திருமணத்தில் தாலி தேவையா???

அவ்வப்போது என் சிறு மண்டையிலும் யோசனை உதிப்பதுண்டு.
அவ்வாறு நான் யோசித்தவை சில

1) திருமணம் முடிந்தால் தான் ஒரு ஆணும் பெண்ணும் சேர்ந்து வாழமுடியுமா ?

2) திருமணம் என்ணும் சமுக அங்கீகாரம் அவசியமா ?

3) திருமணம் ஆடம்பரமாகத்தான் செய்யவேண்டுமா ?

4) நண்பர்களாகவே வாழ்ந்து கொண்டு குடித்தனம் செய்தல் குற்றமா ?

5) புகுந்த வீட்டிற்க்கு வந்த உடன் மணப்பெண் தன் பழக்கவழக்கங்களை மாற்றித்தான் ஆக வேண்டுமா ? ஆம் என்றால் ஏன் ??

6) தாலி கட்டுதல் பெண்ணடிமைத்தனமா ?

7) திருமணமான பின் மற்றொருவர் மீது பெண்களோ அல்லது ஆண்களோ காதல் கொள்ளளாமா?

8) உடலுறவின் போது பெண்கள் தங்கள் fantacy மற்றும் தேவைகளை தன் கணவனிடம் நேரடியாக தெரியபடுத்தலாமா?


மேற்கண்டவை குறித்து என்னால் ஒரு தீர்மானத்திற்க்கு வரமுடியவில்லை, ஆகவே தான் உங்கள் முன் வைக்கீறேன். தங்களின் கருத்துக்களை எதிர் நோக்குகிறேன் உங்க கூட என்னையும் சேத்துகோங்க மக்கா :


|

 • Digg
 • Del.icio.us
 • StumbleUpon
 • Reddit
 • Twitter
 • RSS

4 Response to "திருமணத்தில் தாலி தேவையா???"

 1. Voice on Wings says:

  திருமணத்திற்குத் தாலியோ, சேர்ந்து வாழ்வதற்குத் திருமணமோ தேவையில்லைன்னுதான் நினைக்கறேன். திருமணம் என்பதே பொருளாதாரம் சம்மந்தப்பட்டதுதான். இருவருக்குமே பொருளாதாரக் கட்டாயங்கள் இல்லாத போது (அப்படி அமைவது பலருக்கு சாத்தியமாகாமல் போகலாம்), திருமணம் என்ற ஏற்பாடும் தேவையற்றதுதான்.

  புகுந்த வீடு பொறந்த வீடு வகையறாக்களைப் பற்றி கருத்து கூற விரும்பல்ல. (ஒரு ஆணும் பெண்ணும் சேர்ந்து வாழும் வீட்டில் மற்றவர்களுக்கு வேலையில்லை என்பது எனது கருத்து)

  தாலி கட்டுதல் பெண்ணடிமைத்தனம்தான். வேறு மதங்களில் இருவருக்கும் மோதிரம் அணிவிக்கும் பழக்கமுள்ளது. அது ஒரு சமத்துவ நிலையாகப் படுகிறது. இங்கு மனைவிக்கு மட்டும் தாலி என்னும் போது, அது ஒரு பக்க சாய்வு நிலையாகத் தெரிகிறது.

  திருமணத்திற்குப் பிறகு வேற்று மனிதர்களுடன் காதல் கொள்ளலாமான்னா, அது கூடாதுன்னுதான் தோணுது. Free love பற்றி எனக்கு அவ்வளவு பரிச்சியம் கிடையாது. 'இருவருக்கும் சம்மதமானால் இருவரும் வேற்று மனிதர்களைக் காதலிக்கலாம்' அப்படின்னுல்லாம் சொல்ற அளவுக்கு எனக்கு இன்னும் முதிர்ச்சி ஏற்படல்ல.

  fantasyகளை ஒருவருக்கொருவர் தெரியப்படுத்துவதா வேண்டாமா என்று பொதுப்படையாக கூற முடியாது. வாழ்க்கைத் துணையின் மனநிலையைப் பொறுத்து அதை அவரவர்கள் முடிவு செய்வது நல்லது.

 2. Thamizachi says:

  //திருமணத்தில் தாலி தேவையா?//

  திருமணத்திற்கு தாலி தேவையா? தேவையில்லையா? என்பதை விட திருமணம் நடப்பது ஆணுக்கும், பெண்ணுக்கும். இதில் பெண்ணுக்கு மட்டும் கயிரை கட்டிவிட்டு இவளுக்கு திருமணம் நடந்துவிட்டது என்று மட்டும் அடையாளப்படுத்த முற்படும் போக்கு கண்டனத்துக்கு உரியது. பெண்ணுக்கு கயிற்றை கட்டி விட்டு ஆண் வெளியில் திரிந்து கொண்டிருக்கிறான். இது பெண்கள் சிந்திக்க வேண்டிய விஷயம்.

  உங்களின் கேள்விகளும்; தேடல்களும் மிக அருமையானவை. கூடியவிரைவில் பதிவில் விடைக்கிடைக்கலாம்...

 3. சுரேகா.. says:

  கண்டிப்பாக, தாலி தேவை இல்லை... தாலி என்ன...? திருமணமே தேவை இல்லை..!

  இரண்டு ஒற்றைப்பாலினங்கள் சேர்ந்து வாழலாம் எனும்போது, ஆணும் பெண்ணும் மட்டும் ஏன்...?

 4. இளைய கவி says:

  சுரேகா, voice on wings, தமிழச்சி,

  தங்களின் வருகைக்கும் நேரத்திற்க்கும் மிக்க நன்றி.

Post a Comment

உங்கள் கருத்துக்களை இங்கே கொட்டுங்கள் & தமிழில் தட்டச்சு செய்ய... இங்கே... செல்லுங்கள் ! (right click the link and select open in a new window)