யார் நிஜமா நல்லவன் ??? பாகம் 2
இப்படியே யோசிக்கும் போது நம்ம மக்கள் கிட்ட உதவி கேட்டா என்ன? என்ற நினைப்பு வர ஒவ்வொருத்தருக்கா கைபேசியில் அழைப்பு விடுத்தேன்.


முதலில் சிக்கியது நம்ம மங்களூர் சிவா :-
நான் :- ஹாலோ சிவா வா

ம.சிவா :- ஹலோ இளையகவி நான் கொஞ்சம் முக்கியமான மேட்டரா சென்னைல பேசிகிட்டு இருக்கேன் ஒரு 10 நிமிஷத்துல கூப்பிடுரேன் டொக்.....


உடனே சிவாவை எனிமி லிஸ்டுல சேத்துகிட்டு( பிகர பாத்தவுடன் பிரண்ட கலட்டிவிடுரவன் எனிமிதான)


இன்னோரு போண் இந்த் தடவ நம்ம சஞ்செய்


நான் :- ஹாலோ சஞ்செய் யா ?


சஞ்செய் :- சொல்லுக இளையகவி என்ன மேட்டர் ஓவர் நைட்ல VIP ஆகிட்டீங்க வாழ்த்துக்கள்


நான் :- ஏங்க வெந்த புண்ணுல வேல பாச்சிறீங்க ??
சஞ்செய் :- சொல்லுங்க என்ன மேட்டர்??
நான் :- ஒன்னும் இல்ல நிஜமா நல்லவன் யார்ன்னு தெரியனும் அவ்லோதான்
சஞ்செய் :- சாரி இளையகவி ஜீவிக்கு மேட்டர் தர பதிவு எழுதிகிட்டு இருக்கேன் இப்போ முடியாது டொக்....


வேற யாரக்கேட்டா பதில் கிடைக்கும்ன்னு தெரியாம போண்புக்கை புரட்டும் போது நம்ம வால்பையன் நம்பர் கிடைத்தது. ஓவர் டு வால்பையன்.


நான் :- ஹாலோ மச்சி
வால்பையன் :- ஹே மச்சான் சொல்றா எப்படீருக்க??
நான்:- நல்லாத்தான் இருகேன் ஒரு சின்ன மேட்டர் நிஜமா நல்லவன் யார்ன்னு தெரியனும் அவ்லோதான்
வால்பையன் :- அவ்ளோத்தான் மேட்டரா ரொம்ப ஈசி மச்சி, ஆனா இப்போ நான் கம்நாட்டி எக்ஸ்சேஞ்ல பிஸியா இருக்கேனே..


நான்:- என்னது கம்நாட்டி எக்ஸ்சேஞ்ஜா ?? என்னாட இது ஒரு புது வார்தை ஒன்னு சொல்லுறான். தமிழச்சி ஏதாவது பதிவு போட்டிருக்கா ? ஏன் இப்படி எல்லாம் பேசுறான்னு ப்யங்கர டவுட் ஆக.
நான் , மச்சி என்னாட அது கம்நாட்டி எக்ஸ்சேஞ்ன்னு கேக்க அவன் சிரிச்சிகிட்டே மச்சி அது கம்நாட்டி எக்ஸ்சேஞ் இல்லடா காமாடிட்டி எக்ஸ்சேஞ்ன்னு சொல்லி என்வயித்த்ல கூலா ஜிங்கரோவை வார்த்தான்


வால்பையன் : மச்சி இவ்ளோ நீ கேட்கிறதுனால நான் ஹெல்ப் பண்றேன் ஆனா ஒரு கன்டிசன். நாம 2 பேர் மட்டும் தேடினா கிடைக்கிர ஆளூ கிடையாது இந்த நிஜமா நல்லவன். அவரு பெரிய தீவிரவாதியாம், இன்டர் நேஷனல் அளவுல பல கரப்பான் பூச்சிகளை கொடுரமா கொன்ணு இருக்காறாமா அதுனால நாம ஒரு டீம் பார்ம் பண்ணி தேடுவோம். ஓகே மச்சி.
இதுக்கு ரொம்ப அனுபவம் வாய்ந்த பதிவர் படை ஓன்னு அமைக்கனும் மச்சி


