ; அ‌ட்லா‌ண்டி‌ஸ் பயண‌ம் ஒ‌த்‌திவை‌ப்பு

கடை‌சி நேர‌த்‌தி‌ல் ஏற்பட்ட கோளாறு காரணமாக அட்லாண்டிஸ் விண்கலம் விண்ணில் ஏவப்படுவது அடுத்த மாதத்திற்கு தள்ளி வைக்கப்பட்டுள்ளது.

வ‌ி‌ண்வெ‌ளி‌யி‌ல் அமெ‌ரி‌க்கா, ர‌ஷ்யா, ஜெ‌ர்ம‌னி உ‌ள்‌ளி‌ட்ட 16 நாடுக‌ள் இணை‌ந்து ‌‌‌மித‌க்கு‌ம் ஆ‌ய்வு‌க் கூட‌த்தை அமை‌த்து வரு‌கி‌ன்றன. இ‌ந்த ஆ‌ய்வு கூட‌த்து‌க்கு அமெ‌ரி‌க்கா கட‌ந்த 6‌ம் தே‌தி அ‌ட்லா‌ண்டி‌ஸ் எ‌ன்ற விண்கலத்தை அனு‌ப்புவதாக இரு‌ந்தது. விண்கலத்தி‌ல் செ‌ல்ல 7 ‌வி‌ண்வெ‌ளி ‌நிபுண‌‌ர்களு‌ம் தயாராக இருந்தன‌‌ர்.

புளோ‌ரிடா‌வி‌ல் உ‌ள்ள கேப்கெனரவல் தள‌த்‌‌தில‌் விண்கலம் புற‌ப்பட தயாராக இரு‌ந்த ‌நிலை‌யி‌ல் கடை‌சி நேர‌த்‌தி‌ல் எ‌‌ரிபொரு‌ட்க‌ள் டா‌ங்‌கி‌யி‌ல் கோளாறு ஏ‌ற்ப‌ட்டு இரு‌ப்பது‌ம், செ‌ன்சா‌ர்க‌ள் பழுது அடை‌ந்து இரு‌ப்பது‌ம் க‌ண்டு ‌பிடி‌க்க‌ப்ப‌ட்டது. இதனா‌ல் பயண‌ம் நேற்றைக்கு த‌ள்‌ளி வை‌க்க‌ப்ப‌ட்டது.

நே‌ற்று ரா‌க்கெ‌ட் புற‌ப்பட தயாரானபோது ‌மீ‌ண்டு‌‌ம் கடை‌சி நேர‌த்‌தி‌ல் கோளாறு ஏ‌ற்ப‌ட்டது க‌ண்டு‌பிடி‌க்க‌ப்ப‌ட்டது.

இதை‌த் தொ‌ட‌ர்‌ந்து அ‌ட்லா‌ண்டி‌ஸ் விண்கலம் ஏவப்படுவது அடு‌த்த மாத‌த்திற்கு த‌ள்‌ளி வை‌க்க‌ப்ப‌ட்டுள்ளது. உங்க கூட என்னையும் சேத்துகோங்க மக்கா :


|

  • Digg
  • Del.icio.us
  • StumbleUpon
  • Reddit
  • Twitter
  • RSS

0 Response to "மீ‌ண்டு‌ம் கோளாறு ; அ‌ட்லா‌ண்டி‌ஸ் பயண‌ம் ஒ‌த்‌திவை‌ப்பு"

Post a Comment

உங்கள் கருத்துக்களை இங்கே கொட்டுங்கள் & தமிழில் தட்டச்சு செய்ய... இங்கே... செல்லுங்கள் ! (right click the link and select open in a new window)