குழந்தைகளின் கொலை !!!

நேற்று மதியம் என் வீட்டிற்க்கு பக்கத்து வீட்டு குழந்தை விளையாட வந்த்து, அக்குழந்தை என் மனைவியிடம் பேசிக்கொண்டிருந்தவிதம் மிகுந்த ஆச்சர்யத்தையும் வேதனையும் அளித்தது. அவர்கள் வீட்டில் துணி துவைக்கும் ஒரு அம்மாவை ( அக்குழந்தையின் அம்மா வயதொத்தவர்கள்) நி, வா, போ, அவள், இவள், என்று ஒருமையில் பேசியது அக்குழந்தை. மேலும் இது குறித்து அக்குழந்தையிடம் அறிவுரை கூறியபோது அவள் வெறும் வண்ணாத்தி தான் மாமா அதுனால அப்படி சொல்றது தப்பில்லை எங்க மம்மி டாடி கூட அப்படிதான் சொல்றாங்க என்றது. திகைத்து போனேன், பெற்றோர்கள் மனிதர்களை மனிதர்களாக மதிக்க சொல்லிதருவதில்லை, மேலும் சிறுவயது முதலே அப்பிஞ்சு மனதில் ஜாதி வேற்றுமையை விதைக்கிறார்கள், மேலும் விஜய் டி.வி யில் வரும் நீயா நானா ? நிகழ்ச்சியில் ஒரு அம்மணி தன் வீட்டு காப்பாளரை அவன் இவன் என ஒரு media வில் விளித்தது மேலும் அதிர்ச்சிக்குள்ளக்கியது. அந்த அம்மணிக்கு ஒரு சிறு கேள்வி " நீ எல்லாம் இவ்வளவு படிச்சு வேலைக்கு போய் என்ன பிரயோஜனம் ? மனுசன மனுசனா மதிக்க தெரியல நீ எப்படி நல்ல தாயா நல்ல மனைவியா நல்ல குடிமகளா இருக்க போற தாயி ??" இந்த சமுகத்திற்க்கும் ஒரு சவுக்கடி குடுக்க வேண்டும். கீழ்மட்ட தொழில் செய்பவர்களான இப்பெருங்குடி மக்கள் இல்லாவிட்டால் நாறி விடுவீற்கள் நாறி! அதுக்காக தானட இன்னும் அவர்களை வளர விடாம வச்சிருக்கீங்க மெத்த படிச்ச மேதாவிகளா. தலைப்புக்கும் பதிவிக்கும் என்ன சம்மந்தம் என்று ஆராய்வதை விட்டுட்டு உங்களையும் உங்க வீட்டு குழந்தைகளையிம் check பண்ணுங்க சாமி. சிறு துளி பெருவெள்ளம் சாமி. உங்க கூட என்னையும் சேத்துகோங்க மக்கா :


|

  • Digg
  • Del.icio.us
  • StumbleUpon
  • Reddit
  • Twitter
  • RSS

0 Response to "குழந்தைகளின் கொலை !!!"

Post a Comment

உங்கள் கருத்துக்களை இங்கே கொட்டுங்கள் & தமிழில் தட்டச்சு செய்ய... இங்கே... செல்லுங்கள் ! (right click the link and select open in a new window)