வேலை ஏய்ப்பு அலுவலகம் பாரீர் பாரீர்

ஏன் இந்த அவசரம்? அல்பத்தனம்? யாருடைய தவறு? சீனீயாரிட்டி என்ற பெயரில் நடக்கும் இந்த கிறுக்குத்தனத்திற்கு என்றுதான் முடிவு வருமோ? இதற்கு தீர்வுதான் என்ன? என்று தீவிரமாக யோசித்தேன்.
முதலாவதாக மாணவர்கள் பதிவு செய்ய அலுவலகத்திற்கு வர தேவையில்லை என்ற நிலையை ஏற்படுத்த வேண்டும். அரசு பள்ளி,கல்லூரிகளில் படித்தவர்களுக்கு மட்டுமே அரசு வேலை எனவும்,சம்பந்தப்பட்ட பள்ளி மற்றும் கல்லூரிகளே ஒவ்வொரு வருட முடிவிலும் தங்களுடைய மாணவர்களின் பட்டியலை அனுப்ப வேண்டும். சீனியாரிட்டி என்பது மதிப்பெண்கள் மற்றும் நன்னடத்தை, N.C.C,N.S.S போன்றவற்றில் ஆற்றிய சேவை ஆகியவற்றை பொறுத்தே வகைப்படுத்தப் பட வேண்டும். இதன் மூலமாவது இந்த அவவலம் தீர வேண்டும் என்பதே எனது (இதுவரை எம்ப்ளாய்மெண்ட் ஆபிசில் கால் வைக்காத பையனின்) விருப்பம்.
நன்றி :- வேலு பாரதி

//முதலாவதாக மாணவர்கள் பதிவு செய்ய அலுவலகத்திற்கு வர தேவையில்லை என்ற நிலையை ஏற்படுத்த வேண்டும். அரசு பள்ளி,கல்லூரிகளில் படித்தவர்களுக்கு மட்டுமே அரசு வேலை எனவும்,சம்பந்தப்பட்ட பள்ளி மற்றும் கல்லூரிகளே ஒவ்வொரு வருட முடிவிலும் தங்களுடைய மாணவர்களின் பட்டியலை அனுப்ப வேண்டும்//
குட் பாயிண்ட்!
அப்புறம் எல்லாரும் அரசு பள்ளிகளிலேயே படிக்கணும்னு வந்துடுவாங்க!
ஏழை பாழைங்களை கொஞ்சம் நினைச்சிப் பாருங்க! அங்கயாவது அவங்க படிக்கட்டும்!
பெரிய அளவுல டொனேசன் கொடுத்து படிக்கும் வள்ளல்கள் தனியார் பள்ளியிலேயே படிக்கட்டும்!