நான் சில பேர சொல்றேன் நோட் பண்ணிக்கோ. இவங்களால மட்டும் தான் இந்த "ஆப்பு"ரேசனை வெற்றிகரமா முடிக்க முடியும்..

"ஆப்பு" ரேசன் Begins...... Start Music........


Photobucket
உங்க கூட என்னையும் சேத்துகோங்க மக்கா :


|

 • Digg
 • Del.icio.us
 • StumbleUpon
 • Reddit
 • Twitter
 • RSS

6 Response to "யார் நிஜமா நல்லவன் ??? பாகம் 2"

 1. வால்பையன் says:

  //இந்த நிஜமா நல்லவன். அவரு பெரிய தீவிரவாதியாம், இன்டர் நேஷனல் அளவுல பல கரப்பான் பூச்சிகளை கொடுரமா கொன்ணு இருக்காறாமா //

  மச்சி மூட்ட பூச்சிய விட்டுடியே!
  அத கொடூரமா நசுக்கி கொல்ரதுல நிஜமா நல்லவன் டாக்டர் பட்டம் வாங்கியிருக்கிறாராம்,

  வால்பையன்

 2. வால்பையன் says:

  இது பின்னூட்டங்களை மெயிலில் பெற

  வால்பையன்

 3. மங்களூர் சிவா says:

  மச்சி அந்த போட்டோல இருக்கறதுதான் அந்த தீவிரவாதியா???

 4. மங்களூர் சிவா says:

  /
  வால்பையன் said...

  இது பின்னூட்டங்களை மெயிலில் பெற

  வால்பையன்
  /

  ரிப்பீட்டேய்

 5. மங்களூர் சிவா says:

  செழித்த அழகில் சிவந்து நிற்கும் செந்தேனே,
  என் கழுத்து வரையில் ஆசை வந்து நின்றேனே
  வெறித்த கண்ணால் கணங்கள் விழுங்கும் பெண் மானே,
  உன் கனத்த கூந்தலின் காட்டிற்குள்ளே காணாமல் நான் போவேனே!
  இருதயத்தின் உள்ளே உலையொன்று கொதிக்க
  எந்த மூடி போட்டு நான் என்னை மறைக்க
  தொடட்டுமா தொல்லை நீக்க

 6. ஜிம்ஷா says:

  ///மங்களூர் சிவா said...
  செழித்த அழகில் சிவந்து நிற்கும் செந்தேனே,
  என் கழுத்து வரையில் ஆசை வந்து நின்றேனே
  வெறித்த கண்ணால் கணங்கள் விழுங்கும் பெண் மானே,
  உன் கனத்த கூந்தலின் காட்டிற்குள்ளே காணாமல் நான் போவேனே!
  இருதயத்தின் உள்ளே உலையொன்று கொதிக்க
  எந்த மூடி போட்டு நான் என்னை மறைக்க
  தொடட்டுமா தொல்லை நீக்க///
  அப்பப்பா. மங்களூர் சிவா, பெரிய கவிஞரா இருப்பாரு போலிருக்கே! நீங்கயெல்லாரும் சினிமாவில பாட்டு எழுதபோலாமோ இல்லையோ. அப்புறம் இந்த இளைய கவி(ஞர்)கிட்டேயே உங்க கவிதை பலிக்குமா?

Post a Comment

உங்கள் கருத்துக்களை இங்கே கொட்டுங்கள் & தமிழில் தட்டச்சு செய்ய... இங்கே... செல்லுங்கள் ! (right click the link and select open in a new window)