தேசிய தொலைக்காட்சியில் குடியரசு கூத்து


முதலில் அனைவருக்கும் எனது இனிய குடியரசு தின நல் வாழ்த்துக்களை கூறிக்கொள்கிறேன். இன்று காலை சென்னையில் நடந்த குடியரசு தின அணிவகுப்பு மற்றும் கொடியேற்றத்தை பொதிகையில் (D.D) நேரலையில் ஒளிபரப்பிக்கொண்டிருந்தார்கள். அந்த கொடுமையை நானும் காண நேரிட்டது. வர்ணனையாளர்கள் சொல்வதற்க்கும் காமிராவில் காட்டப்படும் நிகழ்ச்சிகளுக்கும் தொடர்பே இல்லை, மேலும் நிகழ்ச்சி நடக்கும் இடத்தில் உள்ள வர்ணனையும் ஒளிபரப்பு நிலையதில் உள்ள வர்ணனையும் சேர்த்தே ஒளிபரப்பபட்டது மிகவும் பொருத்தமாய் இருந்தது சந்தைகடை போல் , கேமரா ஒருங்கினைப்பு சுத்தமாக சரியில்லை, ஆளுனர் பற்றி கூறிக்கொண்டிருக்கும் போது கேமரா ஒரு இளம் பெண்னை காட்டி கொண்டிருந்து அருமையிலும் அருமை, வர்ணனையாளர்கள் திக்கி திணறி நா குழறி வர்ணனை கொடுத்த விதம் சொல்லி மாளாது, உ.தா ( மாடத்திற்க்கு மடம் என்று கூறியது, இன்னும் நிறைய இருக்கிறது). நிலைய இயக்குனர் என்னத்தான் செய்து கொண்டிருந்தார். நேரலையில் தவறுகள் நிகழ்வது இயல்பே ஆனால் இத்தகைய கீழ்மட்ட தவறுகள் கலக்கத்தைதான் எற்ப்படுத்துகிறது. தனியார் தொலைகாட்சிகள் தமிழை கொலை செய்தாலும் தொழிற்நுட்ப்பத்துறையில் ஓங்கித்தான் நிற்கின்றன மேலும் தனியார் தொலைகாட்சியில் நிகழ்ச்சியின் தரம் சரிபார்க்க வேண்டியுள்ளது ஏனெனில் அது வருவாயை அதிகரிக்கும் பொதிகையில் வருவாயும் தேவையில்லை நிகழ்ச்சியின் தரம் குறித்து கேட்கவும் நாதியில்லை ( 1 தேதி சம்பளம் ( மத்திய அரசு பணி சகாயங்கள் அதிகம். வேலை செய்தாலும் செய்யாவிட்டாலும்) . பாரம்பரியமும் பண்பாடும் நடுநிலை செய்திகளும் கொண்ட பொதிகையி(D.D)லா இவ்வளவு குறைபாடுகள் ??? மற்ற நிகழ்ச்சி என்றாலும் பரவாயில்லை குடியரசு தின விழா சாமி இது.. இப்படி பண்ணாக்க எப்படி?? உங்கள நம்பி DTH வாங்கி இருக்கும் மக்களுக்கு இது தான் நீங்க தரும் பரிசா??? இல்லை தனியார் தொலைக்காட்சிகளை வளர்க்க மறைமுக திட்டமா ?? நிலைய இயக்குனரே காதில் விழுகுதா ??? நீங்க வாங்கும் சம்பளம் எங்களோட வரிபணம் சாமி. வாங்குற சம்பளம் செரிக்கணும் ஆமா.
உங்க கூட என்னையும் சேத்துகோங்க மக்கா :


|

  • Digg
  • Del.icio.us
  • StumbleUpon
  • Reddit
  • Twitter
  • RSS

1 Response to "தேசிய தொலைக்காட்சியில் குடியரசு கூத்து"

  1. இளைய கவி says:

    ச்ச்ம்மா டெஸ்ட்

Post a Comment

உங்கள் கருத்துக்களை இங்கே கொட்டுங்கள் & தமிழில் தட்டச்சு செய்ய... இங்கே... செல்லுங்கள் ! (right click the link and select open in a new window)